விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவியாக வருகிறது நிஸான் மேக்னைட்!

இந்தியாவின் மிகவும் விலை குறைவான சப்-காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக நிஸான் மேக்னைட் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த புதிய மாடல் பட்ஜெட் விலையில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவியாக வருகிறது நிஸான் மேக்னைட்!

இந்தியாவில் 4 மீட்டருக்கும் குறைவான ரகத்தில் உருவாக்கப்படும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இதனால், இந்த ரகத்தில் புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. இந்த வரிசையில், அடுத்ததாக நிஸான் மேக்னைட் எஸ்யூவி களமிறக்கப்பட உள்ளது.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவியாக வருகிறது நிஸான் மேக்னைட்!

அண்மையில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட இந்த புதிய எஸ்யூவி மாடல் அடுத்த மாதம் இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவியாக வருகிறது நிஸான் மேக்னைட்!

அதிக சந்தைப் போட்டி நிறைந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஒவ்வொரு நிறுவனமும் தங்களது தயாரிப்பை அதிக மதிப்புடையதாக நிலைநிறுத்தி வருகின்றன. அந்த வகையில், அதிக வசதிகளுடன் மிக குறைவான விலை கொண்டதாக மேக்னைட் எஸ்யூவியை நிலைநிறுத்த நிஸான் திட்டமிட்டுள்ளது.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவியாக வருகிறது நிஸான் மேக்னைட்!

அதாவது, நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் ஆரம்ப விலை ரூ.5.70 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சத்தையொட்டி நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட் உள்ளிட்ட அனைத்து காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களைவிட விலை குறைவான தேர்வாக நிஸான் மேக்னைட் கொண்டு வரப்படும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. அனைத்து வசதிகளும் கொண்ட டாப் வேரியண்ட் விலை ரூ.10 லட்சத்திற்குள் இருக்கும்.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவியாக வருகிறது நிஸான் மேக்னைட்!

ரெனோ - நிஸான் கூட்டணியின் CMF-A+ என்ற கட்டமைப்புக் கொள்கையின் கீழ்தான் இந்த புதிய நிஸான் மேக்னைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்படும் முதல் நிஸான் கார் மாடல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, விலை மிக சவாலாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவியாக வருகிறது நிஸான் மேக்னைட்!

விலை குறைவான கார் என்பதுடன் அதிக தொழில்நுட்ப வசதிகளை இந்த கார் வழங்கும். அதாவது, இந்த காரில் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன. இந்த காரில் 360 டிகிரி கேமரா வசதி, எலெக்ட்ரிக் சன்ரூஃப், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் உள்ளன.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவியாக வருகிறது நிஸான் மேக்னைட்!

இந்த புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி காரில் முன்பக்கத்தில் வலிமையான க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், L- வடிவிலான மிகப்பெரிய பகல்நேர விளக்குகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், பின்புறத்தில் ஸ்கிட் பிளேட்டுகள் என அதிக சிறப்பம்சங்களுடன் மிக வசீகரமாக இருக்கிறது.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவியாக வருகிறது நிஸான் மேக்னைட்!

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்பட உள்ளது உறுதியாகி இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரயைும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவியாக வருகிறது நிஸான் மேக்னைட்!

விலை குறைவான வேரியண்ட்டுகளில் திறன் குறைவான 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெறும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது. எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite Might Be Positioned Most Affordable Sub Compact SUV in India.
Story first published: Friday, October 30, 2020, 10:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X