புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!
புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. பட்ஜெட் விலையில் எஸ்யூவி வாங்க விரும்புவோரின் கவனத்தை புதிய நிஸான் மேக்னைட் ஈர்த்துள்ளது. விலை குறைவான தேர்வாக வந்தாலும், வசதிகளில் மிகச் சிறப்பானதாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த எஸ்யூவியில் வழங்கப்பட உள்ள வேரியண்ட்டுகள், அதில் இடம்பெறும் வசதிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுவிட்டன. புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி எக்ஸ்இ, எக்ஸ்எல், எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி பிரிமீயம் ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. அதில் இடம்பெறும் வசதிகள் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

நிஸான் மேக்னைட் எக்ஸ்இ
நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் மிக விலை குறைவான பேஸ் வேரியண்ட்டாக எக்ஸ்இ வர இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

புதிய நிஸான் மேக்னைட் எக்ஸ்இ வேரியண்ட்டில் ஹாலஜன் பல்புகளுடன் ஹெட்லைட்டுகள், 16 அங்குல ஸ்டீல் வீல்கள், பாடி கலர் கதவு கைப்பிடிகள், எல்இடி பகல்நேர விளக்குகளுக்கு பதிலாக க்ரோம் அலங்கார பூச்சு, சாம்பல் வண்ண அலங்காரத்துடன் கருப்பு வண்ண ஃபேப்ரிக் இருக்கைகள், 3.5 அங்குல எம்ஐடி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், மேனுவல் ஏசி சிஸ்டம், உட்புறத்திலிருந்து மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆன்ட்டி ரோல் பார், ரியர் பார்க்கிங் சென்சார் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

நிஸான் மேக்னைட் எக்ஸ்எல்
நடுத்தர வசதிகளுடன் கூடிய இந்த வேரியண்ட்டில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். 1.0 லிட்டர் சாதாரண பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலில் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

இந்த வேரியண்ட்டில் டியூவல் டோன் வீல் கவர்கள் கொண்ட 16 அங்குல சக்கரங்கள், இன்டிகேட்டர்கள் கொண்ட ரியர் வியூ மிரர்கள், புளூடூத், ஆக்ஸ் போர்ட், எம்பி3 சப்போர்ட் வசதியுடன் கூடிய ஆடியோ சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட்- ஸ்டாப் வசதி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ஓட்டுனர் பக்கத்திற்கு ஆட்டோ விண்டோ டவுன் வசதி, ஃபாஸ்ட் சார்ஜர், சென்ட்ரல் டோர் லாக்கிங் சிஸ்டம் வழங்கப்படும்.

இந்த வேரியண்ட்டின் 1.0 லிட்டர் டர்போ வேரியண்ட்டில் கூடுதலாக ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் ஆகிய வசதிகள் இடம்பெறும்.

நிஸான் மேக்னைட் எக்ஸ்வி
நிஸான் மேக்னைட் எக்ஸ்வி வேரியண்ட்டில் கூடுதலாக எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்கள், க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட கதவு கைப்பிடிகள், சில்வர் பூச்சுடன் கூடிய ஸ்கிட் பிளேட்டுகள், டியூவல் டோன் வண்ணக் கலவை, 8 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் முறையில் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை இணைக்கும் வசதி, வயர்லெஸ் சார்ஜர், ஏர் பியூரிஃபயர், எல்இடி ஸ்கஃப் பிளேட்டுகள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஜேபிஎல் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா, வெஹிக்கிள் டைனமிக் கன்ட்ரோல், ஐ-கீ ஆகிய வசதிகள் உள்ளன.

நிஸான் மேக்னைட் எக்ஸ்பி பிரிமீயம்
நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் மிகவும் விலை உயர்ந்த வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த வேரியண்ட்டில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், கருப்பு வண்ண இன்டீரியர் தீம், 360 டிகிரி கேமரா, லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், நிஸான் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை வழங்கப்படும்.

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி ரூ.5.50 லட்சம் முதல் ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்டதாக நிலைநிறுத்தப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ கார்களுக்கு நிகரானதாகவும், விலை குறைவான தேர்வாகவும் இருக்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








