புத்தம் புதிய காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் களமிறக்க நிஸான் திட்டம்!

இந்தியாவில் காம்பேக்ட் செடான் கார் மாடலை களமிறக்குவதற்கான திட்டத்தை நிஸான் கார் நிறுவனம் கையில் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் களமிறக்க நிஸான் திட்டம்!

ஜப்பானை சேர்ந்த நிஸான் கார் நிறுவனம் உலக அளவில் வர்த்தகத்தை சீரமைக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவில் 8 புதிய கார் மாடல்களை அடுத்த 4 ஆண்டுகளில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் களமிறக்க நிஸான் திட்டம்!

அதன்படி, இந்தியாவில் புதிய மிட்சைஸ் எஸ்யூவி காரும், பட்ஜெட் விலையில் புதிய செடான் கார் மாடலும் அறிமுகம் செய்ய இருப்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு போட்டியாக தனது எஸ்யூவியை நிலைநிறுத்துவதற்கு நிஸான் திட்டமிட்டுள்ளது.

காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் களமிறக்க நிஸான் திட்டம்!

மேலும், பட்ஜெட் விலையிலான செடான் கார் என்று நிஸான் குறிப்பிட்டு இருப்பது காம்பேக்ட் செடான் கார் மாடலாகவே கருதப்படுகிறது. ஏனெனில், இந்தியாவில் காம்பேக்ட் செடான் கார் மாடல்களுக்குத்தான் அதிக சந்தை வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே விற்பனையில் வைக்கப்பட்டு இருந்த சன்னி மிட்சைஸ் செடான் கார் போதிய வரவேற்பை பெறவில்லை.

காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் களமிறக்க நிஸான் திட்டம்!

எனவே, நிஸான் நிறுவனம் இந்தியாவுக்காக பிரத்யேகமாக 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்ட காம்பேக்ட் செடான் கார் மாடலை உருவாக்கும் திட்டத்தை கையில் வைத்துள்ளதாகவே கருதப்படுகிறது. மிட்சைஸ் எஸ்யூவியை தொடர்ந்து இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் மாடலை இந்தியாவில் நிஸான் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் களமிறக்க நிஸான் திட்டம்!

ரெனோ ட்ரைபர் உள்ளிட்ட மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ள ரெனோ - நிஸான் கூட்டணியின் சிஎம்எஃப்-ஏ பிளாட்ஃபார்மில் இந்த புதிய கார் மாடல் உருவாக்கப்படும் வாய்ப்புள்ளது. இந்த மோடுலர் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட ரெனோ ட்ரைபர் கார் 2,636 மிமீ வீல் பேஸ் பெற்றிருக்கிறது. அதே அளவில் வைத்து காம்பேக்ட் செடான் கார் மாடலை உருவாக்கினால், இதன் ரகத்தில் மிக அதிக வீல்பேஸ் கொண்டதாக இருக்கும்.

காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் களமிறக்க நிஸான் திட்டம்!

மேலும், மிட்சைஸ் செடான் கார்களுக்கு இணையான வீல்பேஸ் கொண்டதாகவும், உட்புறத்தில் மிக சிறப்பான இடவசதி கொண்ட காம்பேக்ட் செடான் கார் மாடலாகவும் இருக்கும். அதாவது, மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் நிஸான் சன்னி கார் மிகச் சிறப்பான இடவசதியை பெற்றிருந்தது. அதேபோன்றே, தனது காம்பேக்ட் செடான் காரை அதிக இடவசதியை முன்னிறுத்தி மார்க்கெட்டிங் செய்ய நிஸான் திட்டமிடலாம்.

காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் களமிறக்க நிஸான் திட்டம்!

நிஸான் காம்பேக்ட் செடான் கார் மாடலில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு கொடுக்கப்படும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு நிச்சயம் இடம்பெறும் நிலையில், ஏஎம்டி அல்லது சிவிடி என இரண்டு தேர்வுகளில் ஒன்று வழங்கப்படலாம். டீசல் மாடல் என்பது இருக்காது.

காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் களமிறக்க நிஸான் திட்டம்!

அடுத்த ஆண்டு துவக்கத்தில் வர இருக்கும் நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் இடம்பெறுவது போன்றே, இந்த காம்பேக்ட் செடான் காரில் எல்இடி பகல்நேர விளக்குகள், தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். ரூ.5 லட்சத்தில் தனது காம்பேக்ட் எஸ்யூவியை நிஸான் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, June 26, 2020, 10:30 [IST]
English summary
Japanese carmaker, Nissan is planning to launch compact sedan car in India.
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+