வாடிக்கையாளர், ஓட்டுனர் பாதுகாப்பிற்காக ரூ.500 கோடியை ஒதுக்கிய ஓலா டாக்சி!

ஒவ்வொரு பயணத்தையும் பாதுகாப்பாக மாற்றும் வகையில், கொரோனா தடுப்பு நடைமுறைகளுடன் கார்களை இயக்குவதற்காக ரூ.500 கோடியை ஒதுக்கி இருக்கிறது ஓலா டாக்சி நிறுவனம்.

வாடிக்கையாளர், ஓட்டுனர் பாதுகாப்பிற்காக ரூ.500 கோடியை ஒதுக்கிய ஓலா டாக்சி!

வாடகை கார் மார்க்கெட்டில் ஓலா டாக்சி நிறுவனம் முதன்மை வகிக்கிறது. பெருநகரங்களின் போக்குவரத்து சேவையிலும் ஓலா டாக்சி தவிர்க்க முடியாத அங்கமாகி உள்ளது. இந்த நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக, நிறுத்தப்பட்டு இருந்த டாக்சி சேவையை படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

வாடிக்கையாளர், ஓட்டுனர் பாதுகாப்பிற்காக ரூ.500 கோடியை ஒதுக்கிய ஓலா டாக்சி!

கொரோனா ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்டுள்ள 200 நகரங்களில் மீண்டும் டாக்சி சேவையை துவங்கி இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஓலா டாக்சி நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

வாடிக்கையாளர், ஓட்டுனர் பாதுகாப்பிற்காக ரூ.500 கோடியை ஒதுக்கிய ஓலா டாக்சி!

அதன்படி, வாடிக்கையாளர்களும், ஓட்டுனர்களும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை அமல்படுத்தப்பட உள்ளது. ரைடு சேஃப் இந்தியா என்ற பெயரிலான இந்த திட்டத்தின்படி, வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சிகளில் இறங்கி உள்ளது.

வாடிக்கையாளர், ஓட்டுனர் பாதுகாப்பிற்காக ரூ.500 கோடியை ஒதுக்கிய ஓலா டாக்சி!

இதற்காக, கார்களை 48 மணிநேரத்திற்கு ஒருமுறை கிருமிநீக்கம் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. இதற்காக, நாடு முழுவதும் 500 கிருமி நீக்க மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. அனைத்து கார்களும் இந்த மையங்களின் வாயிலாக சுத்தப்படுத்தப்படும்.

வாடிக்கையாளர், ஓட்டுனர் பாதுகாப்பிற்காக ரூ.500 கோடியை ஒதுக்கிய ஓலா டாக்சி!

காரின் கைப்பிடி, இருக்கைகள் உள்ளிட்ட இடங்களிலும் ரசாயனம் மூலமாக கிருமி நீக்க நடைமுறைகள் பின்பற்றப்படும். அதேபோன்று, ஓலா டாக்சி ஓட்டுனர்களுக்கும் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர், ஓட்டுனர் பாதுகாப்பிற்காக ரூ.500 கோடியை ஒதுக்கிய ஓலா டாக்சி!

வாடிக்கையாளர்களை ஏற்றிச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளித்து, அதற்கு சான்றும் வழங்கி சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஓட்டுனர்களுக்கு தினசரி உடல்வெப்ப அளவு சோதிக்கும் நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும்.

பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுவதற்கு ஏற்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதோடு, புதிய மொபைல்போன் செயலியையும் ஓலா அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீட்டை ஓலா செய்ய இருக்கிறது.

Most Read Articles
English summary
Indian's leading cab aggregator, Ola has announced its commitment of Rs 500 Crore to ensure the safety of both its customers and driver-partners. The company has launched a new initiative called 'Ride Safe India' which will introduce various initiatives during this year.
Story first published: Saturday, June 6, 2020, 13:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X