அப்பாடா... இனி ஓலா ஆட்டோவில் கொரோனா பயம் இல்லாமல் பயணிக்கலாம்

கொரோனா அச்சம் இல்லாமல் பயணிகளும், ஓட்டுனர்களும் செல்வதற்கான புதிய பாதுகாப்பு கவசத்தை தனது வாடகை ஆட்டோரிக்ஷாக்களில் கொடுத்து வருகிறது ஓலா டாக்சி நிறுவனம். அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

அப்பாடா... இனி ஓலா ஆட்டோவில் கொரோனா பயம் இல்லாமல் பயணிக்கலாம்

தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று சொல்லும் அளவுக்கு கொரோனா எப்படி வரும், எப்போது வரும் சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் கொடூரமான முறையில் மனிதர்களிடத்தில் பரவி உயிர்களை பலி வாங்கி வருகிறது. இது மனித குலத்திற்கே பெரும் ஆபத்தாக மாறி இருக்கிறது.

அப்பாடா... இனி ஓலா ஆட்டோவில் கொரோனா பயம் இல்லாமல் பயணிக்கலாம்

இதனால், மக்கள் வீட்டை வெளியில் செல்வதற்கே அச்சமான சூழல் உருவாகி உள்ளது. ஆனால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கும், அலுவலகம் மற்றும் இதர முக்கிய பணிகளுக்கும் வெளியில் செல்லும் கட்டாயத்தில் பலர் உள்ளனர்.

அப்பாடா... இனி ஓலா ஆட்டோவில் கொரோனா பயம் இல்லாமல் பயணிக்கலாம்

இந்த நிலையில், பொது போக்குவரத்து சேவைகள் முடங்கி இருக்கும் நிலையில், தற்போது ஆட்டோரிக்ஷாக்கள்தான் பலரின் மலிவு கட்டண போக்குவரத்து சாதனமாக இருந்து வருகிறது. குறிப்பாக, ஓலா உள்ளிட்ட நிறுவனங்களின் ஆட்டோரிக்ஷா சேவை மிக சரியான கட்டணத்தில் கிடைப்பதால், அதனை பயன்படுத்துவது தவிர்க்க இயலாத விஷயமாக மாறி உள்ளது.

அப்பாடா... இனி ஓலா ஆட்டோவில் கொரோனா பயம் இல்லாமல் பயணிக்கலாம்

இந்த நிலையில், ஆட்டோரிக்ஷாவில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியாமல் பயணிப்பவர்கள் அல்லது ஓட்டுனர் மூலமாக மிக எளிதாக பிறருக்கு பரவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், ஆட்டோரிக்ஷாக்களை பயன்படுத்துவதிலும் மக்களுக்கு அச்சம் இருந்து வருகிறது.

அப்பாடா... இனி ஓலா ஆட்டோவில் கொரோனா பயம் இல்லாமல் பயணிக்கலாம்

இந்த அச்சத்தை போக்கி கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் வகையில் புதிய தடுப்பு முறையை தனது ஆட்டோரிக்ஷாக்களில் வழங்கி வருகிறது ஓலா டாக்சி நிறுவனம்.

அப்பாடா... இனி ஓலா ஆட்டோவில் கொரோனா பயம் இல்லாமல் பயணிக்கலாம்

அதாவது, ஓட்டுனருக்கும் பின்புற பயணிகள் இருக்கைக்கு இடையில் பாலீதின் கவர் மூலமாக தடுப்பு கொடுக்கப்படுகிறது. இதனால், பயணிகள் அல்லது ஓட்டுனர் மூலமாக பயணிப்போருக்கு கொரோனா பாதிப்பு எளிதாக பரவுவதை தவிர்க்க முடியும்.

அப்பாடா... இனி ஓலா ஆட்டோவில் கொரோனா பயம் இல்லாமல் பயணிக்கலாம்

அதேபோன்று, 48 மணிநேரத்திற்கு ஒருமுறை ஆட்டோரிக்ஷாவை முழுமையாக கிருமி நாசினி மூலமாக தூய்மைபடுத்துவதும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், ஆட்டோரிக்ஷாவில் கொரோனா வைரஸ் இருந்தாலும் அழிக்கப்பட்டுவிடும்.

அப்பாடா... இனி ஓலா ஆட்டோவில் கொரோனா பயம் இல்லாமல் பயணிக்கலாம்

மேலும், ஆட்டோரிக்ஷாவில் ஏறும் பயணி மற்றும் ஓட்டுனர் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டியதும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, ஐந்து அடுக்கு பாதுகாப்பு தடுப்பு முறைகளுடன் ஆட்டோரிக்ஷாக்களை இயக்க வேண்டும் என்று ஓட்டுனர்களை ஓலா டாக்சி நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

Most Read Articles

English summary
Bengaluru based cab aggregator has announced that all Ola Autos on their platform will be fitted with a protective partition between the driver and the passenger seat in order to promote social distancing and to keep all travellers safe.
Story first published: Thursday, June 25, 2020, 20:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X