ஆட்டி படைக்கும் கொரோனா... ஓலா பகிர்வு பயணத்திற்கு தற்காலிக மூடு விழா...

பேயாட்டத்தால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நாட்டில் பல சேவைகளை முடங்கும் நிலைக்கு தள்ளி வருகின்றது. அதன்படி, ஓலாவின் பகிர்வு சேவைக்கு தற்போது மூடுவிழா வழங்குவதற்கும் இந்த கொரோனோ காரணமாகியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆட்டி படைக்கும் கொரோனா... ஓலா பகிர்வு பயணத்திற்கு தற்காலிக மூடு விழா...

நாட்டின் பொது போக்குவரத்து சேவையில் மிகப் பெரிய பங்கினை ஓலா நிறுவனத்தின் வாடகை வாகனங்கள் பங்கு வகித்து வருகின்றன. இந்நிறுவனம், பல படிநிலைகளில் அதன் வாடகை வாகன சேவையை இந்தியாவில் செயல்படுத்தி வருகின்றது.

ஆட்டி படைக்கும் கொரோனா... ஓலா பகிர்வு பயணத்திற்கு தற்காலிக மூடு விழா...

அந்தவகையில், அந்நிறுவனம் செயல்படுத்தி வரும் பிரபலமான சேவைகளில் ஒன்றுதான் ஓலா ஷேர் ரைடு. இது, ஒரே இலக்கை நோக்கிச் செல்லும் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை, அதாவது யாரென்றே அறியாத நபர்களுடன் ஷேர் ஆட்டோக்களைப் போன்று அழைத்துச் சென்று சேர்க்கும் சேவை ஆகும். ஆனால், ஷேர் ஆட்டோவைப் போல் இது கூட்ட நெரிசல் இருக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆட்டி படைக்கும் கொரோனா... ஓலா பகிர்வு பயணத்திற்கு தற்காலிக மூடு விழா...

இந்த சேவையை ஓலா நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த அதிரடி முடிவிற்கு கொரோனா வரைஸின் தீவிர தொற்றே முக்கிய காரணமாக இருக்கின்றது. கோவிட்-19 என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கொடிய வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

குறிப்பாக, இந்த வைரஸ் தொற்றினால் இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய எண்ணிக்கையை எட்டி வருகின்றது.

ஆட்டி படைக்கும் கொரோனா... ஓலா பகிர்வு பயணத்திற்கு தற்காலிக மூடு விழா...

இதன்படி, வெளியாகியுள்ள தகவலின்படி இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிகாமானோர் கொரோனா தொற்றால் இறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அதிர்ச்சி மிகுந்த உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன்காரணமாக, உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளன.

ஆட்டி படைக்கும் கொரோனா... ஓலா பகிர்வு பயணத்திற்கு தற்காலிக மூடு விழா...

குறிப்பாக, பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் ஒவ்வொரு நாடும் மிக தீவிரமாக இருக்கின்றது. இதனடிப்படையில், நாட்டின் மிக முக்கியமான பொது தளங்களாக கருதப்படும் கோவில், சுற்றுலாத்தளங்கள், திரையரங்குகள், அங்காடிகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்டி படைக்கும் கொரோனா... ஓலா பகிர்வு பயணத்திற்கு தற்காலிக மூடு விழா...

இந்நிலையிலேயே, கொரோனோ தொற்று தன் சேவை மூலம் பரவக் கூடாது என்ற நோக்கில் ஓலா, அதன் ஷேர் சேவையை தற்காலிமாக நிறுத்தி வைத்திருக்கின்றது. ஓலாவின் இந்த சேவையானது அதிக கட்டணத்தைக் குறைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றது. அதாவது, ஒரே இலக்கை நோக்கி பயணிக்கும் வெவ்வேறு நபர்கள் அதிக தொகையில் செல்வதற்கு பதிலாக, இணைந்து சென்று பாதிக்கு பாதி கட்டணத்தை செலுத்த இந்த வசதி உதவும்.

ஆட்டி படைக்கும் கொரோனா... ஓலா பகிர்வு பயணத்திற்கு தற்காலிக மூடு விழா...

இதனால், இந்தியர்கள் மத்தியில் இந்த சேவைக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. ஆனால், கொரோனாவின் பேயாட்டத்தால் ஓலாவின் இந்த சிறப்பான சேவைக்கும் தற்போது தற்காலிக முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலங்களாக அதாவது கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து வாடகை வாகன சேவை அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. மக்களின் நடமாட்டம் முற்றிலுமாக குறைந்ததே இதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஆட்டி படைக்கும் கொரோனா... ஓலா பகிர்வு பயணத்திற்கு தற்காலிக மூடு விழா...

எனவே, வாடகை வாகன ஓட்டுநர்களின் நிலை சற்றே கவலைக்கிடமாக மாறியிருக்கின்றது. மேலும், அவர்களின் பொருளாதார நிலை கேள்விக்குறியாக மாறியிருக்கின்றது. ஒவ்வொரு நபரின் மனதிலும் கொரனோ குறித்த அச்சம் கோளோச்சி நிற்கின்றது.

ஆட்டி படைக்கும் கொரோனா... ஓலா பகிர்வு பயணத்திற்கு தற்காலிக மூடு விழா...

இருப்பினும், ஒரு சிலர் சாலையில் சுற்றி திரிந்த வண்ணம் இருக்கின்றனர். அரசு விழிப்புணர்வுகளைக் கடைபிடித்தாலே, கொரோனாவின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

ஆட்டி படைக்கும் கொரோனா... ஓலா பகிர்வு பயணத்திற்கு தற்காலிக மூடு விழா...

குறிப்பாக, வெளியேச் சென்று வந்த பின்னர் குளித்தல் அல்லது கை மற்றும் கால்களை நன்கு சோப்பு போட்டு சுத்தமாக கழுவுதல் செய்தல் வேண்டும். தொடர்ந்து, கொரோனா தொற்று சுவாச மண்டலங்களின் வழியே அதிகம் பரவுவதல் முகமூடி அல்லது கை குட்டைகளால் மூக்கு, வாய் போன்றவற்றை மூடியிருத்தல் அவசிம்.

இதுமட்டுமின்றி, நமக்கு முன்பாக ஒரு நபர் இரும்பினாலோ அல்லது தும்பினாலோ அவர்களிடையே சற்று இடைவெளிவிட்டு நிற்பது மிக மிக அவசியமாக இருக்கின்றது.

ஆட்டி படைக்கும் கொரோனா... ஓலா பகிர்வு பயணத்திற்கு தற்காலிக மூடு விழா...

இவ்வாறு குறிப்பிட்ட சில நடைமுறைகளைப் பயன்படுத்தினாலே கொரோனோ தொற்றை வேரோடு நம்மால் அகற்ற முடியும். இத்துடன், நாம் வசிக்கும் இருப்பிடத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதன் மூலம் மற்றவர்களுக்கும் எந்தவொரு நோய் தொற்று ஏற்படுவதையும் தடுக்க முடியும்.

ஆட்டி படைக்கும் கொரோனா... ஓலா பகிர்வு பயணத்திற்கு தற்காலிக மூடு விழா...

இதை விட மிக முக்கியமாக வெளியே சுற்றுவதை தவிர்ப்பது மிக மிக அவசியமாக இருக்கின்றது. இதன்காரணமாகவே, ஓலா போன்ற சில நிறுவனங்கள் சில குறிப்பிட்ட சேவைகளுக்கு தற்காலிக மூடு விழாக்களைச் செய்து வருகின்றன.

அதேசமயம், ஓலாவின் மற்ற சேவைகளான மைக்ரோ, மினி மற்றும் பிரைம் உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: ET Auto

More from DriveSpark

Article Published On: Saturday, March 21, 2020, 12:51 [IST]
English summary
Ola Call Taxi Temporarily Stop Shared Ride. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+