விலையுயர்ந்த சொகுசு காரை விற்கும் இந்திய தடகள வீராங்கனை... இவங்களுக்கே இப்படி ஒரு நிலமையா..?

இந்திய விளையாட்டு வீராங்கனை துத்தி சந்த் தனது விலையுயர்ந்த சொகுசு காரை விற்பனைச் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணத்தைக் கீழே காணலாம்.

விலையுயர்ந்த சொகுசு காரை விற்கும் இந்திய தடகள வீராங்கனை... இவங்களுக்கே இப்படி ஒரு நிலமையா...?

உலகையே அச்சுறுத்தி வரும் ஒற்றை உயிர் கொல்லி வைரஸ் கொரோனா ஒட்டுமொத்த மனித இனத்தின் வாழ்க்கையுமே தலை கீழாக புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த வைரசால் ஏற்பட்ட மற்றும் ஏற்பட்டு வரும் இழப்புகள் ஏராளம். குறிப்பாக, இந்த வைரஸ் மனிதர்களின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி நிதிநிலையையும் கடுமையாக பாதிப்படையச் செய்து வருகின்றது.

விலையுயர்ந்த சொகுசு காரை விற்கும் இந்திய தடகள வீராங்கனை... இவங்களுக்கே இப்படி ஒரு நிலமையா...?

இதனால் தினக் கூலி தொழிலாளர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதரமும் கேள்விக் குறியாகியுள்ளது. இந்த நிலை ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமின்றி ஒரு சில நடுத்தர வர்த்தகத்தினருக்கும் உருவாகியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

அந்தவகையில், தன்னுடைய விலையுயர்ந்த காரை விற்பனைச் செய்யும் சூழ்நிலை இந்திய தடகள வீராங்கனை ஒருவருக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

விலையுயர்ந்த சொகுசு காரை விற்கும் இந்திய தடகள வீராங்கனை... இவங்களுக்கே இப்படி ஒரு நிலமையா...?

முன்னதாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சூப்பர் கார் பந்தய பெண் வீராங்கனை ஒருவருக்கும் இதேபோன்ற நிலைதான் ஏற்பட்டது. கொரோனாவால் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலை காரணமாக இவரது வாழ்க்கப் பாதையே முற்றிலுமாக மாறியது. அதாவது, கொரோனாவால் உருவான நிதிநிலையைப் போக்குவதற்கு அவருடைய கேரியரையே மாற்றிக் கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். இதற்காக அவர் தேர்வு செய்த வழி 18 பிளஸ் (ஆபாச படம்) திரைப்படங்கள் ஆகும்.

விலையுயர்ந்த சொகுசு காரை விற்கும் இந்திய தடகள வீராங்கனை... இவங்களுக்கே இப்படி ஒரு நிலமையா...?

இவ்வாறு பலரின் வாழ்க்கையில் இந்த கொரோனா அதிரடி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில்தான் இந்திய தடகள விளையாட்டு வீராங்கனையான துத்தி சந்த் என்பவருக்கும் கொரோனா வைரஸ் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால், இவர் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக தன்னிடம் இருக்கும் விலையுயர்ந்த காரை விற்பனைச் செய்ய முடிவு செய்துள்ளார்.

விலையுயர்ந்த சொகுசு காரை விற்கும் இந்திய தடகள வீராங்கனை... இவங்களுக்கே இப்படி ஒரு நிலமையா...?

கொரோனா வைரஸ் பரவல் தற்போது காட்டுத் தீயைவிட பல மடங்கு வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. இதனால், புது முக வாகனங்களின் அறிமுகம் மட்டுமின்றி வாகனங்கள் சார்ந்த நடைபெறும் அனைத்து செயல்களுக்குமே தடை ஏற்பட்டுள்ளது. அதாவது, பந்தயம், கண்காட்சி உள்ளிட்ட அனைத்துச் செயல்பாட்டுக்குமே தற்காலிக தடை அளிக்கப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த சொகுசு காரை விற்கும் இந்திய தடகள வீராங்கனை... இவங்களுக்கே இப்படி ஒரு நிலமையா...?

இதனால், இதைச் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்த நபர்களின் வாழ்வாதரமும் கேள்விக் குறியாக மாறியிருக்கின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், ஸ்பான்சர்ஸ் செய்வதற்கு நிறுவனங்கள் முன் வராத காரணத்தால் பல வீரர்களின் நிலை மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு எடுத்துக் காட்டே ஆஸ்திரேலியா ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுநர் ரெனீ கிரேசி (ஆபாச திரைப்பட நடிகையாக மாறியவர்) மற்றும் இந்திய தடகள வீராங்கனை துத்தி சந்த்.

விலையுயர்ந்த சொகுசு காரை விற்கும் இந்திய தடகள வீராங்கனை... இவங்களுக்கே இப்படி ஒரு நிலமையா...?

துத்தி சந்த் தற்போது தனது 3 செரீஸ் பிஎம்டபிள்யூ செடான் ரக காரை விற்பனைச் செய்ய முடிவு செய்துள்ளார். இதன்மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தன்னுடைய பயிற்சிக்காகவும், தனக்கு பயிற்சியளிப்பவர்களுக்கு ஊதியம் வழங்கவும் பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

விலையுயர்ந்த சொகுசு காரை விற்கும் இந்திய தடகள வீராங்கனை... இவங்களுக்கே இப்படி ஒரு நிலமையா...?

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, "இந்த காரை 30 லட்சங்கள் கொடுத்து வாங்கினேன். இதனை பராமரிப்பது தற்போது கேள்விக் குறியாக மாறியுள்ளது. கூடுதலாக இதனை பார்க் செய்யக்கூட என்னிடம் பாதுகாப்பான இடம் இல்லை. என்னிடம் ஏற்கனவே இரு கார்கள் இருக்கின்றன. எனவே, இதை வைத்திருப்பது சற்று சிரமமாக மாறியிருக்கின்றது. ஆகையால் தான் இதை விற்க முடிவெடுத்துள்ளேன்" என்றார்.

விலையுயர்ந்த சொகுசு காரை விற்கும் இந்திய தடகள வீராங்கனை... இவங்களுக்கே இப்படி ஒரு நிலமையா...?

இதனை தி ஹிந்து ஆங்கில தளத்திற்கு அண்மையில் அளித்த போட்டியின்போது தடகள விளையாட்டு வீராங்கனை துத்தி சந்த் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "என்னுடைய டயட்டிற்காக ஒரு மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை எனக்கு செலவாகின்றது. இதில், என்னுடைய டயட் மற்றும் உடல் நலத்தைக் காக்கும் பயிற்சியாளரின் ஊதியமும் அடங்கும். எனவே, தற்போது எனக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து என்னால் சமாளிக்க முடியவில்லை. ஆகையால், காரை விற்க இதுவும் ஓர் காரணம்" என தெரிவித்தார்.

விலையுயர்ந்த சொகுசு காரை விற்கும் இந்திய தடகள வீராங்கனை... இவங்களுக்கே இப்படி ஒரு நிலமையா...?

துத்தி சந்த் இந்தியாவிற்காக பல போட்டிகளில் கலந்துக் கொண்டு பதக்கங்களை வென்றவர் ஆவார். இவர் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்று தந்தார். தற்போது டோக்யோ ஒலிம்பிற்காக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

விலையுயர்ந்த சொகுசு காரை விற்கும் இந்திய தடகள வீராங்கனை... இவங்களுக்கே இப்படி ஒரு நிலமையா...?

ஆனால், கொரோனாவால் பல ஸ்பான்சர்கள் தங்களின் நிதியுதவியை நிறுத்தியுள்ளனர். இதனால் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் துத்தி சந்த் தனது தெலங்கானா பதிவு கொண்ட பிஎம்டபிள்யூ காரை கணிசமான தொகைக்கு விற்பனைச் செய்து பயிற்சியைத் தொடர இருக்கின்றார். அதாவது, தனது ஒலிம்பிக் கனவை நிறைவேற்ற சொகுசு காரையே விற்கும் நிலைக்கு துத்தி சந்த் வந்துள்ளார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Olympic Sprinter Dutee Chand BMW For Sale. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X