ஒரு நாள் முழுவதையும் காருக்குள்ளேயே செலவிட்ட பிரபல விளையாட்டு வீரர்... அட இதுதான் காரணமா?

பிரபல விளையாட்டு வீரர் ஒரு நாள் முழுவதையும் காருக்குள்ளேயே செலவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதற்காக விளையாட்டு வீரர் அப்படிச் செய்தார் என்பது பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம்.

ஒரு நாள் முழுவதையும் காருக்குள்ளேயே செலவிட்ட பிரபல விளையாட்டு வீரர்... அட இதுதான் காரணமா?

தொழிலதிபர்களுக்கு இணையான ஆடம்பரம் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கு உரியவர்களே விளையாட்டு வீரர்கள். மிக தெளிவாக கூற வேண்டுமானால், தொழிலதிபர்களைக் காட்டிலும் அதிக ஆடம்பர வாழ்க்கையை வாழுகின்ற அளவிற்கும் உலகில் விளையாட்டு வீரர்கள் இருக்கின்றனர். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் கால்பந்து விளையாட்டு வீரர் ரொனால்டோ போன்றோரே.

ஒரு நாள் முழுவதையும் காருக்குள்ளேயே செலவிட்ட பிரபல விளையாட்டு வீரர்... அட இதுதான் காரணமா?

கோடிகளில் புரலும் இவர்கள் சொந்த பயன்பாட்டிற்காக தனி விமானங்களைப் பயன்படுத்துமளவிற்கு வீரியமிக்க பணக்காரர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில்தான் பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் விரைவில் வாங்கவிருக்கும் புதிய கார் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரே அந்த விளையாட்டு ஆவார்.

ஒரு நாள் முழுவதையும் காருக்குள்ளேயே செலவிட்ட பிரபல விளையாட்டு வீரர்... அட இதுதான் காரணமா?

இவர்தான் விரைவில் புதிய காரை வாங்கவிருக்கின்றார். இதற்காக சமீபத்தில் தனது சமூக வலைதளம் வாயிலாக தனது ரசிகர்களிடம் பரிந்துரையைக் கோரியிருந்தனர். தனக்கு எந்த கார் வாங்கினால் சிறப்பானதாக இருக்கும்?, என கேட்டிருந்தார். இதனடிப்படையில் சிலர் ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் எஸ்யூவி காரான டக்சன் மாடலை பரிந்துரைச் செய்தனர்.

ஒரு நாள் முழுவதையும் காருக்குள்ளேயே செலவிட்ட பிரபல விளையாட்டு வீரர்... அட இதுதான் காரணமா?

இந்த நிலையிலேயே ஹூண்டாய் டக்சன் எப்படி இருக்கின்றது என்பதை ஆராய்வதற்காக அதில் நாள் முழுக்க பயணித்துள்ளார் சோயிப் அக்தர். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை சோயிப் அக்தரே, அவருடைய யுட்யூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதுவே தற்போது அவருடைய ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

ஒரு நாள் முழுவதையும் காருக்குள்ளேயே செலவிட்ட பிரபல விளையாட்டு வீரர்... அட இதுதான் காரணமா?

தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் தன்னுடைய தயாரிப்புகளை விற்பனைச் செய்து வருகின்றது. அந்தவகையில், நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் ஹூண்டாய் குறிப்பிட்ட சில மாடல்களை விற்பனையில் ஈடுபடுத்தி வருகின்றது. அதில் ஒன்றே டக்சன் பிரீமியம் எஸ்யூவி ரக கார்.

ஒரு நாள் முழுவதையும் காருக்குள்ளேயே செலவிட்ட பிரபல விளையாட்டு வீரர்... அட இதுதான் காரணமா?

இக்கார், இந்தியாவில் ஜீப் காம்பஸ் போன்ற அதிக சொகுசு வசதிகள் நிறைந்த எஸ்யூவி கார்களுடன் போட்டியளிக்கும் வகையில் விற்பனையில் களமிறக்கப்பட்டுள்ளது. இதேபோன்றுதான் பாகிஸ்தானிலும் குறிப்பிட்ட சில சொகுசு கார்களுடன் டக்சன் போட்டியிட்டு வருகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே இக்காரைத் தேர்வு செய்வதற்காக சோயிப் அக்தர் ஒரு நாள் முழுவதையும் அந்த காரிலேயே செலவு செய்திருக்கின்றார்.

ஒரு நாள் முழுவதையும் காருக்குள்ளேயே செலவிட்ட பிரபல விளையாட்டு வீரர்... அட இதுதான் காரணமா?

ஹூண்டாய் டக்சன் ஓர் பிரீமியம் கார் என்பதால் அக்கார் எந்த விதத்திலும் குறைச்சலின்றிக் காணப்படுகின்றது. குறிப்பாக, காரின் தோற்றம் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. எல்இடி ஹெட்லேம்ப், டிஆர்எல் மின் விளக்குகள், அகலமான கிரில் மற்றும் பெரிய உருவம் உள்ளிட்டவை முரட்டுத்தனமான கவர்ச்சியை அதற்கு வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

ஒரு நாள் முழுவதையும் காருக்குள்ளேயே செலவிட்ட பிரபல விளையாட்டு வீரர்... அட இதுதான் காரணமா?

இதேபோன்று, காரின் உட்புறத்திலும் பல மனம் கவர் வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பனோரமிக் சன்ரூஃப், ஒயர்லெஸ் சார்ஜிங் பாயிண்ட், அதிக இடவசதி, தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன. மேற்கூறிய இந்த வசதிகளே போதும் அக்தர் சோயிப்பைக் கவர.

ஒரு நாள் முழுவதையும் காருக்குள்ளேயே செலவிட்ட பிரபல விளையாட்டு வீரர்... அட இதுதான் காரணமா?

எஞ்ஜின் திறனிலும் ஹூண்டாய் டக்சன் அட்டகாசமான வாகனமாக இருக்கின்றது. ஆம், இக்கார் அனைத்து வீல்கள் இயங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. 2.0 லிட்டர், பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் ஆகிய இரு தேர்வுகளிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், பெட்ரோல் எஞ்ஜின் 152 பிஎஸ் பவரையும், டீசல் எஞ்ஜின் 185 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும் திறன்களைக் கொண்டிருக்கின்றன.

ஒரு நாள் முழுவதையும் காருக்குள்ளேயே செலவிட்ட பிரபல விளையாட்டு வீரர்... அட இதுதான் காரணமா?

இதேபோன்று, டீசல் எஞ்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸிலும், பெட்ரோல் எஞ்ஜின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனிலும் கிடைக்கின்றது. இந்த அம்சங்கள் அனைத்தும் சேர்ந்து சோயிப்பை அதிகம் கவர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையே தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவில் அக்தர் கூறுகின்றார்.

இந்த ஈர்ப்பிற்கு எச்டிஆர்ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பொத்தான் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய டிரைவர் இருக்கை உள்ளிட்ட எக்சக்க அம்சங்களை டக்சன் பெற்றிருப்பதும் ஓர் காரணமாக அமைந்துள்ளது. இக்கார் இந்தியாவில் ரூ. 22.30 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Pakistan Fast Bowler Shoaib Akhtar Spent On Day In Hyundai Tucson: Here Is Why?. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X