நீடிக்கும் மர்மம்! டாடா சஃபாரியில் வந்த விகாஸ்! மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி? எங்கேயோ உதைக்குதே

ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர்குறித்து பல்வேறு மர்மங்களும், சர்ச்சைகளும் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், புதிதாக கிளம்பிய மர்மமான தகவலை பற்றி இந்த பதிவில் காணலாம்.

நீடிக்கும் மர்மம்! டாடா சஃபாரியில் வந்த விகாஸ்... மஹிந்திரா டியூவி 300க்கு மாறியது எப்படி? எங்கேயோ உதைக்குதே!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் உள்ள பிக்ரு கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் துபே. இவரைதான் போலீஸார் தற்போது என்கவுண்டர் செய்திருக்கின்றனர்.

பார்ப்பதற்கு பால் வடியும் முகத்தை வைத்திருக்கும் இவர் மீது 60-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உபி காவல்துறை வட்டாரம் தெரிவிக்கின்றது.

நீடிக்கும் மர்மம்! டாடா சஃபாரியில் வந்த விகாஸ்... மஹிந்திரா டியூவி 300க்கு மாறியது எப்படி? எங்கேயோ உதைக்குதே!

ஆட்கடத்தல், கொலை மற்றும் கொலை முயற்சி என பல வழக்குகள் இவர் மீது இருக்கின்றன. இந்த நிலையில்தான் புதிதாக எழும்பிய புகாரின் அடிப்படையில் கடந்த 2ம் தேதி 20-க்கும் மேற்பட்ட போலீஸார் விகாஸ் துபேவை கைது செய்வதற்காக அவர் பதுங்கியிருந்த பிக்ரு கிராமத்திற்கு விரைந்தனர்.

நீடிக்கும் மர்மம்! டாடா சஃபாரியில் வந்த விகாஸ்... மஹிந்திரா டியூவி 300க்கு மாறியது எப்படி? எங்கேயோ உதைக்குதே!

இதனை, தனது போலீஸ் கூட்டாளியின் மூலம் முன் அறிந்துக் கொண்டே விகாஸ், அவர் பதுங்கியிருந்த கிரமாத்தை ஒட்டுமொத்தமாக அவர் வசம் கொண்டு வந்தார். மேலும், ஏற்கனவே போலீஸாரிடத்தில் இருந்து திருடிய அதி நவீன துப்பாக்கிகளைக் கொண்டு தன்னைப் பிடிக்க வந்த போலீஸார்களை சரமாரியாக சுட்டுத் தாக்கினார்.

நீடிக்கும் மர்மம்! டாடா சஃபாரியில் வந்த விகாஸ்... மஹிந்திரா டியூவி 300க்கு மாறியது எப்படி? எங்கேயோ உதைக்குதே!

இந்த சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்ட விகாஸின் கூட்டாளிகள் இந்த ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது. இவர்களின் தாக்குதலில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா உட்பட 8 போலீஸார்கள் சம்பவ இடத்திலேயே துப்பாக்கி குண்டுகள் துளைக்க பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

நீடிக்கும் மர்மம்! டாடா சஃபாரியில் வந்த விகாஸ்... மஹிந்திரா டியூவி 300க்கு மாறியது எப்படி? எங்கேயோ உதைக்குதே!

நாட்டின் ஒரு பகுதியில், அப்பாவி மக்கள் (கடைக்காரர்கள்) மீது விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்தல், கொலை என அதிகார அத்துமீறலில் போலீஸார்களின் கரம் ஓங்கி நிற்கின்றது. அதேசமயம், வட மாநிலங்களில் அதிக அதிகாரங்களைக் கொண்ட போலீஸார்கள்மீதே ரவுடிகள் தாக்குதலை நிகழ்த்துவது மற்றும் துப்பாக்கி சூடு வரை நிகழ்த்துவது சர்ச்சையை கிளப்பும் வகையில் இருக்கின்றது.

நீடிக்கும் மர்மம்! டாடா சஃபாரியில் வந்த விகாஸ்... மஹிந்திரா டியூவி 300க்கு மாறியது எப்படி? எங்கேயோ உதைக்குதே!

எனவே, உபி அரசுக்கு இந்த சம்பவம் பெரும் தலைவலியாக அமைந்தது. எனவே, ரவுடி விகாஸ் துபேவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான போலீஸார்கள் பல குழுக்களாக பிரிந்து உபி, மத்தியபிரேசம், ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களில் தேடுதல் வேட்டையை நடத்தினர். இவரின் (விகாஸ் துபே) தலைக்கு ரூ. 5 லட்சம் வரை பரிசு அறிவிக்கப்பட்டது.

நீடிக்கும் மர்மம்! டாடா சஃபாரியில் வந்த விகாஸ்... மஹிந்திரா டியூவி 300க்கு மாறியது எப்படி? எங்கேயோ உதைக்குதே!

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் பகுதியில் இருக்கும் மஹாகாலேஷ்வர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தபோது விகாஸ் துபேவைக் கைது செய்ததாக செய்திகள் வெளியாகின. அப்போது, அவரை போலீஸாரின் வாகனத்தில் ஏற்ற முயற்சித்தப்போது மிரட்டும் தொனியில் பேசியதாகவும் கூறப்பட்டது.

நீடிக்கும் மர்மம்! டாடா சஃபாரியில் வந்த விகாஸ்... மஹிந்திரா டியூவி 300க்கு மாறியது எப்படி? எங்கேயோ உதைக்குதே!

இதைத்தொடர்ந்து, மத்திய பிரதேசத்தில் இருந்து உபி, கான்பூருக்கு சிறப்பு வாகனம் மூலம் விகாஸ் துபேவை போலீஸார் அழைந்து வந்தனர். இதன் பின்னர் அரங்கேறிய சம்பவங்கள் அனைத்தும் மர்மமாகவே இருக்கின்றன. ஆம், விகாஸ் துபேவை அழைத்து வந்த ஊடக வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீஸார், தங்களை பின் தொடர வேண்டாம் விரட்டியிருக்கின்றது. இந்த நிலையிலேயே விகாஸ் துபே போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

நீடிக்கும் மர்மம்! டாடா சஃபாரியில் வந்த விகாஸ்... மஹிந்திரா டியூவி 300க்கு மாறியது எப்படி? எங்கேயோ உதைக்குதே!

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது, "விகாஸ் துபேவை கான்பூர் மாநிலத்திற்கு அழைத்து வரும் வேலையில், அதிக மழை காரணமாக கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. அப்போது, போலீஸாரின் துப்பாக்கியைப் பறித்த விகாஸ், அங்கிருந்து தப்ப முயன்றார். பல முறை தடுத்தும் அவர் கேட்கவில்லை. போலீஸாரின் துப்பாக்கியையும் பறித்ததால், அவரை போலீஸார் தற்காப்பிற்காக தாக்கினர்" என்றனர்.

நீடிக்கும் மர்மம்! டாடா சஃபாரியில் வந்த விகாஸ்... மஹிந்திரா டியூவி 300க்கு மாறியது எப்படி? எங்கேயோ உதைக்குதே!

இந்த சம்பவத்தை அடுத்து விகாஸ் துபே அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. இதற்கிடையில், விகாஸ் துபே தாமாக முன் வந்து சரணடைந்ததாகவும் ஒரு சில தகவல்கள் பரவிய வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையிலேயே போலீஸாரின் என்கவுண்டர்குறித்த சர்ச்சையான தகவல்கள் பல வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

நீடிக்கும் மர்மம்! டாடா சஃபாரியில் வந்த விகாஸ்... மஹிந்திரா டியூவி 300க்கு மாறியது எப்படி? எங்கேயோ உதைக்குதே!

விகாஸ் துபேவை கைது செய்த போலீஸார் விகாஸ் டாடா சஃபாரில் காரிலேயே கான்பூர் அழைத்து வந்துள்ளனர். இதையே டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் வீடியோக்கள் உறுதிச் செய்கின்றன. ஆனால், என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்திலோ மஹிந்திரா டியூவி 300 கார் கவிழ்ந்து கிடக்கின்றது. போலீஸாரின் கூற்றின்படி, கார் விபத்துக்குள்ளானபோதே விகாஸ் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தப்பிக் முயன்றதாக தெரிவித்துள்னர்.

நீடிக்கும் மர்மம்! டாடா சஃபாரியில் வந்த விகாஸ்... மஹிந்திரா டியூவி 300க்கு மாறியது எப்படி? எங்கேயோ உதைக்குதே!

இதன்காரணமாகவே போலீஸார் தாக்கியதாகவும் காரணம் கூறப்பட்டது. இம்மாதிரியான சூழ்நிலையில் டாடா சஃபாரியில் சென்றுக் கொண்டிருந்த விகாஸ் துபே, மஹிந்திரா டியூவி300 காருக்குள் வந்தது எப்படி, விபத்து அரங்கேறியது எப்படி என்ற பல்வேறு கேள்விகள் எழும்பிய வண்ணம் இருக்கின்றன. அதேசமயம், மஹிந்திராவின் டியூவி300 கார் அவ்வளவு எளிதில் கவிழக்கூடிய கார் இல்லையென்றும் ஆட்டோத்துறை வல்லநுர்கள் தெரிவிக்கின்றனர்.

நீடிக்கும் மர்மம்! டாடா சஃபாரியில் வந்த விகாஸ்... மஹிந்திரா டியூவி 300க்கு மாறியது எப்படி? எங்கேயோ உதைக்குதே!

இந்நிலையில், விகாஸ் துபேவின் என்கவுண்டர் திட்டமிடப்பட்டே செய்யப்பட்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டை சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் முன் வைத்துள்ளார். பல முக்கிய பிரபலங்களைக் காப்பாற்றும் நோக்கில் இந்த என்கவுண்டர் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

நீடிக்கும் மர்மம்! டாடா சஃபாரியில் வந்த விகாஸ்... மஹிந்திரா டியூவி 300க்கு மாறியது எப்படி? எங்கேயோ உதைக்குதே!

இதுகுறித்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் கார் மாற்றம் நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. டியூவி300 காரைக் காட்டிலும் பல மடங்கு அதிக பாதுகாப்பு நிறைந்தது டாடா சஃபாரி. இது அதிக பாதுகாப்பு அம்சத்தைக் கொண்ட எஸ்யூவி கார் ஆகும். இதனாலயே சில மாநில முதலைச்சர்களின் கான்வாயில் இக்கார் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், பிஎஸ்-6 தர அப்கிரேஷன் காரணமாக இக்காரின் விற்பனையை டாடா நிறுத்தியுள்ளது

நீடிக்கும் மர்மம்! டாடா சஃபாரியில் வந்த விகாஸ்... மஹிந்திரா டியூவி 300க்கு மாறியது எப்படி? எங்கேயோ உதைக்குதே!

இருப்பினும், டாடா சஃபாரி ஸ்டோர்ம் அதிக பாதுகாப்பு வசதியைக் கொண்டு கார் என்பதால் நாட்டின் பெரும் புள்ளிகள் மற்றும் அதிக பாதுகாப்பான பயணத்தை விரும்பும் தொழிலதிபர்களின் தேர்வில் இந்த கார் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. இம்மாதிரியான அதிக திறன் வாய்ந்த காரில் இருந்து ஏன் மஹிந்திரா டியூவி 300-க்கு துபே மாற்றப்பட்டார் என்பதுகுறித்த பதில் மர்மமாகவே உள்ளது.

நீடிக்கும் மர்மம்! டாடா சஃபாரியில் வந்த விகாஸ்... மஹிந்திரா டியூவி 300க்கு மாறியது எப்படி? எங்கேயோ உதைக்குதே!

இதை வைத்து நெட்டிசன்கள் பலர் இணையத்தில் பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து இணையத்தில் மஹிந்திரா டியூவி300 கார் பிரபலமடையத் தொடங்கியுள்ளது. அதாவது, போலீஸார் வெளியிட்ட தகவலை அடுத்து நெட்டிசன்கள் பலர் மஹிந்திரா டியூவி300 இவ்வளவு பாதுகாப்பு குறைந்த காரா? வழக்கமான மழைக் காலத்தில் ஓவர் டர்ன் செய்த உடனே கவிழும் அளவிற்கு பாதுகாப்பு குறைச்சல் இருக்கின்றதா என சரமாரியாக கேள்வியை எழுப்பியிருக்கின்றனர்.

நீடிக்கும் மர்மம்! டாடா சஃபாரியில் வந்த விகாஸ்... மஹிந்திரா டியூவி 300க்கு மாறியது எப்படி? எங்கேயோ உதைக்குதே!

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் பவன் கோயன்கா, இந்தியாவில் விற்பனையாகும் பாதுகாப்பு நிறைந்த கார்களின் பட்டியல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில், மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் இடம் பெற்றிருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே, மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பிற்கு சலைத்தது அல்ல என்பது உறுதியாகியுள்ளது. மஹிந்திரா டியூவி 300 கார்குறித்த கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
People Trolls Anand Mahindra Over Mahindra TUV300 Safety. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X