இருக்குற கஷ்டத்துல இது வேறயா... மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி நிலையில் வாகன ஓட்டிகள்!

கொரோனாவால் மக்கள் பெரும் இழப்புகளையும், துயரங்களையும் சந்தித்து வருகின்றனர். வீடுகளில் முடங்கியிருப்பதே கடினமான விஷயமாக மாறி இருக்கிறது. மேலும், வேலை இழப்பு, சம்பள குறைப்பு, வருவாயில் அடி என பல்வேறு வகையிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

இருக்குற கஷ்டத்துல இது வேறயா... வாகன ஓட்டிகளுக்கு அடுத்த ஷாக்!

தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் பல இடங்களில் விலைவாசியும் உயர்ந்தது. இதனால் பன்முனை பொருளாதார தாக்குதல்களில் சிக்கி பலர் தவித்து வருகின்றனர். இந்த சூழலில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருவது வாகன ஓட்டிகள் மற்றும் மக்களிடையே புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இருக்குற கஷ்டத்துல இது வேறயா... வாகன ஓட்டிகளுக்கு அடுத்த ஷாக்!

தேசிய ஊரடங்கு காரணமாக நுகர்வு அடியோடு முடங்கிய நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக வாகன போக்குவரத்து மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால், நுகர்வு வெகுவாக அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு மேல் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. தினசரி விலை உயர்வு திட்டமும் நிறுத்தப்பட்டு இருந்தது.

இருக்குற கஷ்டத்துல இது வேறயா... வாகன ஓட்டிகளுக்கு அடுத்த ஷாக்!

தேசிய ஊரடங்கு அமலில் இருந்தாலும் பல இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு முயற்சித்து வருகின்றனர். அலுவலகம் செல்வோர், வியாபாரிகள், வர்த்தகர்கள் மற்றும் போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்கள் மீண்டும் தங்களது வர்த்தக செயல்பாடுகளை படிப்படியாக அதிகரித்து வருகின்றன.

இருக்குற கஷ்டத்துல இது வேறயா... வாகன ஓட்டிகளுக்கு அடுத்த ஷாக்!

கடந்த இரண்டு மாதங்களாக வருவாய் இல்லாமல் இருந்த நிலையில், அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் இந்த சூழலில், பெட்ரோல், டீசல் விலையை தினசரி உயர்த்தப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று 6வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இருக்குற கஷ்டத்துல இது வேறயா... வாகன ஓட்டிகளுக்கு அடுத்த ஷாக்!

இன்று டெல்லியில் பெட்ரோல் விலை 57 காசுகளும், டீசல் விலை 59 காசுகளும் உயர்த்தப்பட்டன. இன்றைய நிலவரப்படி, தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.57 என்றும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.22 என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

இருக்குற கஷ்டத்துல இது வேறயா... வாகன ஓட்டிகளுக்கு அடுத்த ஷாக்!

கடந்த ஆறு நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சிறிது சிறிதாக உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், கடந்த ஆறு நாட்களில் பெட்ரோல் விலை ரூ.3.31 வரையிலும், டீசல் விலை ரூ.3.42 வரையிலும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது, சிறிது சிறிதாக உயர்த்தப்பட்டு தற்போது கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், தொகை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்பட்டுவிட்டது.

இருக்குற கஷ்டத்துல இது வேறயா... வாகன ஓட்டிகளுக்கு அடுத்த ஷாக்!

ஏற்கனவே விலை வாசி உயரும் அபாயம் இருக்கும் நிலையில், டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை அதிகரிக்கப்படும் என்பதால், அது நிச்சயம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இருக்குற கஷ்டத்துல இது வேறயா... வாகன ஓட்டிகளுக்கு அடுத்த ஷாக்!

மறுபுறத்தில் இரண்டரை மாதங்களாக வருவாய் இல்லாமல் அல்லது சம்பள குறைப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் நிதி நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்ற நிலையில் சாமான்ய மக்கள் அல்லல் படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
After being shut for close to 90 days, Oil and Petroleum companies have started increasing prices of petrol and diesel across the country. Fuel rates have been adjusted for six days in a row, making fuel more dearer.Prices increased today by Rs 0.57 per liter for petrol, and by Rs 0.59 for diesel. Petrol prices at the Capital stand at Rs 74.57 per litre for petrol, and Rs 72.22 per liter for diesel.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X