ரூ.7.99 லட்சத்தில் அட்டகாசமான போலரிஸ் டிராக்டர் இந்தியாவில் அறிமுகம்!

விவசாயப் பணிகளுக்கு ஏதுவான புதிய போலரிஸ் டிராக்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

போலரிஸ் ஸ்போர்ட்ஸ்மேன் 570

அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் நிறுவனம் ஆஃப்ரோடு பயன்பாட்டு தகவமைப்புகள் கொண்ட ஆல் டெர்ரெயின் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. மலைப்பாங்கான கரடு முரடான சாலைகள், மணற்பாங்கான சாலைகளிலும் இந்த வாகனங்கள் அசாத்தியமாக செல்லும் தொழில்நுட்ப சிறப்புகளை கொண்டதாக இருக்கின்றன.

எனினும், போலரிஸ் வாகனங்களை சாதாரண சாலைகளில் பயன்படுத்துவதற்கான சட்ட ரிதீயிலான அனுமதி இல்லை. இந்த நிலையில், சாதாரண சாலைகளில் பயன்படுத்தும் அம்சங்களுடன் தனது முதல் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது போலரிஸ் நிறுவனம்.

போலரிஸ் ஸ்போர்ட்ஸ்மேன் 570 என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடலானது டிராக்டர் என்ற வகையின் கீழ் அரசாங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக போலரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, சாதாரண சாலைகளில் இயக்க முடியும்.

மேலும், டிராக்டர் வகையின் கீழ் வந்துள்ளதால், இந்த வாகனம் அதிகபட்சமாக 60 கிமீ வேகம் வரை மட்டும் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த வாகனத்தை விவசாயப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான சிறப்பு வசதிகளையும் பெற்றிருக்கிறது. இந்த வாகனத்தில் பூச்சிக் கொல்லி ஸ்பிரெயர், உழவு எந்திரம் மற்றும் பின்புறம் சிறிய ட்ரெயிலரை பொருத்துவதற்கான ஊக்கு அமைப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வாகனத்தில் 810 கிலோ எடை வரையிலான ட்ரெயிலரை இணைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இநத் வாகனத்தில் 567 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 34 எச்பி பவரை அளிக்கும். 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ளது.

புதிய போலரிஸ் ஸ்போர்ட்ஸ்மேன் 570 வாகனம் ரூ.7.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது அறிமுகச் சலுகை விலையாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அறிமுகச் சலுகை விலை காலம் முடிந்த பின்னர் ரூ.8.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

இந்த புதிய வாகனத்தை தேயிலை தோட்டப் பணிகள், பழத்தோட்ட விவசாயிகள் மற்றும் பிற விவசாயப் பணிகளுக்கு ஏதுவானதாக இருக்கும் என்று போலரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாகனம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 14, 2020, 12:16 [IST]
English summary
Polaris has launched Sportsman 570 tractor in India at a special introductory price of Rs 7.99 lakh.
மேலும்... #போலரிஸ் #polaris
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+