2000 ஆட்டோக்கள் மீது அதிரடியாக வழக்கு பதிவு... காரணம் தெரிஞ்சா மிரண்டுபோய்டுவீங்க...!

2 ஆயிரம் ஆட்டோக்கள் மீது போலீஸார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதற்கான காரணத்தை விரிவாக இந்த பதிவில் காணலாம்.

2000 ஆட்டோக்கள் மீது அதிரடியாக வழக்கு பதிந்த போலீஸார்... காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...!

இந்தியாவில் திருவிழாக்களுக்கு இணையாகவே தேர்தலும் மிகவும் கோலகலமாக கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக தேர்தல் அறிவிக்கப்பட்ட அடுத்த சில தினங்களிலேயே அந்த மாநிலம் ஆடல், பாடல் மற்றும் பிரச்சாரங்கள் போன்றவற்றால் மூழ்கிவிடுவதை நம்மால் காண முடியும்.

மக்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக கட்சித்தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மக்களை சந்திக்க வரும்போதே அது இன்னும் கோலாகலமாக இருக்கும்.

2000 ஆட்டோக்கள் மீது அதிரடியாக வழக்கு பதிந்த போலீஸார்... காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...!

குறிப்பாக, ஒரு கட்சியினரை மற்றொரு கட்சியினர் விமர்சித்துக்கொள்வது, அலங்கரிப்பட்ட மற்றும் கட்சிக் கொடி ஏந்திய வாகனங்களின் பேரணி என பல்வேறு சுவாரஷ்யமான சம்பவங்களை தேர்தல் திருவிழாக்களில் மட்டுமே நம்மால் காண முடியும். தற்போது இதுபோன்ற சூழ்நிலைதான் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகின்றது.

ஏனென்றால், தலைநகர் டெல்லியின் சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

2000 ஆட்டோக்கள் மீது அதிரடியாக வழக்கு பதிந்த போலீஸார்... காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...!

இங்கு வருகின்ற பிப்ரவரி மாதம் 8ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கின்றது. தொடர்ந்து, பிப்ரவரி 11ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால், அந்த மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சார திருவிழாவால் மூழ்கியுள்ளது. கட்சித்தலைவர்கள் தங்களுக்கென பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களில் மக்களிடம் சென்று வாக்குகளைச் சேகரித்துவருகின்றனர்.

2000 ஆட்டோக்கள் மீது அதிரடியாக வழக்கு பதிந்த போலீஸார்... காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...!

அண்மையில், டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்கூட, தேர்தலில் நிற்பதற்கான ஒப்புதல் பத்திரத்தை தாக்கல் செய்வதற்காக மாற்றியமைக்கப்பட்ட மஹிந்திரா தாரில் சென்றார். ஆனால், அப்போது பேரணியில் அதிக நேரம் எடுத்துக் கொண்ட காரணத்தால் அவரால் அன்றைய தினம் விண்ணப்பத்தினை தேர்தல் அதிகாரியிடம் வழங்க முடியவில்லை. ஆகையால், மறு தினமே அதனை அரவிந்த் கெஜ்ரிவால் சமர்பித்தார்.

2000 ஆட்டோக்கள் மீது அதிரடியாக வழக்கு பதிந்த போலீஸார்... காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...!

தொடர்ந்து, பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட அதே மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் சென்றே தேர்தல் பரப்புரையை அவர் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்றதொரு நடவடிக்கையில்தான் காங்கிரஸ், பாஜக கட்சியினர் இறங்கியுள்ளனறர்

2000 ஆட்டோக்கள் மீது அதிரடியாக வழக்கு பதிந்த போலீஸார்... காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...!

தொடர்ந்து, தங்களின் பரப்புரைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வாயிலாக பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆட்டோ மற்றும் பேருந்து போன்ற பொதுவாகனங்களையும் அவர்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர். பரப்புரைகளை உள்ளடக்கிய அந்த வாகனங்கள் சாலையெங்கிலும் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன.

2000 ஆட்டோக்கள் மீது அதிரடியாக வழக்கு பதிந்த போலீஸார்... காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...!

இத்தகைய வாகனங்கள் மீது போலீஸார் தற்போது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கையின்மூலம் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆட்டோக்கள்மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அதில், அதிகமான ஆட்டோக்கள் ஆம் ஆத்மி கட்சியின் பரபப்புரைகளைப் பொருந்திய ஆட்டோக்களாக இருப்பதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.

2000 ஆட்டோக்கள் மீது அதிரடியாக வழக்கு பதிந்த போலீஸார்... காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...!

அந்தவகையில், ஆம் ஆத்மியின் கோஷங்கள் மற்றும் பரப்புரைப் பொருந்திய 1,305 ஆட்டோக்கள் மீதும், பாஜக கட்சியினரின் பரப்புரையை ஏந்திய 196 ஆட்டோக்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2000 ஆட்டோக்கள் மீது அதிரடியாக வழக்கு பதிந்த போலீஸார்... காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...!

இதுமட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியினரின் செய்திகளை எடுத்துச் சென்றதாக 111 ஆட்டோக்கள் மீதும், சுயேட்சை வேட்பாளர்களின் பதாகைகளை ஏந்திய 466 ஆட்டோக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து வாகனங்கள் மீதும் தேர்தல் நடத்தை விதிமீறியதாகக் கூறி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில நிர்வாக அதிகாரி ரன்பீர் சிங் தெரிவித்தார்.

2000 ஆட்டோக்கள் மீது அதிரடியாக வழக்கு பதிந்த போலீஸார்... காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க...!

இதுமட்டுமின்றி பொது சொத்துக்களைச் சேதப்படுத்தும் மற்றும் விதிமீறி அமைக்கப்பட்டிருந்த 5,43,512 கட்சி பேனர்களையும் அகற்றியிருப்பதாக அவர் கூறினார்.

Article Published On: Thursday, January 23, 2020, 17:40 [IST]
English summary
Poll Body Prosecuted 2,000 Autos For For Carrying Political Parties Slogans. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+