நம்பர் பிளேட் இல்லாததல் ரூ. 27.68 லட்சம் அபராதம்... அடேங்கப்பா, யாருயா அந்த அதிர்ஷ்டசாலி..!

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி விலையயுர்ந்த லக்சூரி காருக்கு போலீஸார் ரூ. 27.68 லட்சம் மதிப்பில் அபராத செல்லாண் வழங்கியுள்ளனர்.

நம்பர் பிளேட் இல்லாததல் ரூ. 27.68 லட்சம் அபராதம்... அடேங்கப்பா, யாருயா அந்த அதிர்ஷ்டசாலி..!

போக்குவரத்து விதிமீறல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம், 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி நாடு முழுவதும் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து தற்போது வரை வாகன விதமீறல்கள் மற்றும் அதற்காக வழங்கப்படும் அபராதங்கள்குறித்து வெளிவரும் செய்திகள் வாகன ஓட்டிகள் மத்தியில் மிகப் பெரிய கலக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றது.

நம்பர் பிளேட் இல்லாததல் ரூ. 27.68 லட்சம் அபராதம்... அடேங்கப்பா, யாருயா அந்த அதிர்ஷ்டசாலி..!

குறிப்பாக புதிய மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்டு வரும் அபராதம் இதய துடிப்பையே நிறுத்தும் வகையில் இருக்கின்றது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் மேற்கூறியதைப் போன்றே ஓர் சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. இது, அம்மாநில விதிமீறல் வாகன ஓட்டிகளின் வயிற்றில் புளியைக் கரைக்க வைக்கின்ற வகையில் அமைந்துள்ளது.

நம்பர் பிளேட் இல்லாததல் ரூ. 27.68 லட்சம் அபராதம்... அடேங்கப்பா, யாருயா அந்த அதிர்ஷ்டசாலி..!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அஹமதாபாத் மாநில போலீஸாருக்கு புதிய உத்தரவு ஒன்று வழங்கப்பட்டது. அதில், அதிகரித்து வரும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு உடனடி தீர்வு காணும் விதமாக தீவிர பரிசோதனை மேற்கொள்ள கூறப்பட்டது.

நம்பர் பிளேட் இல்லாததல் ரூ. 27.68 லட்சம் அபராதம்... அடேங்கப்பா, யாருயா அந்த அதிர்ஷ்டசாலி..!

இதனால், அந்நகர போலீஸார் தங்களின் வாகன தணிக்கை பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனடிப்படையில் செய்யப்பட்ட சோதனையின்போது, விலையுயர்ந்த சொகுசு கார்களில் ஒன்றான போர்ஷே 911 என்ற கார் பதிவெண் இல்லாமல் வலம் வந்ததைக் கண்டுள்ளனர்.

நம்பர் பிளேட் இல்லாததல் ரூ. 27.68 லட்சம் அபராதம்... அடேங்கப்பா, யாருயா அந்த அதிர்ஷ்டசாலி..!

பின்னர், காரை மடக்கியப் போலீஸார், அந்த விலையுயர்ந்த காரின் ஆவணங்கள் குறித்து பரிசோதனையை மேற்கொண்டனர். அப்போது, நம்பர் பிளேட்டைப் போன்றே ஆவணங்களும் இன்றி அந்த கார் இயக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.

நம்பர் பிளேட் இல்லாததல் ரூ. 27.68 லட்சம் அபராதம்... அடேங்கப்பா, யாருயா அந்த அதிர்ஷ்டசாலி..!

இதனால், அதிர்ந்துபோன போலீஸார், புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, அந்த போர்ஷே காருக்கு ரூ. 9.80 லட்சம் மதிப்பில் அபராத செல்லாண் வழங்கினர்.

நம்பர் பிளேட் இல்லாததல் ரூ. 27.68 லட்சம் அபராதம்... அடேங்கப்பா, யாருயா அந்த அதிர்ஷ்டசாலி..!

இந்த அபராத செல்லாண் வழங்கி 6 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், தற்போது மீண்டும் அதனை போலீஸார் மறு பரிசீலனை செய்துள்ளனர். இதனால், முன்னதாக 9.80 லட்சம் ரூபாயாக இருந்த அபராதத் தொகை தற்போது ரூ. 27.68 லட்சமாக உயர்ந்துள்ளது. எனவே, ஏற்கனவே உச்சபட்சமாக காணப்பட்ட அபராதத் தொகை இப்போது அதீத உச்சபட்சமாகியுள்ளது.

நம்பர் பிளேட் இல்லாததல் ரூ. 27.68 லட்சம் அபராதம்... அடேங்கப்பா, யாருயா அந்த அதிர்ஷ்டசாலி..!

இந்த அதிகபட்ச அபராதத்திற்கு போக்குவரத்து போலீஸார் தரப்பில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, பதிவு சான்று, காப்பீடு, ஓட்டுநர் உரிமம் மற்றும் மாசு சான்று உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலயே இந்த அதிகபட்ச அபராதம் வழங்கப்பட்டுள்ளது.

நம்பர் பிளேட் இல்லாததல் ரூ. 27.68 லட்சம் அபராதம்... அடேங்கப்பா, யாருயா அந்த அதிர்ஷ்டசாலி..!

எனவே, பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட அந்த காரை பறிமுதல் செய்த போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அதேசமயம், இதுபோன்று உச்சபட்ச அளவில் அபராதம் வழங்குவது முதல் முறையல்ல ஏற்கனவே போக்குவரத்து விதமீறல்களில் ஈடுபட்ட பலருக்கு இதேபோல அதிகளவில் அபராதங்கள் வழங்கப்பட்டுள்ளது.

நம்பர் பிளேட் இல்லாததல் ரூ. 27.68 லட்சம் அபராதம்... அடேங்கப்பா, யாருயா அந்த அதிர்ஷ்டசாலி..!

குறிப்பாக வட மாநிலங்கள் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறிய வண்ணம் இருக்கின்றது. இதனால், ஒரு சிலர் போக்குவரத்து போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டும் வருகின்றனர். அந்தவகையில், அண்மையில் அதிகபட்ச அபராதம் விதித்ததன் காரணமாக போலீஸார் முன்னிலையிலே தனது பைக்கை இளைஞர் ஒருவர் தீயிட்டு கொளுத்தியிருந்தார்.

நம்பர் பிளேட் இல்லாததல் ரூ. 27.68 லட்சம் அபராதம்... அடேங்கப்பா, யாருயா அந்த அதிர்ஷ்டசாலி..!

இதற்காக போலீஸார், அந்த இளைஞர் கைது செய்ததுடன், அவருக்கான அபராதத்தையும் உறுதிப்படுத்தினர். இந்தசம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது குஜராத்தில் சொகுசு கார்களின் விலைக்கு இணையாக அபராதம் வழங்கப்பட்டிருப்பது பேசு பொருளாகியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Porsche Carrera S Owner Fined Rs 27.68 Lakh For Traffic Violations: Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X