கேயென் எஸ்யூவி கார் தயாரிப்பில் 1 மில்லியனை கடந்தது போர்ஷே!! இந்தியாவில் இதன் விலை எவ்வளவு தெரியுமா?
கேயென் கார்கள் தயாரிப்பில் 1 மில்லியனை கடந்துள்ளதாக போர்ஷே நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

போர்ஷே கேயென் எஸ்யூவி மாடலின் சிறப்புமிக்க 1 லட்சமாவது மாதிரி ஸ்லோவாகியாவில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. கர்மைன் சிவப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த சிறப்புமிக்க கேயென் கார் ஜெர்மனியில் உள்ள வாடிக்கையாளர் ஒருவருக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

போர்ஷே கேயென் முதன்முதலாக 2002ல் பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதில் இருந்து இந்த நாள் வரையில் மூன்று தலைமுறைகளை இந்த எஸ்யூவி கார் ஏற்றுள்ளது.

இந்திய சந்தையில் இதன் கடைசி மூன்றாம் தலைமுறை 2018ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.19 கோடியாக உள்ளது. கேயென், கேயென் இ-ஹைப்ரீட் மற்றும் கேயென் டர்போ என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் இதன் மூன்றாம் தலைமுறை கிடைக்கிறது.

இதன் சர்வதேச மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டில் ஆடியின் 3.0 லிட்டர் வி6 டர்போ என்ஜினும், மிட்-ரேஞ்ச் மாடல்களில் 2.9 லிட்டர் வி6 டர்போ என்ஜினும், டாப் வேரியண்ட்கள் மற்றும் டர்போ மாடல்களில் டர்போசார்ஜ்டு 4.0 லிட்டர் வி8 என்ஜினும் வழங்கப்படுகிறது.

இதில் 2.9 லிட்டர் வி6 மற்றும் 4.0 லிட்டர் வி8 என்ஜின்களை சார்ந்த இரு ஹைப்ரீட் மாடல்களும் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் வழங்கப்படும் போர்ஷே கேயெனில் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் மற்றும் 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

தற்போதைய தலைமுறை மாடல் ஆடி பொறியியலாளர்களால் வடிவமைக்கப்பட்ட எம்எல்பி ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த ப்ளாட்ஃபாரத்தில்தான் லம்போர்கினி உருஸ் மற்றும் பெண்ட்லீ பெண்டாய்கா உள்பட அதிகளவில் ஃபோக்ஸ்வேகன் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








