இந்திய விற்பனை பட்டியலில் இணைந்தது புதிய போர்ஷே பனமெரா 4 ஸ்போர்ட்ஸ் செடான் கார்!

போர்ஷே இந்தியா இணையதளத்தில் புதிய பனமெரா 4 ஸ்போர்ட்ஸ் செடான் கார் பட்டியலிடப்பட்டுள்ளது. சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரமும் வெளியிடப்பட்டுள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய விற்பனை பட்டியலில் இணைந்தது புதிய போர்ஷே பனமெரா 4 ஸ்போர்ட்ஸ் செடான் கார்!

ஸ்போர்ட்ஸ் செடான் வகை கார் மார்க்கெட்டில் போர்ஷே பனமெரா கார் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக உள்ளது. 4 கதவுகள் கொண்ட இந் கார் தனித்துவமான வடிவமைப்புடைய செடான் என்பதுடன், அதிசெயல்திறன் மிகக் மாடலாகவும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

இந்திய விற்பனை பட்டியலில் இணைந்தது புதிய போர்ஷே பனமெரா 4 ஸ்போர்ட்ஸ் செடான் கார்!

இந்த நிலையில், புதிய போர்ஷே பனமெரா 4 மாடலானது போர்ஷே இந்தியா நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த காருக்கு ரூ.1.49 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய விற்பனை பட்டியலில் இணைந்தது புதிய போர்ஷே பனமெரா 4 ஸ்போர்ட்ஸ் செடான் கார்!

இந்த கார் 5,049 மிமீ நீளமும், 2,165 மிமீ அகலமும், 1,423 மிமீ உயரமும், 2,950 மிமீ வீல்பேஸ் நீளமும் கொண்டுள்ளது. இந்த காரில் 500 லிட்டர் பூட்ரூம் இடவசதி கொடுக்கப்பட்டுள்ளது. பின் இருக்கையை மடக்கினால், 1,340 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை பெற முடியும்.

இந்திய விற்பனை பட்டியலில் இணைந்தது புதிய போர்ஷே பனமெரா 4 ஸ்போர்ட்ஸ் செடான் கார்!

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏராளமான கஸ்டமைஸ் வசதிகள் இந்த காருக்கு வழங்கப்படுகிறது. மேலும், சாதாரண மற்றும் சிறப்பு வண்ணத் தேர்வுகளும் விருப்பம்போல் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.

இந்திய விற்பனை பட்டியலில் இணைந்தது புதிய போர்ஷே பனமெரா 4 ஸ்போர்ட்ஸ் செடான் கார்!

இந்த காரில் 6 சிலிண்டர்கள் கொண்ட 2.9 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 326 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 5.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 262 கிமீ வேகம் வரை செல்லும்.

இந்திய விற்பனை பட்டியலில் இணைந்தது புதிய போர்ஷே பனமெரா 4 ஸ்போர்ட்ஸ் செடான் கார்!

மேலும், இந்த காருக்கு வழங்கப்படும் ஸ்போர்ட்ஸ் க்ரோனோ பேக்கேஜை தேர்வு செய்தால், இந்த காரின் செயல்திறன் மேலும் அதிகமாக இருக்கும். இந்த பேக்கேஜ் கொண்ட மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 13.3 வினாடிகளிலும், 0 - 200 கிமீ வேகத்தை 22.2 வினாடிகளிலும் எட்டிவிடும்.

இந்திய விற்பனை பட்டியலில் இணைந்தது புதிய போர்ஷே பனமெரா 4 ஸ்போர்ட்ஸ் செடான் கார்!

இந்த காரில் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் ஏராளமான இடம்பிடித்துள்ளது. தொடு உணர் பட்டன்கள் மூலமாக சாதனங்களை கட்டுப்படுத்தும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 12 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 16, 2020, 16:28 [IST]
English summary
Porsche Panamera 4 is listed on Indian official website and priced Rs 1.49 Crore (Ex-Showroom).
மேலும்... #போர்ஷே #porsche
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+