என்ன சொல்றீங்க இந்த கார் அடுத்த மாசம் அறிமுகமாகுதா..! இந்தியாவில் உருவாகிய அதி-நவீன எலெக்ட்ரிக் கார்

பிரவைக் நிறுவனத்தின் முதல் மின்சார கார் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன சொல்றீங்க இந்த கார் அடுத்த மாசம் அறிமுகமாகுதா!.. இந்தியாவில் உருவாகிய அதி-நவீன எலெக்ட்ரிக் கார்...

உலக நாடுகளின் தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் இந்தியாவில் மின்சார கார் ஒன்று உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. பிரவைக் நிறுவனத்தின் 'எக்ஸ்டிங்க்சன் எம்கே1 எனும் மாடலே அது. இந்த கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் நாம் காணவிருக்கின்றோம்.

என்ன சொல்றீங்க இந்த கார் அடுத்த மாசம் அறிமுகமாகுதா!.. இந்தியாவில் உருவாகிய அதி-நவீன எலெக்ட்ரிக் கார்...

எக்ஸ்டிங்க்சன், பிரவைக் நிறுவனத்தின் முதல் மின்சார கார் ஆகும். ஆனால், அக்காரை பார்க்கையில் நிறுவனத்தின் முதல் தயாரிப்பைப் போன்று தெரியவில்லை. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், பல ஆண்டுகளாக வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தின் தயாரிப்பைப் போல் இக்கார் காட்சியளிக்கின்றது. இதன் கச்சிதமான தோற்றம் மற்றும் வசதிகள் அவ்வாறே காட்சியளிக்கின்றன.

என்ன சொல்றீங்க இந்த கார் அடுத்த மாசம் அறிமுகமாகுதா!.. இந்தியாவில் உருவாகிய அதி-நவீன எலெக்ட்ரிக் கார்...

இந்த பன்முக சிறப்பு அம்சங்களைக் கொண்ட காரே அடுத்த மாதம் 4ம் தேதி அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து விற்பனைக்கான அறிமுகத்தை அடுத்த வருடம் இந்த கார் சந்திக்கும் என கூறப்படுகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இக்காரின் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்தே தற்போது இக்காரின் தயாரிப்பு மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

என்ன சொல்றீங்க இந்த கார் அடுத்த மாசம் அறிமுகமாகுதா!.. இந்தியாவில் உருவாகிய அதி-நவீன எலெக்ட்ரிக் கார்...

இது ஓர் இரு கதவுகள் கொண்ட ஸ்போர்ட்டி ரக மின்சார காராகும். ஆனால், விற்பனைக்கு வரும்போது இது நான்கு கதவுகள் கொண்ட மாடலாக விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் ஸ்டைல் ஆடம்பர கார்களான ஃபெர்ராரி மற்றும் லம்போர்கினிக்கே போட்டிக் கொடுக்கும் வகையில் மிகவும் கவர்ச்சியானதாக உள்ளது.

என்ன சொல்றீங்க இந்த கார் அடுத்த மாசம் அறிமுகமாகுதா!.. இந்தியாவில் உருவாகிய அதி-நவீன எலெக்ட்ரிக் கார்...

இக்கார்குறித்து அதன் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மின்சார காரில் 96kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, 201 பிஎச்பி மற்றும் 2400 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் மின் மோட்டாரும் இக்காரில் இடம்பெறவிருக்கின்றது. இது அதிகபட்சமாக மணிக்கு 196 கிமீ வேகத்தில் செல்லும். மேலும், வெறும் 5.4 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ எனும் வேகத்தை எட்டும்.

என்ன சொல்றீங்க இந்த கார் அடுத்த மாசம் அறிமுகமாகுதா!.. இந்தியாவில் உருவாகிய அதி-நவீன எலெக்ட்ரிக் கார்...

இதுமட்டுமின்றி இக்கார் ஒரு முழுமையான சார்ஜில் 504 கிமீட்டர்கள் பயணிக்கும். காரை முழுமையாக சார்ஜ் செய்ய சில மணி நேரங்களே போதும். குறிப்பிட்டு கூற வேண்டுமானால் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 30 நிமிடங்களே போதும்.

என்ன சொல்றீங்க இந்த கார் அடுத்த மாசம் அறிமுகமாகுதா!.. இந்தியாவில் உருவாகிய அதி-நவீன எலெக்ட்ரிக் கார்...

2021ம் ஆண்டில் இக்கார் அறிமுகமான பின்னர் முதலில் பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய நகரங்களிலேயே முதலில் விற்பனைக்கு வரும். இதன் பின்னரே மும்பை, புனே மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் இக்கார் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

English summary
Pravaig Extinction Electric Car To Be Unveiled Next Month: Here Are The Details. Read In Tamil.
Story first published: Tuesday, November 17, 2020, 12:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X