இனி பத்மினியை சாலையில் பார்க்கவே முடியாது... அடியோடு தூக்க முடிவு... ஒஹோ இதுதான் காரணமா!!!

பிரிமியர் பத்மினி காரை ஒட்டுமொத்தமாக ஸ்கிராப் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இனி பத்மினியை சாலையில் பார்க்கவே முடியாது... அடியோடு தூக்க முடிவு... ஒஹோ இதுதான் காரணமா!!!

இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் தற்போதும் பிரிமியர் பத்மினி கார்களின் பயன்பாட்டை நம்மால் காண முடிகின்றது. குறிப்பாக, வட மாநிலங்களில் அதிகளவிலேயே அவற்றின் நடமாட்டம் தென்படுகின்றது. அந்தவகையில், பிரிமியர் பத்மினி அதிகம் காணப்படும் மாநிலங்களில் மஹாராஷ்டிரா மாநிலமும் ஒன்று.

இனி பத்மினியை சாலையில் பார்க்கவே முடியாது... அடியோடு தூக்க முடிவு... ஒஹோ இதுதான் காரணமா!!!

இந்த மாநிலத்தின் மும்பை நகரத்தில் பெரும்பாலான கால் டாக்சிகள் பிரிமியர் பத்மினி காராகவே இருக்கின்றது. மும்பை ரயில் நிலையம் தொடங்கி விமானம் நிலையம் வரை இந்த கார்களை நம்மால் பார்க்க முடியும். கருப்பு மஞ்சள் நிறத்தில் சாலையில் இரு பக்கங்களிலும் அந்நகர மக்கள் இணையாக அவை பயன்பாட்டில் இருக்கின்றன. இவை, மும்பையில் 1974ம் ஆண்டில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இனி பத்மினியை சாலையில் பார்க்கவே முடியாது... அடியோடு தூக்க முடிவு... ஒஹோ இதுதான் காரணமா!!!

குறிப்பாக, அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் போக்குவரத்தில் இந்த வாகனமே மிகப்பெரிய பங்கினை வகிக்கின்றன. இந்நிலையில், இந்த புகழ்மிக்க வாகனத்தை அம்மாநில அரசு கூண்டோடு நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகறித்த தகவலை டீம்-பிஎச்பி தளம் வெளியிட்டுள்ளது.

இனி பத்மினியை சாலையில் பார்க்கவே முடியாது... அடியோடு தூக்க முடிவு... ஒஹோ இதுதான் காரணமா!!!

அதாவது, மும்பையில் பயன்பாட்டில் இருக்கும் அனைத்து பிரிமியர் பத்மினி டாக்சி கார்களையும் ஸ்கிராப் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த தகவல் அம்மாநில மக்கள் மற்றும் மும்பை நகர வாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனி பத்மினியை சாலையில் பார்க்கவே முடியாது... அடியோடு தூக்க முடிவு... ஒஹோ இதுதான் காரணமா!!!

அதேசமயம், அடுத்த மாதத்திற்குள் சாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் கடைசி பிரிமியர் பத்மினி வரை அனைத்தையும் ஸ்கிராப் செய்து அழிக்க அம்மாநில அரசு திட்டமிட்டு வருகின்றது.

இனி பத்மினியை சாலையில் பார்க்கவே முடியாது... அடியோடு தூக்க முடிவு... ஒஹோ இதுதான் காரணமா!!!

இந்த அதிரடிக்கு முக்கிய காரணமாக இருப்பது பிரிமியர் பத்மினியால் ஏற்படும் மாசே முக்கிய காரணமாக இருக்கின்றது. தற்போது வாகனங்களால் ஏற்படும் மாசை குறைக்கும் விதமாக புதிய பிஎஸ்-6 உமிழ்வு அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இனி பத்மினியை சாலையில் பார்க்கவே முடியாது... அடியோடு தூக்க முடிவு... ஒஹோ இதுதான் காரணமா!!!

அத்துடன், நீண்ட காலமாக சாலையில் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களை ஸ்கிராப் செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, பத்து முதல் 15 ஆண்டுகளுக்கும் அதிகமான வருடங்கள் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களை அதன் தன்மையைப் பொருத்து ஸ்கிராப் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இனி பத்மினியை சாலையில் பார்க்கவே முடியாது... அடியோடு தூக்க முடிவு... ஒஹோ இதுதான் காரணமா!!!

இந்த நிலையில்தான் அண்மையில் மும்பை உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவை வெளியிட்டிருந்தது. அதில், மாசை அதிகம் ஏற்படுத்தும் வாகனங்களை ஸ்கிராப் செய்யும்படி கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்தே, அதிகாரிகள் பிரிமியர் பத்மினி போன்ற மிக பழைய வாகனங்களைப் பயன்படுத்தி வரும் டாக்சி உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இனி பத்மினியை சாலையில் பார்க்கவே முடியாது... அடியோடு தூக்க முடிவு... ஒஹோ இதுதான் காரணமா!!!

எனவே, பிரிமியர் பத்மினி முழுமையாக சாலையை விட்டு அகற்றிய பின்னர் ஹூண்டாய் சேன்ட்ரோ மாடலே பத்மினியின் இடத்தை நிரப்பும் என கூறப்படுகின்றது. ஆகையால், மிக விரைவில் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் சேன்ட்ரோவை மும்பையின் சாலையில் காண முடியும் என தெரிகின்றது.

இனி பத்மினியை சாலையில் பார்க்கவே முடியாது... அடியோடு தூக்க முடிவு... ஒஹோ இதுதான் காரணமா!!!

பத்மினி பிரீமியர் 1974 மாடலில் 1,089 சிசி கார்பூரேட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றிருக்கின்றது. இது அதிகபட்சமாக 40 எச்பி மற்றும் 83 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இந்த எஞ்ஜின் 4-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பின்புற சக்கரங்களுக்கு சக்தியை வழங்கும். தற்போதும்கூட நல்ல பராமரிப்பில் இருக்கும் பிரிமியர் பத்மினி ரூ. 2 லட்சம் வரை விலைக்குப் போவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Premier Padmini Taxis In Mumbai To Be Scrapped By July 2020. Read In Tamil.
Story first published: Friday, June 26, 2020, 18:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X