மாருதி பலேனோ ஆதிக்கம்... பட்டைய கௌப்பும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை... காரணம் தெரியுமா?

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-5 பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி பலேனோ ஆதிக்கம்... பட்டைய கௌப்பும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை... காரணம் தெரியுமா?

கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக இந்தியாவில் கார்கள் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றது. எனினும் ஆட்டோமொபைல் துறை சரிவில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தற்போது தென்பட தொடங்கியுள்ளன. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

மாருதி பலேனோ ஆதிக்கம்... பட்டைய கௌப்பும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை... காரணம் தெரியுமா?

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொது போக்குவரத்தை பொதுமக்கள் தவிர்க்க தொடங்கியுள்ளனர். அதற்கு பதில் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் கார்களின் விற்பனை சிறப்பாக அமைந்ததற்கு இது முக்கியமான காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

மாருதி பலேனோ ஆதிக்கம்... பட்டைய கௌப்பும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை... காரணம் தெரியுமா?

கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட் கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி பலேனோ கார் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது சுமார் 3 சதவீத அளவிற்கு சரிவை சந்தித்திருந்தாலும், மாருதி சுஸுகி பலேனோவின் ஆதிக்கம் தொடர்கிறது.

மாருதி பலேனோ ஆதிக்கம்... பட்டைய கௌப்பும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை... காரணம் தெரியுமா?

கடந்த ஆகஸ்ட் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 10,742 பலேனோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11,067 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. என்றாலும் இந்த செக்மெண்ட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10,000க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை என்ற எண்ணிக்கையை பதிவு செய்த ஒரே கார் மாருதி சுஸுகி பலேனோதான்.

மாருதி பலேனோ ஆதிக்கம்... பட்டைய கௌப்பும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை... காரணம் தெரியுமா?

மாருதி சுஸுகி பலேனோவிற்கு அடுத்தபடியாக இந்த செக்மெண்ட்டில் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் கார் ஹூண்டாய் எலைட் ஐ20. கடந்த ஆகஸ்ட் மாதம் ஹூண்டாய் நிறுவனம் 7,765 எலைட் ஐ20 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது இது சுமார் 10 சதவீத வளர்ச்சியாகும்.

மாருதி பலேனோ ஆதிக்கம்... பட்டைய கௌப்பும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை... காரணம் தெரியுமா?

ஏனெனில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 7,071 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டிருந்தன. புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 சந்தையில் விற்பனைக்கு வரும்போது, அதன் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. புதிய ஐ20 கார் வரும் அக்டோபரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி பலேனோ ஆதிக்கம்... பட்டைய கௌப்பும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை... காரணம் தெரியுமா?

இதனிடையே பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டிற்கு புதிதாக வந்திருக்கும் கார் டாடா அல்ட்ராஸ். நடப்பு 2020ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் டாடா 4,951 அல்ட்ராஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. அல்ட்ராஸ் நடப்பாண்டுதான் அறிமுகமானது என்பதால், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் விற்பனையை ஒப்பிட முடியாது.

மாருதி பலேனோ ஆதிக்கம்... பட்டைய கௌப்பும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை... காரணம் தெரியுமா?

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை டொயோட்டா க்ளான்சா பிடித்துள்ளது. மாருதி சுஸுகி பலேனோதான் டொயோட்டா பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்யப்பட்டு க்ளான்சா என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டொயோட்டா-சுஸுகி ஆகிய நிறுவனங்களின் கூட்டணியில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட முதல் கார் இதுதான்.

மாருதி பலேனோ ஆதிக்கம்... பட்டைய கௌப்பும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை... காரணம் தெரியுமா?

கடந்த ஆகஸ்ட் மாதம் 1,418 க்ளான்சா கார்களை டொயோட்டா விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸட் மாதம் இந்த எண்ணிக்கை 2,322 ஆக இருந்தது. இது கிட்டத்தட்ட 39 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் 5வது இடத்தை ஃபோக்ஸ்வேகன் போலோ பிடித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஆயிரம் யூனிட்களுக்கு கொஞ்சம் அதிகமாகதான் போலோ கார்களை விற்பனை செய்துள்ளது.

மாருதி பலேனோ ஆதிக்கம்... பட்டைய கௌப்பும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை... காரணம் தெரியுமா?

துல்லியமாக சொல்வதென்றால், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 1,008 போலோ கார்களை மட்டுமே நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனை செய்யப்பட்ட போலோ கார்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது 565 யூனிட்கள் குறைவாகும். அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 1,573 போலோ கார்களை விற்பனை செய்திருந்தது.

மாருதி பலேனோ ஆதிக்கம்... பட்டைய கௌப்பும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை... காரணம் தெரியுமா?

இது கிட்டத்தட்ட 36 சதவீத வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. வரும் மாதங்களில் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட் உள்பட அனைத்து செக்மெண்ட்களிலும் கார்களின் விற்பனை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை காலமும், கொரோனா அச்சத்தால் மக்கள் பொது போக்குவரத்தை தவிர்ப்பதும் இதற்கு முக்கியமான காரணங்களாக இருக்கலாம்.

Most Read Articles

English summary
Premium Hatchback August 2020 Sales - Maruti Suzuki Baleno, Hyundai Elite i20, Tata Altroz. Read in Tamil
Story first published: Saturday, September 19, 2020, 23:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X