தனியார் பேருந்துக்கு ரூ.5.87 லட்சம் அபராதம்! காரணத்தை கேட்டு மிரண்டுபோன மக்கள்..! இது ரொம்ப ஓவருங்க!

தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவருக்கு உச்சபட்ச அபராதம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ. 5.87 லட்சம் அபராதம்... இவ்ளோ பெரிய தொகை அபராதமா? யாருங்க அந்த அதிர்ஷ்டசாலி...

நகரம் அல்லாத கிராமங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் அரசின் பொது போக்குவரத்தைக் காட்டிலும் தனியார் பேருந்துகளே மக்கள் பயன்பாட்டில் அதிகம் பங்களிக்கின்றன. அத்தகைய ஓர் தனியார் பேருந்தின் உரிமையாளர் ஒருவருக்கு உச்சபட்ச அபராதத்தை போக்குவரத்துத்துறை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ. 5.87 லட்சம் அபராதம்... இவ்ளோ பெரிய தொகை அபராதமா? யாருங்க அந்த அதிர்ஷ்டசாலி...

இந்த சம்பவத்தில் அபராதத்தைக் காட்டிலும், அதை வழங்கியதற்கான காரணம் கூடுதல் ஷாக்களிக்கும் வகையில் அமைந்துள்ளது. உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதி இல்லாததே அபராதத்திற்கான முக்கிய காரணம் ஆகும். இதனை அவர் கடந்த 2019ம் ஆண்டில் இருந்த செலுத்த தவறியதாகக் கூறப்படுகின்றது.

ரூ. 5.87 லட்சம் அபராதம்... இவ்ளோ பெரிய தொகை அபராதமா? யாருங்க அந்த அதிர்ஷ்டசாலி...

இந்த காரணத்திற்காகவே பேருந்திற்கு உச்சபட்ச அபராதம் வழங்கப்பட்டிருப்பதாக நியூஸ்18 ஆங்கில தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் பகுதியிலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. குறிப்பாக, உரிய அனுமதி இல்லாமல் பேருந்தை இயக்கியது, வரி செலுத்தாது, ஃபிட்னஸ் சான்று இல்லாதது ஆகியவையே முதன்மையான காரணங்களாக கூறப்படுகின்றன.

ரூ. 5.87 லட்சம் அபராதம்... இவ்ளோ பெரிய தொகை அபராதமா? யாருங்க அந்த அதிர்ஷ்டசாலி...

இதற்காகவே ரூ. 5.82 லட்சத்திற்கான அபராதத்தை ஆர்டிஓ அதிகாரிகள் வழங்கியிருக்கின்றனர். இதுமட்டுமின்றி, பேருந்து பறிமுதல் மற்றும் தற்காலிக பதிவு முடக்கம் ஆகிய நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டிருக்கின்றனர். இதனால், பேருந்தின் உரிமையாளர் கடும் சிக்கலில் சிக்கியிருக்கின்றார்.

ரூ. 5.87 லட்சம் அபராதம்... இவ்ளோ பெரிய தொகை அபராதமா? யாருங்க அந்த அதிர்ஷ்டசாலி...

புவனேஸ்வர் ஆர்டிஓ-II அதிகாரிகளே இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர். இவர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிட்ட அப்பேருந்து கடந்த உரிய ஆவணங்கள் இன்றி இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்தே வரி செலுத்தாது மற்றும் ஃபிட்னஸ் சான்று இல்லாதது ஆகியவற்றிற்கு ரூ. 5,66,981 அபராதமும், உரிய அனுமதி இல்லாததற்கு ரூ. 15 ஆயிரமும் அவர்கள் விதித்தனர்.

ரூ. 5.87 லட்சம் அபராதம்... இவ்ளோ பெரிய தொகை அபராதமா? யாருங்க அந்த அதிர்ஷ்டசாலி...

ஒட்டுமொத்தமாக தனியார் பேருந்தின் உரிமையாளருக்கு ரூ. 5.87 லட்சம் அபராதத்திற்கான செல்லாண் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை புவனேஸ்வர் ஆர்டிஓ2 அதிகாரிகள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், "பேருந்திற்கு ரூ. 5.67 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாதது, விதிமீறியது ஆகிய காரணங்களுக்காக ஓடி10இ0409 (OD 10 F 0409) என்ற பதிவெண் கொண்ட பேருந்தை பறிமுதல் செய்துள்ளோம்" என பதிவிட்டுள்ளனர்.

ரூ. 5.87 லட்சம் அபராதம்... இவ்ளோ பெரிய தொகை அபராதமா? யாருங்க அந்த அதிர்ஷ்டசாலி...

தற்போது உச்சபட்ச அபராதத்தைப் பெற்றிருக்கும் பேருந்தானது கொரபுட் மற்றும் புவனேஸ்வர் ஆகிய வழித்தடத்தை இணைக்கும் முக்கியமான பேருந்தாகும். இந்த பேருந்தை ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ. 5.87 லட்சம் அபராதம்... இவ்ளோ பெரிய தொகை அபராதமா? யாருங்க அந்த அதிர்ஷ்டசாலி...

கொரோனா வைரஸ் காரணமாக நீண்ட நாட்கள் முடங்கிக்கிடந்த பொதுப் போக்குவரத்துத்துறை கடந்த சில தினங்களாகவே எழுச்சியடையத் தொடங்கியுள்ளது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் நலிவடைந்துக் கிடந்த போக்குவரத்துத்துறை தற்போது மலரத் தொடங்கியிருக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில், விதிமீறல் வாதிகள் மற்றும் முறைகேடுகளை அரங்கேற்றுவோரை ஒடிசா போக்குவரத்துத்துறை களையெடுக்கத் தொடங்கியுள்ளது.

ரூ. 5.87 லட்சம் அபராதம்... இவ்ளோ பெரிய தொகை அபராதமா? யாருங்க அந்த அதிர்ஷ்டசாலி...

இதனடிப்படையிலேயே தனியார் பேருந்துமீது மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், எதிர்காலத்தில் இதுபோன்ற முரண்பாடான செயல்களில் வாகன உரிமையாளர்களால் ஈடுபட முடியாது என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். ஏனெனில், வாகன உரிமையாளர்கள் மற்றும் பயணிகளின் வசதியை எளிதாக்கும் ஓர் முயற்சியாக மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப போர்டல் ஒன்றை உருவாக்கியுள்ளது.

ரூ. 5.87 லட்சம் அபராதம்... இவ்ளோ பெரிய தொகை அபராதமா? யாருங்க அந்த அதிர்ஷ்டசாலி...

இதன் மூலம் ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் அனைத்து விதமான சான்றுகளையும் டிஜிட்டல் சான்றாக சேமித்து வைத்துக்கொள்ள முடியும். எனவே, போலீஸாரிடத்தில் ஒரிஜினல் ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும் என்ற நிலை இருக்காது. மேலும், வாகனத்தின் பதிவெண்ணை பதிவிட்டாலே போதும், அனைத்து தகவல்களையும் போலீஸாரால் பெற்றுக் கொள்ள முடியும்.

ரூ. 5.87 லட்சம் அபராதம்... இவ்ளோ பெரிய தொகை அபராதமா? யாருங்க அந்த அதிர்ஷ்டசாலி...

ஆகையால், வரும் காலம் விதிமீறல்வாதிகளுக்கு கஷ்ட காலம் என்றே கூறலாம். ஒவ்வொரு ஆவணங்களையும் சரிபார்த்த பின்னரே அந்த தளத்தில் அங்கீகரிக்கப்படும். ஆகையால், யாராலும் இதில் விதிமீறலில் ஈடுபட முடியாது என தெரிகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Private Bus Gets Hefty Fine For Not Paying Tax Since 2019. Read In Tamil.
Story first published: Friday, October 16, 2020, 14:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X