டாடா அல்ட்ராஸை பின்பற்றி சந்தைக்கு வரும் புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி...

கடந்த ஆண்டு இறுதியில் ஜெனிவாவில் நடைபெற்ற மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எச்பிஎக்ஸ் மாடல் இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த போது சில முறை கண்டறியப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்த கார் சோதனையின் போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸை பின்பற்றி சந்தைக்கு வரும் புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி...

டாடா நிறுவனத்தின் எச்2எக்ஸ் கான்செப்ட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வரும் எச்பிஎக்ஸ் மாடல், கடந்த பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. காரின் உடற்பகுதியில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்பதை அறிய முடியாதபடி சோதனையில் இந்த கார் முழுவதும் மறைக்கப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸை பின்பற்றி சந்தைக்கு வரும் புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி...

ஆனால் இதுதான் இந்த காரின் இறுதிக்கட்ட விற்பனை மாடலா என்பது சரியாக தெரியவில்லை. முன்புறத்தில் இந்த சோதனை கார் எல்இடியில் டிஆர்எல் விளக்குகளை பெற்றுள்ளது. மேலும் டர்ன் சிக்னல்களாகவும் இந்த டிஆர்எல் விளக்குகள் செயல்படவுள்ளன. ஹெட்லைட் யூனிட் பம்பரின் மீது பொருத்தப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸை பின்பற்றி சந்தைக்கு வரும் புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி...

இவற்றுடன் இந்த மைக்ரோ எஸ்யூவி காரில் டாடா நிறுவனத்தின் தனித்துவமான முன்புற க்ரில் மற்றும் அசத்தலான டிசைனில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் டாடா அல்ட்ராஸ் மாடலில் காணப்பட்ட டெயில்லைட்களை இந்த கார் பெற்றுள்ளது.

டாடா அல்ட்ராஸை பின்பற்றி சந்தைக்கு வரும் புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி...

இதனுடன் பின்புற ஃபாக் விளக்குகள், பின்புற டிஃபெக்கர் மற்றும் பின்புற வைபர்களிலும் இந்த கார் டாடா அல்ட்ராஸ் மாடலுடன் ஒத்துள்ளது. இந்நிறுவனத்தின் ஆல்ஃபா கட்டமைப்பில் இந்த புதிய மினி-எஸ்யூவி கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் இம்பேக்ட் 2.0 டிசைனில் தான் டாடா அல்ட்ராஸ் ப்ரிமியம் ஹேட்ச்பேக் மாடலும் உருவாக்கப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸை பின்பற்றி சந்தைக்கு வரும் புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி...

உட்புறத்தில் டாடா எச்பிஎக்ஸ் மாடல் பெரும்பான்மையான தொழிற்நுட்பங்களை டாடா அல்ட்ராஸ் மாடலுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த தொழிற்நுட்பங்களில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய பெரிய தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், சுற்றிலும் விளக்குகள், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சில கண்ட்ரோல்களை கொண்ட ஸ்டேரிங் உள்ளிட்டவை அடங்கும்.

டாடா அல்ட்ராஸை பின்பற்றி சந்தைக்கு வரும் புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி...

டிசைன் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களுடன் என்ஜின் தேர்வுகளையும் இந்த மைக்ரோ-எஸ்யூவி கார் ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடலான அல்ட்ராஸில் இருந்தே பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் இந்த புதிய காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 85 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டாடா அல்ட்ராஸை பின்பற்றி சந்தைக்கு வரும் புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி...

மற்றொரு என்ஜின் தேர்வான 1.5 லிட்டர் ஆயில்-பர்னர் 89 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும். இரண்டு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது. இதன் அறிமுகத்திற்கு சில மாதங்கள் கழித்து இந்த மேனுவல் கியர்பாக்ஸ் உடன் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷனை கூடுதல் தேர்வாக டாடா நிறுவனம் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸை பின்பற்றி சந்தைக்கு வரும் புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி...

இந்நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் டாடா நெக்ஸானிற்கு கீழே எச்பிஎக்ஸ் மாடல் நிலைநிறுத்தப்படவுள்ளது. அறிமுகத்திற்கு பிறகு இந்த மினி எஸ்யூவி, மாருதி சுசுகி எஸ்-பிரெஸ்ஸோ, ரெனால்ட் க்விட் மற்றும் விரைவில் சந்தைக்கு வரவுள்ள 2020 டட்சன் ரெடி-கோ உள்ளிட்ட மாடல்களுடன் போட்டியிட வேண்டும்.

Source: Thrustzone

Most Read Articles

English summary
Production-Spec Tata HBX Micro SUV Spotted Testing In India
Story first published: Friday, March 27, 2020, 23:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X