ஃபியட் க்றைஸ்லர் மற்றும் பீஜோ நிறுவனங்கள் ஒன்றாக இணைந்தன... புதிய நிறுவனமாக செயல்படும்

ஃபியட் க்றைஸ்லர் மற்றும் பீஜோ எஸ்.ஏ (குரூப் பிஎஸ்ஏ) ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு குழுமங்களும் இனி புதிய பெயரில் செயல்பட உள்ளன. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஃபியட் க்றைஸ்லர் மற்றும் பீஜோ கார் குழுமங்கள் ஒன்றாக இணைப்பு

இத்தாலியை சேர்ந்த ஃபியட் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த க்றைஸ்லர் ஆகிய நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன் ஒரே குடையின் கீழ் வந்ததுடன், ஃபியட் க்றைஸ்லர் (FCA)என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன. இதேபோன்று, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மிகவும் பிரலமான பீஜோ எஸ்.ஏ வாகன உற்பத்தி குழுமம் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஐரோப்பாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு குழுமங்களில் ஒன்றாக உள்ளது.

ஃபியட் க்றைஸ்லர் மற்றும் பீஜோ கார் குழுமங்கள் ஒன்றாக இணைப்பு

இந்த நிலையில், முதலீடுகளை குறைத்து வர்த்தகத்தை செம்மையாக்கும் விதத்தில், இரண்டு குழுமங்களும் ஒரே நிறுவனமாக செயல்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்தன. இதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 18ந் தேதி இரு குழுமங்களையும் இணைப்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டன.

ஃபியட் க்றைஸ்லர் மற்றும் பீஜோ கார் குழுமங்கள் ஒன்றாக இணைப்பு

இந்த நிலையில், தற்போது இரு நிறுவனங்களும் முறைப்படி இணைக்கப்பட்டுள்ளன. இனி இந்த இரண்டு குழுமங்களும் ஸ்டெல்லன்டிஸ் என்ற புதிய பெயரில் அழைக்கப்படும். லத்தீன் மொழியில் ஸ்டெல்லோ என்றால், நட்சத்திரங்களுடன் பிரகாசமாக்கு என்று பொருள்படுகிறது. இதன் அடிப்படையில்தான் இந்த புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஃபியட் க்றைஸ்லர் மற்றும் பீஜோ கார் குழுமங்கள் ஒன்றாக இணைப்பு

ஃபியட் க்றைஸ்லர் மற்றும் குரூப் பிஎஸ்ஏ ஆகிய இரண்டு குழுமங்களும் 50:50 என்ற பங்கு மூலதனம் அடிப்படையில் செயல்பட உள்ளன. இரு நிறுவனங்களின் இணைப்புக்கு மூத்த அதிகாரிகள் மிக நெருக்கமாக செயலாற்றி இந்த இணைப்பு படலத்தை நிறைவேற்றி உள்ளனர். பப்லிக்ஸ் குழுமம் இதற்கு துணைபுரிந்துள்ளது. வரும் 2021ம் ஆண்டு துவக்கத்தில் இணைப்பு நடவடிக்கை முழுமை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபியட் க்றைஸ்லர் மற்றும் பீஜோ கார் குழுமங்கள் ஒன்றாக இணைப்பு

ஃபியட் க்றைஸ்லர் மற்றும் பிஎஸ்ஏ குழுமம் ஆகியவை இரண்டு குழுமங்களின் இணைப்புக்கு பிறகு ஸ்டெல்லன்டிஸ் என்பது பொதுவான நிர்வாகத்திற்கான கார்ப்பரேட் பெயராகவும், பிராண்டாகவும் பயன்படுத்தப்படும். இந்த புதிய குழுமத்திற்கான புதிய பிராண்டு சின்னத்தை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

ஃபியட் க்றைஸ்லர் மற்றும் பீஜோ கார் குழுமங்கள் ஒன்றாக இணைப்பு

அதேநேரத்தில், கார் வர்த்தகத்தின்போது ஃபியட் க்றைஸ்லர் மற்றும் பிஎஸ்ஏ குழுமத்தின் பிராண்டு சின்னங்கள், பெயர் ஆகியவை எப்போதும் போல பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஃபியட் க்றைஸ்லர் மற்றும் பீஜோ கார் குழுமங்கள் ஒன்றாக இணைப்பு

ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் ஃபியட், அபார்த், ஆல்ஃபா ரோமியோ, க்றைஸ்லர், டாட்ஜ், ஜீப், லான்சியா, ராம், மஸரேட்டி ஆகிய கார் பிராண்டுகள் செயல்பட்டு வருகின்றன. பிஎஸ்ஏ குழுமத்தின் கீழ் பீஜோ, சிட்ரோன், டிஎஸ், வாக்ஸ்ஹால்- ஒபெல் ஆகிய கார் பிராண்டுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இணைப்பு நடவடிக்கையின் மூலமாக உலகின் மிகப்பெரிய வாகன குழுமங்களில் ஒன்றாக ஸ்டெல்லன்டிஸ் மாறி இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, July 17, 2020, 13:30 [IST]
English summary
Peugeot S.A. (Groupe PSA) and Fiat Chrysler Automobiles N.V. (FCA) have announced their 50:50 merger. This collaboration was defined in the Combination Agreement that was announced on December 18, 2019, last year. The new group will be called Stellantis.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+