மண்ணுளி பாம்பு, இருடியம் மாதிரி இதுவும் ரொம்ப ரேர் பீஸ்... இது மட்டும் கிடைச்சா நாமலும் கோடீஸ்வரர் ஆயிடலாம்!!

ஃபோக்ஸ்வேகன் - ஹாட் வீல்ஸ் தயாரிப்பில் அறிமுகம் செய்யப்பட்ட சிறிய கார் ஒன்று நம்ப முடியாத மதிப்பைக் கொண்டதாக இருக்கின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மண்ணுளி பாம்பு, இருடியம் மாதிரி இதுவும் ரொம்ப ரேர் பீஸ்... இது மட்டும் கிடைச்சா நாமலும் கோடீஸ்வரர் ஆயிடலாம்!!

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், ஹாட் வீல்ஸ் உடன் இணைந்து தயாரித்த ஸ்கேல் மாடலே இந்த இளஞ் சிவப்பு நிறத்திலான 'பீச் பாம்ப்' சிறிய கார். 1969ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த சிறிய கார் மிகவும் அரிதான பொருளாக மாறியிருக்கின்றது. 1:64 எனும் அளவிலியே இது உருவாக்கப்பட்டிருக்கின்றது.

மண்ணுளி பாம்பு, இருடியம் மாதிரி இதுவும் ரொம்ப ரேர் பீஸ்... இது மட்டும் கிடைச்சா நாமலும் கோடீஸ்வரர் ஆயிடலாம்!!

ஆகையால், என்ன அளவு இருக்கும் என்பதை உங்களால் யூகித்திருக்க முடியும் என நாங்கள் நம்புகின்றோம். இந்த மிகச் சிறிய காரே தற்போது மிக அதிக விலைக் கொண்ட சிறிய ஸ்கேல் மாடல் காராக மாறியிருக்கின்றது. ஆமாங்க, இதோட மதிப்பு அமெரிக்க டாலர்களில் 1,50,000 என கூறப்படுகின்றது. அப்படியானால், இந்திய ரூபாய் மதிப்பில் 11,062,648.29 ஆகும்.

மண்ணுளி பாம்பு, இருடியம் மாதிரி இதுவும் ரொம்ப ரேர் பீஸ்... இது மட்டும் கிடைச்சா நாமலும் கோடீஸ்வரர் ஆயிடலாம்!!

இது இன்றைய தினத்தின்படியான மதிப்பாகும். ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஹாட் வீல்ஸ் இணைந்து இதுபோன்ற பல்வேறு ஸ்கேல் மாடல்களைத் தயாரித்திருக்கின்றன. ஆனால், பின் பக்க கண்ணாடியின் வழியாக இரு சர்ஃப் போர்டுகள் இருப்பதைப் போன்ற ஸ்கேல் மாடல்கள் இரண்டே எண்ணிக்கையில் மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

மண்ணுளி பாம்பு, இருடியம் மாதிரி இதுவும் ரொம்ப ரேர் பீஸ்... இது மட்டும் கிடைச்சா நாமலும் கோடீஸ்வரர் ஆயிடலாம்!!

குறிப்பிட்ட சில காரணங்களுக்கா இந்த மாடல்களை விற்பனைச் செய்யவில்லை. ஆகையால், நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டுமே இதனை பயன்படுத்தி வந்தனர். இந்தநிலை வெகுநாள் நீடிக்கவில்லை. ஏனெனில் இதனை மறுசீரமைப்பு செய்து புதிய ஸ்டிக்கர்களுடன் ஃபோக்ஸ்வேகன் விற்கத் தொடங்கியது. இத்துடன், கூடுதலாக இதேபோன்று புதிய கார்களும் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டன.

மண்ணுளி பாம்பு, இருடியம் மாதிரி இதுவும் ரொம்ப ரேர் பீஸ்... இது மட்டும் கிடைச்சா நாமலும் கோடீஸ்வரர் ஆயிடலாம்!!

அந்தவகையில், புதிதாக ஊதா, பச்சை, சிவப்பு, வெளிர் நீலம் மற்றும் கோல்டன் ஆகிய நிறங்களில் விற்கப்பட்டன. இருப்பினும், இளஞ்சிவப்பு நிறத்தில் அவை விற்கப்படவில்லை. ஆகையால், அப்போதே அரிதான மாடலாக இளம் சிவப்பு ஸ்கேல் மாடல் உருவாகியது. எனவேதான் தற்போது இதன் விலை பல கோடிகளாலாக உயர்ந்திருக்கின்றது.

மண்ணுளி பாம்பு, இருடியம் மாதிரி இதுவும் ரொம்ப ரேர் பீஸ்... இது மட்டும் கிடைச்சா நாமலும் கோடீஸ்வரர் ஆயிடலாம்!!

இந்த ஸ்கேல் மாடல் கார் தற்போது மேரிலேண்டைச் சேர்ந்த ப்ரூஸ் பாஸ்கல் என்பவரிடத்தில் இருக்கின்றது. இவரிடத்தில் இந்த வாகனம் மட்டுமின்றி 7,000 ஹாட் வீல் மாடல்கள் இருக்கின்றன. இதில் சிலவற்றை ஏற்கனவே தனது நண்பர்களுக்கு விற்பனைச் செய்ததாக தகவல்கள் இருக்கின்றன. இதன் மதிப்பும் தற்போது பல கோடிகள் இருக்கும் என கூறப்படுகின்றது.

மண்ணுளி பாம்பு, இருடியம் மாதிரி இதுவும் ரொம்ப ரேர் பீஸ்... இது மட்டும் கிடைச்சா நாமலும் கோடீஸ்வரர் ஆயிடலாம்!!

ஃபோக்ஸ்வேகன் தற்போது பல விதமான ஸ்கேல் மாடல்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அண்மையில்கூட 42 ஹாட் வீல் மாடல்களை அது விற்பனைக்குக் களமிறக்கியது. ஆனால், அவற்றில் எதுவும் 'பீச் பாம்' (Beach Bomb-கடற்கரை வெடிகுண்டு) ஸ்கேல் மாடலைப் போன்று வெற்றி கரமான மாடலாக உருவாகவில்லை.

Most Read Articles

English summary
Rare Volkswagen Beach Bomb Hot Wheels Prototype Toy Costs $1,50,000 Details. Read In Tamil.
Story first published: Tuesday, December 8, 2020, 15:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X