இந்திய மக்களுக்கு பாதுகாப்பான கார்கள்... டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பாராட்டிய ரத்தன் டாடா...

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை ரத்தன் டாடா பாராட்டியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய மக்களுக்கு பாதுகாப்பான கார்கள்... டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பாராட்டிய ரத்தன் டாடா...

இந்திய சாலைகளுக்கு 4 மில்லியன் (40 லட்சம்) கார்களை கொண்டு வந்த சாதனையை படைத்ததற்காக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை தற்போது ரத்தன் டாடா பாராட்டியுள்ளார். அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எதிர்கால முயற்சிகள் வெற்றியடைவதற்கு, ரத்தன் டாடா தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இந்திய மக்களுக்கு பாதுகாப்பான கார்கள்... டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பாராட்டிய ரத்தன் டாடா...

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணத்தையும், 4 மில்லியன் கார்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை எட்டியதையும் விவரிக்கும் சிறப்பு காணொளி ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. ரத்தன் டாடா தற்போது டிவிட்டரில் அதனை பகிர்ந்துள்ளார். அத்துடன் ''4 மில்லியன் கார்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை எட்டியதற்காக வாழ்த்துக்கள்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இந்திய மக்களுக்கு பாதுகாப்பான கார்கள்... டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பாராட்டிய ரத்தன் டாடா...

எதிர்கால திட்டங்கள் அனைத்தும் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்'' என கூறியுள்ளார். ரத்தன் டாடா தற்போது பகிர்ந்துள்ள காணொளி ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டிருந்தது.

புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 ரிவியூ... ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன? விரிவாக அலசும் வீடியோ!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பாதுகாப்பான கார்களை தயாரிப்பது குறித்து இந்த காணொளியில் அடிக்கோடிட்டு காட்டப்பட்டிருந்தது. அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் டியாகோ, டிகோர், நெக்ஸான், அல்ட்ராஸ் மற்றும் ஹாரியர் உள்ளிட்ட கார்கள் பற்றியும் இந்த காணொளியில் எடுத்துரைக்கப்பட்டிருந்தது.

இந்திய மக்களுக்கு பாதுகாப்பான கார்கள்... டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பாராட்டிய ரத்தன் டாடா...

பயணிகள் வாகன செக்மெண்ட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில்தான் மூன்றாவது இடத்தை பிடித்தது. தற்போது மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பாதுகாப்பான கார்களை மக்களுக்கு வழங்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இந்திய மக்களுக்கு பாதுகாப்பான கார்கள்... டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பாராட்டிய ரத்தன் டாடா...

இதன் காரணமாக குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா நிறுவனத்தின் கார்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன. குளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக கைப்பற்றிய முதல் 'மேட் இன் இந்தியா' கார் என்ற பெருமையை பெற்றது டாடா நிறுவனத்தின் நெக்ஸான்தான்.

இந்திய மக்களுக்கு பாதுகாப்பான கார்கள்... டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பாராட்டிய ரத்தன் டாடா...

அதன் பிறகு டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் காரும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றது. தற்போதைய நிலையில் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற இரண்டு கார்களை கைவசம் வைத்திருக்கும் ஒரே இந்திய நிறுவனம் டாடாதான்.

இந்திய மக்களுக்கு பாதுகாப்பான கார்கள்... டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பாராட்டிய ரத்தன் டாடா...

இதுதவிர டாடா நிறுவனத்தின் டியாகோ மற்றும் டிகோர் ஆகிய இரண்டு கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் நான்கு நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளன. இந்தியாவில் கார்கள் பாதுகாப்பாக மாறி வருவதில், டாடா நிறுவனத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்த ஒன்றாக இருந்து வருகிறது.

Most Read Articles
English summary
Ratan Tata Congratulates Tata Motors - Here Is Why. Read in Tamil
Story first published: Monday, November 23, 2020, 20:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X