ரெனோ கார்களுக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்... விபரம்

புத்தாண்டை முன்னிட்டு ரெனோ கார்களுக்கு ரூ.2 லட்சம் வரை சிறப்பு சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ரெனோ கார்களுக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்... விபரம்

புத்தாண்டு சலுகை

புத்தாண்டு பிறந்துள்ள இவ்வேளையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரெனோ கார் நிறுவனம் சிறப்பு சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும், கையில் இருக்கும் பிஎஸ்-6 கார்களை விற்றுத் தீர்க்கும் விதத்தில் இந்த சிறப்பு சேமிப்புச் சலுகைகள் அமைந்துள்ளன.

ரெனோ கார்களுக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்... விபரம்

ரெனோ க்விட்

ரெனோ க்விட் காருக்கு விலையில் ரூ.45,000 தள்ளுபடி சலுகையை வாடிக்கையாளர்கள் பெறும் வாய்ப்பு உள்ளது. மேலும், ரூ.10,000 மதிப்புடைய லாயல்டி போனஸ் மற்றும் கார்ப்பரேட் போனஸ் ரூ.4,000 ஆகியவற்றையும் பெற முடியும். தவிரவும், பூஜ்ய வட்டி விகிதி திட்டம், 4 ஆண்டுகள் அல்லது 1,00,000 கிமீ தூரத்திற்கான வாரண்டி ஆகியவற்றையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

ரெனோ கார்களுக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்... விபரம்

ரெனோ ட்ரைபர்

ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி காருக்கு ரூ.20,000 மதிப்புடைய லாயல்டி போனஸ் சலுகையை ரெனோ வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்த கார் ரூ.4.95 லட்சம் என்ற மிக சவாலான விலையில் கிடைக்கிறது. இந்த காரை வாங்க விரும்பும் ரெனோ வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு லாயல்டி போனஸ் திட்டத்தில் இந்த சலுகையை பெற்றுக் கொள்ள முடியும்.

ரெனோ கார்களுக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்... விபரம்

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் பழைய மாடலுக்கு ரூ.1.25 லட்சம் வரையிலான சிறப்புச் சேமிப்பு சலுகைகளையும், ரூ.20,000 லாயல்டி போனஸ் மற்றும் ரூ.10,000 கார்ப்பரேட் போனஸாக பெற முடியும். இந்த காருக்கு 8.99 சதவீத வட்டி விகித கடன் திட்டத்தை பெறும் வாய்ப்புள்ளது.

ரெனோ கார்களுக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்... விபரம்

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் டீசல் மாடலின் ஆர்எக்ஸ்எஸ் வேரியண்ட்டுகளின் விலை அதிபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதர டீசல் வேரியண்ட்டுகளுக்கு ரூ.50,000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அத்துடன், ரூ.20,000 லாயல்டி போனஸ் மற்றும் ரூ.10,000 கார்ப்பரேட் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த காருக்கு 8.99 சதவீத வட்டி விகித கடன் திட்டத்தில் வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.

ரெனோ கார்களுக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்... விபரம்

ரெனோ லாட்ஜி

ரெனோ லாட்ஜி எம்பிவி காரின் அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் ரூ.2 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கார்ப்பரேட் போனஸாக ரூ.10,000 வழங்கப்படுகிறது. இந்த கார் ரூ.8.63 லட்சம் விலையில் கிடைக்கிறது. இந்த காரின் விற்பனை நிறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரெனோ கார்களுக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்... விபரம்

ரெனோ கேப்ச்சர்

ரெனோ கேப்ச்சர் எஸ்யூவி காருக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடியும், ரூ.20,000 லாயல்டி போனசாகவும், ரூ.10,000 கார்ப்பரேட் போனஸ் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த கார் ரூ.9.49 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது.

ரெனோ கார்களுக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்... விபரம்

சலுகை காலம்

ஜனவரி 31 வரை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் மற்றும் ரெனோ கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலே குறிப்பிட்ட சலுகைகள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெனோ கார்களுக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்... விபரம்

நிபந்தனைகள்

மேற்கண்ட சிறப்பு சேமிப்புச் சலுகைகள் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில யூனியன் பிரதேசங்களுக்கு இந்த சிறப்புச் சலுகைகள் பொருந்தாது.

ரெனோ கார்களுக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்... விபரம்

கூடுதல் விபரங்கள்

இருப்பில் உள்ள பிஎஸ்-4 கார்களுக்கு இந்த சேமிப்புச் சலுகைகள் பொருந்தும். எனவே, டீலருக்கு டீலர் இந்த சலுகைகள் மாறுபடலாம். எனவே, அருகாமையிலுள்ள டீலரை தொடர்பு கொண்டு விரிவானத் தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு ரெனோ நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 16, 2020, 10:45 [IST]
English summary
French car maker, Renault has announced new year offers for its entire range of cars upto 2 lakh.
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+