தள்ளுபடி சலுகைகளுடன் ரெனோ கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம்!

சிறப்பு சேமிப்பு சலுகைகளுடன் ரெனோ கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

தள்ளுபடிகளுடன் ரெனோ கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம்!

கொரோனா பாதிப்பு காரணமாக, பலத்த அடி வாங்கி இருக்கும் கார் சந்தை சற்றே மெல்ல எழுந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில், வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பு சலுகைகளையும், திட்டங்களையும் கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

தள்ளுபடிகளுடன் ரெனோ கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம்!

அந்த வகையில், ரெனோ கார் நிறுவனம் Welcome Back என்ற பெயரில் தனது கார்களுக்கான பரிசோதனை முகாமை அறிவித்துள்ளது. நேற்று முதல் வரும் 26ந் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெனோ கார் சர்வீஸ் மையங்களிலும் இந்த சர்வீஸ் முகாம் நடக்க இருக்கிறது.

தள்ளுபடிகளுடன் ரெனோ கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம்!

இந்த சர்வீஸ் முகாமில் பங்கு கொண்டு கார்களை சர்வீஸ் செய்யும் உரிமையாளர்கள் குறிப்பிட்ட ஆக்சஸெரீகள் மீது 50 சதவீதம் வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு உள்ளது. உதிரிபாகங்களுக்கு 15 சதவீதம் வரை தள்ளுபடியும் பெறலாம்.

தள்ளுபடிகளுடன் ரெனோ கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம்!

அதேபோன்று, எஞ்சின் ஆயில் மாற்றுவோருக்கு 5 சதவீத கழிவும், குறிப்பிட்ட சிறப்பு ஆக்சஸெரீகளுக்கு 5 சதவீதம் வரை தள்ளுபடியும் பெற முடியும். லேபர் கட்டணத்தில் 15 சதவீத கழிவு வழங்கப்படும் என்றும் ரெனோ தெரிவித்துள்ளது.

தள்ளுபடிகளுடன் ரெனோ கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம்!

ரெனோ செக்யூர் என்ற கூடுதல் வாரண்டி திட்டத்தை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதவிர்த்து, கூடுதலாக வழங்கப்படும் சில சிறப்பு திட்டங்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாக ரெனோ தெரிவித்துள்ளது.

தள்ளுபடிகளுடன் ரெனோ கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம்!

வெல்கம் பேக் பரிசோதனை முகாமில் கார்களை சர்வீஸ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளையும் வழங்குவதாக ரெனோ தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து டீலர்களிலும் அதீத பாதுகாப்பு வழிமுறைகள் கையாளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

தள்ளுபடிகளுடன் ரெனோ கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம்!

தற்போது ரெனோ கார் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 370 விற்பனை நிலையங்களும், 450 சர்வீஸ் மையங்களும் உள்ளன. அனைத்து சர்வீஸ் மையங்களிலும் இந்த சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை உங்கள் அருகாமையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ரெனோ சர்வீஸ் மையத்தை தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெறலாம்.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault has announced special car service camp called as Welcome Back sheme with several offers in India
Story first published: Wednesday, July 15, 2020, 10:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X