தீபாவளி ஆஃபர்... ரெனோ கார்கள் மீது ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்!

தீபாவளி பண்டிகை நெருங்கி விட்ட நிலையில், ரெனோ கார்கள் மீது ரூ.1 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 தீபாவளி ஆஃபர்... ரெனோ கார்கள் மீது ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி சலுகைககள்!

நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளின்போது கார் விற்பனை அமோகமாக இருப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளை இந்த பண்டிகை காலத்தை வைத்து சரிசெய்யும் முயற்சிகளில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதற்காக, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு ஆஃபர்களை அள்ளி வழங்கி வருகின்றன.

 தீபாவளி ஆஃபர்... ரெனோ கார்கள் மீது ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி சலுகைககள்!

இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு கார் வாங்குவோரை குறிவைத்து ரெனோ கார் நிறுவனம் சிறப்பு சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சேமிப்பை பெறும் வாய்ப்புள்ளது.

 தீபாவளி ஆஃபர்... ரெனோ கார்கள் மீது ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி சலுகைககள்!

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிக்கு ரூ.1 லட்சம் வரை சேமிப்பு பெறும் வாய்ப்புள்ளது. இதில், ரூ.70,000 சேமிப்புச் சலுகைகளும், ரூ.30,000 வரை கார்ப்பரேட் போனசாகவும் பெறும் வாய்ப்புள்ளது. இந்த ஆஃபர் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலுக்கு பொருந்தும்.

 தீபாவளி ஆஃபர்... ரெனோ கார்கள் மீது ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி சலுகைககள்!

ரெனோ டஸ்ட்டர் டர்போ

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் அதிசக்திவாய்ந்த 1.3 லிட்டர் மாடலுக்கு ரூ.45,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு உள்ளது. மேலும், 3 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ தூரத்திற்கான சிறப்பு பராமரிப்பு பேக்கேஜும் வழங்கப்படுகிறது. இந்த மாடலுக்கு ரூ.30,000 வரை கார்ப்பரேட் போனஸ் சலுகையாக பெறலாம். ஊரகப் பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சேமிப்புச் சலுகையும் வழங்கப்படுகிறது. ரெனோ டஸ்ட்டர் ரூ.8.59 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கிறது.

 தீபாவளி ஆஃபர்... ரெனோ கார்கள் மீது ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி சலுகைககள்!

ரெனோ க்விட்

ரெனோ க்விட் காருக்கு ரூ.40,000 வரை நேரடி தள்ளுபடியாகவும், ரூ.9,000 வரை கார்ப்பரேட் போனஸாக பெறும் வாய்ப்புள்ளது. மொத்தமாக ரூ.49,000 சேமிப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும். கூடுதலாக ரூ.10,000 லாயல்டி போனஸாக பெறும் வாய்ப்பு இருக்கிறது. விவசாயிகள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு ரூ.5,000 வரை கூடுதல் சேமிப்புச் சலுகை கொடுக்கப்படுகிறது. ரூ.3 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கிறது.

 தீபாவளி ஆஃபர்... ரெனோ கார்கள் மீது ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி சலுகைககள்!

ரெனோ ட்ரைபர்

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி காருக்கு ரூ.39,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். இதில், ரூ.30,000 வரை நேரடி தள்லுபடியாகவும், ரூ.9,000 வரை கார்ப்பரேட் போனசாகவும் பெற முடியும். இந்த காருக்கு கூடுதலாக 3.99 சதவீதம் என்ற மிக குறைவான வட்டி விகிதத்தில் சிறப்புச் சேமிப்பை பெறும் வாய்ப்பும் உள்ளது. ரெனோ ட்ரைபர் ரூ.5.12 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கிறது.

 தீபாவளி ஆஃபர்... ரெனோ கார்கள் மீது ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி சலுகைககள்!

புதிய ரெனோ கார்களுக்கான இந்த சேமிப்புச் சலுகைகள் தீபாவளி பண்டிகையையொட்டி முன்பதிவு செய்வோருக்கு அதிக மதிப்பை வழங்கும். இந்த ஆஃபர் தொடர்பான விபரங்களை அருகிலுள்ள ரெனோ கார் டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault is offering up to Rs.1 lakh discount and benefits of its cars in the occasion of this Diwali festival.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X