ரெனோ கார்களுக்கான சிறப்பு சேமிப்புச் சலுகைகள் விபரம்!

கார் விற்பனையை மீண்டும் எழுச்சிப் பெற செய்யும் விதமாக வாடிக்கையாளர்களை கவர்வதற்கு ரெனோ கார்களுக்கு பல சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

ரெனோ கார்களுக்கான சிறப்பு சேமிப்புச் சலுகைகள் விபரம்!

கொரோனா ஊரடங்கு காரணமாக, கார் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் முயற்சிகளில் கார் நிறுவனங்கள் இறங்கி உள்ளன. வேலை இழப்பு அச்சம், பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றால் வாடிக்கையாளர்கள் காட்டும் தயக்கத்தை மனதில் வைத்து, இந்த சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் மூலமாக விற்பனையை ஏற்றம் பெற செய்ய யுக்தியை கையில் எடுத்துள்ளன.

ரெனோ கார்களுக்கான சிறப்பு சேமிப்புச் சலுகைகள் விபரம்!

அந்த வகையில், ரெனோ கார் நிறுவனம் தனது கார்களுக்கு சிறப்புச் சேமிப்புச் சலுகைகளை வழங்குகிறது. விலையில் நேரடி சேமிப்புச் சலுகை, பழைய காரை மாற்றி புதிய கார் வாங்குவோருக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்டி போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவற்றுடன் அதிகபட்சமான சேமிப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

ரெனோ கார்களுக்கான சிறப்பு சேமிப்புச் சலுகைகள் விபரம்!

இதுதவிர்த்து, சிறப்பு கடன் திட்டங்களையும் ரெனோ வழங்குகிறது. இப்போது வாங்குங்கள்; பின்னர் கட்டுங்கள் என்ற கடன் திட்டத்தில், புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு மாதத் தவணை இல்லா கடன் திட்டமும் உள்ளது. ஒவ்வொரு மாடலுக்கும் வழங்கப்படும் சலுகைகளை தொடர்ந்து பார்க்கலாம்.

ரெனோ கார்களுக்கான சிறப்பு சேமிப்புச் சலுகைகள் விபரம்!

ரெனோ க்விட்

ரெனோ நிறுவனத்தின் விலை குறைவான க்விட் காருக்கு ரூ.35,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்புள்ளது. நேரடி தள்ளுபடியாக ரூ.10,000, எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.15,000 மற்றும் லாயல்டி போனஸாக ரூ.10,000 வரை பெற முடியும். ஊரகப் பகுதி வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,000 தள்ளுபடி பெறும் வாய்ப்புள்ளது. இந்த காருக்கு ரூ.8.99 சதவீத வட்டியில் கடன் திட்டமும் உள்ளது. இந்த கார் ரூ.2.92 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

ரெனோ கார்களுக்கான சிறப்பு சேமிப்புச் சலுகைகள் விபரம்!

ரெனோ ட்ரைபர்

ரெனோ நிறுவனத்தின் மினி எம்பிவி கார் மாடலாக விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது. மிக குறைவான பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த 7 சீட்டர் மாடலாக மதிப்பை பெற்றிருக்கிறது. இந்த காருக்கு ரூ.30,000 வரை சேமிப்பு பெற முடியும். ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 லாயல்டி போனஸ் பெறும் வாய்ப்புள்ளது. மேலும், கார்ப்பரேட் போனஸ் அல்லது ஊரக பகுதி வாடிக்கையாளர்கள் ரூ.10,000 தள்ளுபடி பெறும் வாய்ப்பும் உள்ளது. ரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

ரெனோ கார்களுக்கான சிறப்பு சேமிப்புச் சலுகைகள் விபரம்!

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிக்கு ரூ.60,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. இதில், ரூ.15,000 விலையில் தள்ளுபடி, ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் ோபனஸ் மற்றும் ரூ.20,000 லாயல்டி போனஸ் பெறும் வாய்ப்புள்ளது. கார்ப்பரேட் போனஸ் அள்லது ஊரகப் பகுதி வாடிக்கையாளர்கள் ரூ.10,000 வரை தள்ளுபடி பெற முடியும். இந்த கார் ரூ.8.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கிறது.

ரெனோ கார்களுக்கான சிறப்பு சேமிப்புச் சலுகைகள் விபரம்!

ரெனோ க்விட், ட்ரைபர், டஸ்ட்டர் கார்களுக்கான இந்த சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை தருவதாக அமையும். வரும் 31ந் தேதி வரை கார்களை முன்பதிவு செய்வோருக்கு இந்த சேமிப்புச் சலுகைகள் பொருந்தும். இந்த தள்ளுபடி சலுகைகள் டீலருக்கு டீலர் மாறுபடலாம். கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள ரெனோ டீலர்களை அணுகுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 12, 2020, 11:28 [IST]
English summary
Renault India has announced discounts and offers on select models in the brand's line-up. The models covered under the scheme are the Duster, Kwid, and the Triber MPV. The discount offers are valid until May 31, 2020.
மேலும்... #ரினால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+