செம பவர்ஃபுல் எஞ்சினுடன் புதிய ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

செம பவர்ஃபுல் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் காணலாம்.

பவர்ஃபுல் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் முதலாவதாக அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி ஆரம்பத்தில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்ற மாடலாக இருந்து வந்தது. இந்த நிலையில், அடுத்தடுத்து பல புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல்கள் வந்ததால், டஸ்ட்டர் மார்க்கெட் வலுவிழந்தது. இதனை சரிகட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறது ரெனோ கார் நிறுவனம்.

பவர்ஃபுல் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், டஸ்ட்டர் எஸ்யூவியின் மதிப்பை கூட்டி, வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், அதிசக்திவாய்ந்த டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

பவர்ஃபுல் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 254 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

பவர்ஃபுல் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ரெனோ டஸ்ட்டர் 1.3 லிட்டர் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலானது லிட்டருக்கு 16.5 கிமீ மைலேஜையும், சிவிடி மாடல் லிட்டருக்கு 16.42 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவர்ஃபுல் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

சாதாரண பிஎஸ்6 பெட்ரோல் மாடலில் இருந்து வேறுபடுத்தும் விதத்தில், முன்புற க்ரில் அமைப்பில் க்ரிம்ஸன் ரெட் என்ற விசேஷ சிவப்பு வண்ணம் தீட்டப்பட்டு தனித்துவப்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய முன்புற பம்பர், ரூஃப் ரெயில்கள், பனி விளக்குகள், கவர்ச்சிகரமான அலாய் வீல்கள், பின்புற கதவில் சிவப்பு வண்ண எழுத்துக்களுடன் நேம் பிளேட், பேட்ஜ்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பவர்ஃபுல் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த மாடலில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், அர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம், எஞ்சின் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதி ஆகியவைய இடம்பெற்றுள்ளன.

பவர்ஃபுல் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ரெனோ டஸ்ட்டர் டர்போ பெட்ரோல் மாடலில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.

பவர்ஃபுல் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ரெனோ டஸ்ட்டர் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலானது RXE, RXS மற்றும் RXZ ஆகிய மூன்று மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளிலும், RXS, RXZ ஆகிய இரண்டு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மேனுவல் மாடல் ரூ.10.49 லட்சம் முதல் ரூ.11.99 லட்சம் வரையிலும், ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.12.99 லட்சம் முதல் ரூ.13.59 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் வந்துள்ளது.

பவர்ஃபுல் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய எஞ்சின் மூலமாக காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியை தொடர்ந்து, மிகவும் சக்திவாய்ந்த மாடல்களில் ஒன்றாக முன்னிலை பெறுகிறது. நிஸான் கிக்ஸ் எஸ்யூவியிலும் இதே எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் பிஎஸ்-6 தரத்திற்கு நிகரான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் ஏற்கனவே விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த எஞ்சின் 105 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, August 17, 2020, 12:05 [IST]
English summary
Renault has launched Duster with 1.3 Turbo-Petrol engine option in India and prices starting at Rs.10.49 Lakh (Ex-Showroom).
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+