அதிகம் விற்பனையாகும் மின்சார காரில் புதிய தேர்வை அறிமுகம் செய்த ரெனால்ட்... இது கூடுதல் ரேஞ்ஜை வழங்குமாம்!

ஐரோப்பாவில் அதிகம் விற்பனையாகக் கூடிய ஜோயி மின்சார காரில் புதிய ட்ரிம்மை ரெனால்ட் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அதிகம் விற்பனையாகும் மின்சார காரில் புதிய தேர்வை அறிமுகம் செய்த ரெனால்ட்... இது கூடுதல் ரேஞ்ஜை வழங்குமாம்!

கடந்த பிப்ரவரி மாதத்தில் 2020ம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ இந்தியாவில் நடைபெற்றது. இந்த வாகன கண்காட்சியிலேயே ரெனால்ட் நிறுவனம் அதன் புகழ்பெற்ற ஜோயி மின்சார காரை நாட்டில் முதல் முறையாக காட்சிப்படுத்தியது. இக்காரின் தேர்வையேக் கூடுதலாக்குகின்ற வகையில் புதிய வேரியண்ட் ஒன்றை ரெனால்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிகம் விற்பனையாகும் மின்சார காரில் புதிய தேர்வை அறிமுகம் செய்த ரெனால்ட்... இது கூடுதல் ரேஞ்ஜை வழங்குமாம்!

புதிய ஜோயி வென்சர் ட்ரிம்மின் புகைப்படம்.

வென்சர் எனும் புதிய வேரியண்டே அது அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ப்ளே மற்றும் ஐகானிக் ஆகிய ட்ரிம்களுக்கு இடையில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. புதிய வென்சர் ட்ரிம்மில் ஆர்110 மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதிகம் விற்பனையாகும் மின்சார காரில் புதிய தேர்வை அறிமுகம் செய்த ரெனால்ட்... இது கூடுதல் ரேஞ்ஜை வழங்குமாம்!

இத்துடன், 52kW திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை 80 சதவீதம் சார்ஜ் செய்ய 1 மணி நேரம் 10 நிமிடங்களே போதும் என கூறப்படுகின்றது. மேலும், இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜில் 395 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம்.

அதிகம் விற்பனையாகும் மின்சார காரில் புதிய தேர்வை அறிமுகம் செய்த ரெனால்ட்... இது கூடுதல் ரேஞ்ஜை வழங்குமாம்!

இத்தகைய சிறப்பு வசதி கொண்ட புதிய ஜோயி வென்சர் ட்ரிம்மையே ரெனால்ட் சேர்த்திருக்கின்றது. ரெனால்ட் நிறுவனம் அண்மையில்தான் இந்திய சாலையில் வைத்து பரிசோதனை ஓட்டம் செய்தது. ஆனால், இக்கார் இந்தியாவில் விற்பனைக்கு வருமா என்பது சந்தேகமே.

அதிகம் விற்பனையாகும் மின்சார காரில் புதிய தேர்வை அறிமுகம் செய்த ரெனால்ட்... இது கூடுதல் ரேஞ்ஜை வழங்குமாம்!

அதேசமயம், இக்காருக்கு பதிலாக ரெனால்ட் க்விட் மின்சார காரை அது அறிமுகம் செய்ய இருக்கின்றது. ரெனால்ட் நிறுவனம் ஜோயி மின்சார காரை பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே தற்போது விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இது ஐரோப்பியாவின் மிக சிறந்த விற்பனையாகும் மின்சார காராகும்.

அதிகம் விற்பனையாகும் மின்சார காரில் புதிய தேர்வை அறிமுகம் செய்த ரெனால்ட்... இது கூடுதல் ரேஞ்ஜை வழங்குமாம்!

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் கடந்த காலத்தைக் காட்டிலும் 2020ல் இரு மடங்கு கூடுதல் விற்பனையைப் பெற்றிருக்கின்றது. இந்த அதீத வரவேற்பைத் தொடர்ந்தே புதிய ட்ரிம்மான வென்சரை ஜோயி மின்சார காரில் ரெனால்ட் சேர்த்திருக்கின்றது.

அதிகம் விற்பனையாகும் மின்சார காரில் புதிய தேர்வை அறிமுகம் செய்த ரெனால்ட்... இது கூடுதல் ரேஞ்ஜை வழங்குமாம்!

இக்காரில் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளாக 7 இன்ச் அளவிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எல்இடி மின் விளக்குகள், சிறப்பு இணைப்பு வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இச்சிறப்பு வசதிக் கொண்ட மின்சார காரை ஜனவரி மாதத்தின் மத்தியில் இருந்து விற்பனைக்கு வழங்க இருப்பதாக ரெனால்ட் அறிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 31, 2020, 18:49 [IST]
English summary
Renault Launches New Zoe Venture Edition In Europe. Read in Tamil.
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+