ரெனால்ட் எச்பிசி எஸ்யூவி முதன்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...

ரெனால்ட் இந்தியா நிறுவனம் புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலை இந்திய சந்தைக்கு ஏற்ற விதத்தில் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. எச்பிசி என்கிற பெயரில் ஏற்கனவே சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற இந்த எஸ்யூவி கார் தற்போது இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டபோது கண்டறியப்பட்டுள்ளது.

ரெனால்ட் எச்பிசி எஸ்யூவி முதன்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...

முதன்முறையாக இந்தியாவில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகமாகுவதற்கு இன்னும் நீண்ட மாதங்கள் ஆகும் என தெரிகிறது. ஆனால் இந்த ரெனால்ட் மாடல் இந்த வருடத்தின் பிற்பகுதியில் அறிமுகமாகவுள்ளதாகவும், விரைவில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ரெனால்ட் எச்பிசி எஸ்யூவி முதன்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...

ரெனால்ட் நிறுவனமும் நிஸான் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய சிஎம்எஃப்-ஏ+ கட்டமைப்பில் தயாராகும் மூன்றாவது மாடல் காராக இந்த எஸ்யூவி விளங்குகிறது. இதே பாணியில் நிஸான்/டட்சன் கூட்டணியிலும் சில மாடல்களின் அறிமுகத்தை இனி வருங்காலங்களில் எதிர்பார்க்கலாம்.

ரெனால்ட் எச்பிசி எஸ்யூவி முதன்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...

இந்த சிஎம்எஃப்-ஏ+ கட்டமைப்பில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாடல் ரெனால்ட் ட்ரைப்பர். 7 இருக்கை அமைப்புகளில் உருவாக்கப்பட்டிருந்த ட்ரைப்பர் மாடல் இந்த கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருந்ததால், நான்கு மீட்டர் நீளத்தை பெற்றிருந்தது.

ரெனால்ட் எச்பிசி எஸ்யூவி முதன்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...

சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த எஸ்யூவி கார், ரெனால்ட் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுக மாடல்களான ட்ரைப்பர் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட க்விட் மாடல்களுடன் சில வெளிப்புற டிசைன்களில் ஒத்துள்ளது. இதனால் இந்த கார் இந்திய அறிமுகத்தின்போது கிட்டத்தட்ட க்விட் தோற்றத்தை தான் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட் எச்பிசி எஸ்யூவி முதன்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...

என்ஜின் பாகங்களை பார்த்தோமேயானால், இந்த எச்பிசி மாடலில் புதிய மூன்று-சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த என்ஜின் காரின் அளவிற்கு ஏற்ப 95 பிஎச்பி வரையில் ஆற்றலை வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது.

ரெனால்ட் எச்பிசி எஸ்யூவி முதன்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...

சப்-4-மீட்டர் எஸ்யூவியின் பிரிவில் முக்கியமான இடத்தை இந்த எச்பிசி மாடல் பிடிக்கும் வேண்டும் என்பதற்காக, இதன் டாப் வேரியண்ட்டிற்கான பெரிய எச்ஆர்13 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தயாரிப்பு வேலையிலும் ரெனால்ட் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. ஏனெனில் இந்த சப்-4-மீட்டர் பிரிவில் டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 போன்ற பிரபலமான மாடல் கார்கள் உள்ளன.

மற்றப்படி இந்த மாடலின் டீசல் வேரியண்ட் கார் பற்றிய எந்த தகவலும் இல்லை. ஆனால் இந்திய சந்தையில் குறிப்பாக எஸ்யூவி கார்களில் பெட்ரோல் வேரியண்ட்டை தான் வாடிக்கையாளர்கள் தற்சமயம் அதிகம் தேர்ந்தெடுத்து வருகின்றனர். இதனால் இந்த எச்பிசி எஸ்யூவி மாடல் கூடுதலாக 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் அறிமுகமாகவுள்ளது.

ரெனால்ட் எச்பிசி எஸ்யூவி முதன்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...

இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 72 பிஎச்பி பவரையும் 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக ட்ரைப்பர் மற்றும் க்விட் மாடல்களில் கொடுக்கப்பட்டுள்ள மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்புகள் வழங்கப்படவுள்ளன.

ரெனால்ட் எச்பிசி எஸ்யூவி முதன்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...

வெளிநாட்டு சந்தைகளில் எச்ஆர்10 என்ற கூடுதல் பெயருடன் விற்பனையாகி வருகின்ற இந்த காரை பற்றிய எந்தவொரு தகவலையும் ரெனால்ட் நிறுவனம் இதுவரை வெளியிடாததால் இந்த புதிய எஸ்யூவி காரின் இந்திய அறிமுக தேதி, விலை பற்றிய எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. எப்படியிருந்தாலும் வென்யூ, நெக்ஸான், விட்டாரா பிரெஸ்ஸா போன்ற முன்னணி மாடல்களுடன் போட்டியிடும் வகையில் தான் விலையை பெறும்.

Source: Power Stroke PS/YouTube

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault HBC compact SUV spied ahead of Auto Expo unveil
Story first published: Saturday, January 11, 2020, 18:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X