இந்த காரை பாக்கும்போதே வாங்கணும் போல இருக்கே... ரொம்ப கம்மி விலையில் வரப்போகுது... எவ்ளோனு தெரியுமா?

புதிய ரெனால்ட் கிகர் கார் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும்? என்பது உள்பட அந்த கார் பற்றிய பல்வேறு தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த காரை பாக்கும்போதே வாங்கணும் போல இருக்கே... ரொம்ப கம்மி விலையில் வரப்போகுது... எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் கடந்த டிசம்பர் 2ம் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விற்பனைக்கு வந்த வெறும் 5 நாட்களுக்கு உள்ளாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை நிஸான் மேக்னைட் பெற்றுள்ளது.

இந்த காரை பாக்கும்போதே வாங்கணும் போல இருக்கே... ரொம்ப கம்மி விலையில் வரப்போகுது... எவ்ளோனு தெரியுமா?

அடுத்ததாக ரெனால்ட் நிறுவனமும் இந்த செக்மெண்ட்டில் புதிய காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. ரெனால்ட் நிறுவனம் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு, கிகர் என்ற சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட்டை வெளியிட்டது. இதன் தயாரிப்பு நிலை வெர்ஷன், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த காரை பாக்கும்போதே வாங்கணும் போல இருக்கே... ரொம்ப கம்மி விலையில் வரப்போகுது... எவ்ளோனு தெரியுமா?

இதனை தொடர்ந்து 2021ம் ஆண்டின் முதல் பாதியில் ரெனால்ட் கிகர் காம்பேக்ட் எஸ்யூவி கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிகர் காரின் தயாரிப்பு நிலை வெர்ஷனின் டிசைன் அம்சங்கள், கான்செப்ட் மாடலை 80 சதவீதம் ஒத்திருக்கும் என ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே கூறியிருப்பது வாடிக்கையாளர்களின் ஆவலை அதிகரிக்க செய்துள்ளது.

இந்த காரை பாக்கும்போதே வாங்கணும் போல இருக்கே... ரொம்ப கம்மி விலையில் வரப்போகுது... எவ்ளோனு தெரியுமா?

இது உண்மையில் நல்ல விஷயம். ஏனெனில் ஒரு காரின் தயாரிப்பு நிலை வெர்ஷன், கிட்டத்தட்ட கான்செப்ட் மாடலை ஒத்திருப்பது என்பது மிகவும் அரிதாக நடக்க கூடிய நிகழ்வு. ரெனால்ட் கிகர் காம்பேக்ட் எஸ்யூவி, பிளாட்பார்ம் மற்றும் இன்ஜின் தேர்வுகளை நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவியுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளது.

இந்த காரை பாக்கும்போதே வாங்கணும் போல இருக்கே... ரொம்ப கம்மி விலையில் வரப்போகுது... எவ்ளோனு தெரியுமா?

எனவே ரெனால்ட் கிகர் காம்பேக்ட் எஸ்யூவியில் இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படும். டீசல் இன்ஜின் தேர்வு இருக்காது. இதன்படி நிஸான் மேக்னைட் காரில் வழங்கப்படும் அதே 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் மூன்று-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வை ரெனால்ட் கிகர் காரும் பெறவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

இந்த காரை பாக்கும்போதே வாங்கணும் போல இருக்கே... ரொம்ப கம்மி விலையில் வரப்போகுது... எவ்ளோனு தெரியுமா?

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர 1.0 லிட்டர் மூன்று-சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் ரெனால்ட் கிகர் பெறவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரை பாக்கும்போதே வாங்கணும் போல இருக்கே... ரொம்ப கம்மி விலையில் வரப்போகுது... எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஏற்கனவே கியா சொனெட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த சூழலில் நிஸான் மேக்னைட் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இந்த செக்மெண்ட்டில் போட்டி அதிகரித்துள்ளது.

இந்த காரை பாக்கும்போதே வாங்கணும் போல இருக்கே... ரொம்ப கம்மி விலையில் வரப்போகுது... எவ்ளோனு தெரியுமா?

இந்த சூழலில், ரெனால்ட் கிகர் காரின் வருகை இந்த செக்மெண்ட்டில் போட்டியை இன்னும் அதிகரிக்க செய்யலாம். ஏனெனில் 6 லட்ச ரூபாய் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் ரெனால்ட் கிகர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 9, 2020, 16:55 [IST]
English summary
Renault Kiger Compact SUV India Launch Details, Expected Price. Read in Tamil
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+