2021க்கு தள்ளிப்போகிறதா ரெனால்ட் கிகர்...? புதிய தகவல் வெளியானது..!
ரெனால்ட் நிறுவனம் அதன் புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடலான புதிய கிகர் காரின் அறிமுகத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அடுத்த ஆண்டில் தான் அறிமுகமாகும் என கூறப்படுகின்ற இந்த புதிய ரெனால்ட் எஸ்யூவி காரை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த நிலையில் தான் தற்போது இந்த புதிய ரெனால்ட் அடுத்த ஆண்டில் தான் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. புதிய கிகர் மாடல் இந்நிறுவனத்தின் சிஎம்எஃப்-ஏ+ ப்ளாட்ஃபாரத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிஸான் நிறுவனத்துடன் ரெனால்ட் நிறுவனம் கொண்டுள்ள கூட்டணியின் விளைவாக உருவாகிய இந்த ப்ளாட்ஃபாரத்தில் தயாராகும் மூன்றாவது மாடலாக இது விளங்குகிறது. இந்த காரின் கடந்த சில சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் புதிய கிகர் மாடல் டிசைன் அமைப்புகளை அப்டேட் செய்யப்பட்ட க்விட் மாடலில் இருந்து பெற்றுள்ளதை வெளிப்படுத்தி இருந்தன.

இதனால் க்விட் மாடலுடன் ஒத்த மெல்லியதான முக்கோண வடிவிலான விளக்குகளுடன் ட்வின்-ஸ்லாட் க்ரில் மற்றும் முன்புற பம்பரில் தாழ்வாக பொருத்தப்பட்ட ட்ரை-பேட் ஹெட்லேம்ப்களை இந்த கார் கொண்டிருக்கலாம். இயக்க ஆற்றலுக்கு கிகர் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 95 பிஎச்பி பவரை காருக்கு வழங்குவல்லது. மேலும் இந்த என்ஜின் உடன் 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வும் வழங்கப்படவுள்ளது. ஆனால் இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வு இந்த புதிய மாடலின் டாப் வேரியண்ட்களுக்கு மட்டும் தான் கொடுக்கப்பட உள்ளது.

சப்-4 மீட்டர் பிரிவில் இந்த கார் டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 போன்ற பிரபலமான மாடல்களுடன் போட்டியிடவுள்ளதால் தான் ரெனால்ட் நிறுவனம் கிகர் மாடலுக்கு கூடுதல் என்ஜின் தேர்வுகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

இதன் டீசல் வேரியண்ட் குறித்த எந்த தகவலும் தற்போதைக்கு வெளியாகவில்லை. என்ஜின் தேர்வுகளுடன் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் வழங்கப்படவுள்ளன. கொரோனாவினால் தள்ளிப்போகும் புதிய மாடல்களில் தற்போது ரெனால்ட் கிகர் மாடலும் இணைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








