ரெனோ கிகர் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

பட்ஜெட் எஸ்யூவி வாங்க திட்டமிட்டிருப்போர் மத்தியில் ரெனோ நிறுவனத்தின் புதிய கிகர் எஸ்யூவி பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இந்த காரின் அறிமுகம் குறித்த வெளியாகி இருக்கும் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ரெனோ கிகர் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

இந்தியாவில் 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான வடிவமைக்கப்படும் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களுக்கு அதீத வரவேற்பு இருக்கிறது. எத்துனை மாடல்கள் வந்தாலும், அனைத்திற்கும் போதிய வர்த்தகம் உள்ளது. இதனால், இந்த ரகத்தில் புதிய மாடல்களை களமிறக்க அனைத்து நிறுவனங்களுமே பிரத்யேன பட்டு வருகின்றன.

ரெனோ கிகர் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

அந்த வகையில், ரெனோ கார் நிறுவனமும் இந்த சந்தையில் புதிய மாடலை களமிறக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. கிகர் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த மாடலானது பிற காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களைவிட விலை குறைவாக இருக்கும் என்பதால், வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவல் இருந்து வருகிறது.

ரெனோ கிகர் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

தற்போது ரெனோ கிகர் எஸ்யூவியின் புரோட்டோடைப் மாடல்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைத்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சாலை சோதனைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது. இதனால், விரைவில் உற்பத்திக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு உள்ளது.

ரெனோ கிகர் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

இந்தநிலையில், வரும் அக்டோபர் மாதத்தில் புதிய ரெனோ கிகர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று ஆட்டோகார் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது. கொரோனாவால் புதிய ரெனோ கிகர் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளிப் போயுள்ளது. நிலைமை சீரடைந்தால் மட்டுமே அக்டோபரில் எதிர்பார்க்க முடியும். இல்லாவிடில், நிஸான் மேக்னைட் போன்று இந்த காரின் அறிமுகத்தை அடுத்த ஆண்டு துவக்கத்திற்கு ஒத்திப்போடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

ரெனோ கிகர் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

ரெனோ - நிஸான் கூட்டணியின் சிஎம்எஃப்-ஏ ப்ளஸ் என்ற கட்டமைப்புக் கொள்கையின் கீழ்தான் இந்த புதிய ரெனோ கிகர் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி 5 சீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக வர இருக்கிறது. ரெனோ ட்ரைபர் காரும் இதே பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, ட்ரைபர் கார் போன்றே, இந்த எஸ்யூவியிலும் ஓரளவு நல்ல இடவசதியை எதிர்பார்க்கலாம்.

ரெனோ கிகர் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி காரில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த மாடலிலும் வழங்கப்படும். இந்த எஞ்சின் 95 எச்பி பவரை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனோ கிகர் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்படும் வாய்ப்புள்ளது.

ரெனோ கிகர் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

புதிய ரெனோ கிகர் எஸ்யூவி 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக இருந்தாலும், இது மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ போன்ற கார்களைவிட மிக குறைவான விலையில் நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது. ரூ.5.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 23, 2020, 11:30 [IST]
English summary
According to report, Renault is planning to launch new Kiger SUV in India by October this year.
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+