ஷோரூமிற்கு வந்தது ரெனால்ட் க்விட்டின் நியோடெக் எடிசன்... முழு காரையும் தெளிவாக காட்டும் வீடியோ இதோ..

ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் காரின் புதிய ஸ்பெஷல் எடிசனான நியோடெக் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஷோரூமிற்கு வந்தது ரெனால்ட் க்விட்டின் நியோடெக் எடிசன்... முழு காரையும் தெளிவாக காட்டும் வீடியோ இதோ...

ரெனால்ட் இந்தியா நிறுவனம் அதன் ஹேட்ச்பேக் ரக காரான க்விட் விற்பனையில் 3.5 லட்சத்தை இந்தியாவில் கடந்துள்ளதை கொண்டாடும் விதமாக அதன் ஸ்பெஷல் நியோடெக் எடிசனை 0.8 லிட்டர், 1.0 லிட்டர் மேனுவல் மற்றும் 1.0 லிட்டர் ஆட்டோமேட்டிக் என்ற தேர்வுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஷோரூமிற்கு வந்தது ரெனால்ட் க்விட்டின் நியோடெக் எடிசன்... முழு காரையும் தெளிவாக காட்டும் வீடியோ இதோ...

இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை ரூ.4.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் க்விட் ஆர்எக்ஸ்எல் ட்ரிம்மின் விலை இதனை விட ரூ.30 ஆயிரம் கூடுதலாகவும், ஏஎம்டி வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.4.83 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஷோரூமிற்கு வந்தது ரெனால்ட் க்விட்டின் நியோடெக் எடிசன்... முழு காரையும் தெளிவாக காட்டும் வீடியோ இதோ...

பல புதிய வசதிகளை பிரிவில் முதன்முறையாக கொண்டு வந்துள்ள க்விட் நியோடெக் எடிசன் கார்களில் முக்கிய சிறப்பம்சமாக ஜான்ஸ்கர் நீல நிற உடல் நிறத்தில் சில்வர் மேற்கூரை மற்றும் சில்வர் நிறத்தில் ஜான்ஸ்கர் நீல நிற மேற்கூரை என்ற ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஷோரூமிற்கு வந்தது ரெனால்ட் க்விட்டின் நியோடெக் எடிசன்... முழு காரையும் தெளிவாக காட்டும் வீடியோ இதோ...

இவை மட்டுமின்றி முன்புற க்ரில்லில் க்ரோம், கருப்பு நிறத்தில் B-பில்லர்கள் மற்றும் C-பில்லர்களில் 3டி டிகால்ஸ் உள்ளிட்டவையும் இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் நியோடெக் கதவு க்ளாடிங் மற்றும் ஃப்ளக்ஸ் சக்கரங்களையும் க்விட்டின் இந்த ஸ்பெஷல் எடிசன் பெற்றுள்ளது.

ஷோரூமிற்கு வந்தது ரெனால்ட் க்விட்டின் நியோடெக் எடிசன்... முழு காரையும் தெளிவாக காட்டும் வீடியோ இதோ...

இவை அனைத்தையும், டீலர்ஷிப்களுக்கு இந்த காரின் வந்தடைந்துள்ளது தொடர்பாக க்யானி இனாஃப் என்ற யூடியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்த வீடியோவின்படி பார்க்கும்போது, இந்த ஸ்பெஷல் எடிசன் உட்புற கேபினை வெளிப்புறத்திற்கு ஏற்ற நிறத்தில் நீல நிற ஹைலைட்களுடன் அப்கிரேட்டாக பெற்றுள்ளது.

இதன் கேபினில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்டவற்றை ஏற்கக்கூடிய 8 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், யுஎஸ்பி சார்ஜிங் சாக்கெட், ஏஎம்டி க்ரோம் டயல் போன்றவை அப்டேட்களாக அடங்குகின்றன.

ஷோரூமிற்கு வந்தது ரெனால்ட் க்விட்டின் நியோடெக் எடிசன்... முழு காரையும் தெளிவாக காட்டும் வீடியோ இதோ...

இந்த ஸ்பெஷல் எடிசனுக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று என்ஜின் தேர்வுகளில் 0.8 லிட்டர், 3-சிலிண்டர் என்ஜின் 53 பிஎச்பி மற்றும் 72 என்எம் டார்க் திறனையும், 1.0 லிட்டர், 3-சிலிண்டர் என்ஜின் 67 பிஎச்பி மற்றும் 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ஷோரூமிற்கு வந்தது ரெனால்ட் க்விட்டின் நியோடெக் எடிசன்... முழு காரையும் தெளிவாக காட்டும் வீடியோ இதோ...

இதன் 0.8 லிட்டர் என்ஜினிற்கு ஒரே ஒரு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட 1.0 லிட்டர் என்ஜின் மட்டும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என்ற ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளை பெறுகிறது. க்விட் நியோடெக் ஸ்பெஷல் எடிசன் டீலர்ஷிப் மையங்களுக்கு வந்தடைந்துள்ளதால் இவற்றின் டெலிவிரி பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்பட்டுவிடும்.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Kwid Neotech Edition Arrives At Dealer
Story first published: Friday, October 9, 2020, 2:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X