ரெனோ காம்பேக்ட் எஸ்யூவியின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகமாகிறது!
ரெனோ நிறுவனத்தின் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசர் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆட்டோ எக்ஸ்போவிற்கு பெரும்பாலான நிறுவனங்கள் ஆயத்த நிலையில் உள்ளன. மேலும், தங்களது தயாரிப்புகள் குறித்து வாடிக்கையாளர்கள் மற்றும் ஆட்டோ எக்ஸ்போ வரும் பார்வையாளர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தும் விதத்தில் தகவல்களையும், டீசர்களையும சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ தயாரிப்புகளின் டீசரை வெளியிட்டு வருகிறது. அதில், அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய டீசர் எல்லோரின் ஆவலையும் எகிறச் செய்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் தனது புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் எல்இடி பகல்நேர விளக்குகளின் ஒளியுடன் அந்த டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

புதிய ரெனோ காம்பேக்ட் எஸ்யூவி கார் மாடலானது HBC என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் கிகெர் என்ற பெயரில் தயாரிப்பு நிலை மாடலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

இந்த காம்பேக்ட் எஸ்யூவி 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டு இருக்கும் 5 சீட்டர் மாடலாக இருக்கும். ரெனோ - நிஸான் கூட்டணியின் CMF-A பிளாட்ஃபார்மில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ரெனோ ட்ரைபர் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். அதிக எரிபொருள் சிக்கனத்தை தர வல்ல, பிஎஸ்-6 எஞ்சினுடன் இந்த புதிய கார் மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உறுதியான தகவல் இதுவரை இல்லை.

இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் போன்ற பல முக்கிய வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

இந்த ஆண்டு பிற்பாதியில், பண்டிகை காலத்தையொட்டி இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுக்கு போட்டியான ரகத்தில் விலை குறைவான காம்பேக்ட் எஸ்யூவியாக நிலைநிறுத்தப்படும்.


Click it and Unblock the Notifications








