சான்ஸே இல்ல... கெத்தான காரியத்தை அசால்டாக செய்த ரெனால்ட்... என்னனு தெரியுமா?

ரெனால்ட் நிறுவனம் கெத்தான காரியத்தை அசால்டாக செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சான்ஸே இல்ல... கெத்தான காரியத்தை அசால்டாக செய்த ரெனால்ட்... என்னனு தெரியுமா?

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் கையாளும் யுக்திகள்தான் முக்கியமான காரணமாக உள்ளன. இந்தியாவில் சமீப காலமாக ஆட்டோமொபைல் துறை தடுமாறி வருகிறது. நிலைமை இப்படி இருக்கையிலும், ரெனால்ட் நிறுவனம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

சான்ஸே இல்ல... கெத்தான காரியத்தை அசால்டாக செய்த ரெனால்ட்... என்னனு தெரியுமா?

அதாவது கடந்த 2019ம் ஆண்டில் இந்திய மார்க்கெட்டில் ரெனால்ட் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சி 7.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு ரெனால்ட் நிறுவனத்தின் ட்ரைபர் கார்தான் முக்கியமான காரணம் என்றால் மிகையல்ல. இது எம்பிவி ரக கார் ஆகும். இந்திய மார்க்கெட்டில் பிரம்மாண்டமான வெற்றியை ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி ருசித்து வருகிறது.

சான்ஸே இல்ல... கெத்தான காரியத்தை அசால்டாக செய்த ரெனால்ட்... என்னனு தெரியுமா?

இந்தியாவில் சமீப ஆண்டுகளாக, குறிப்பிட்ட இடைவெளிகளில் ஏதாவது ஒரு வெற்றிகரமான தயாரிப்பை ரெனால்ட் விற்பனைக்கு கொண்டு வந்து விடுகிறது. முதலில் டஸ்டர். அதன்பின் க்விட். சமீப மாதங்களாக ட்ரைபர். இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டில் ரெனால்ட் நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் வெறும் 0.45 சதவீதமாக மட்டுமே இருந்தது.

சான்ஸே இல்ல... கெத்தான காரியத்தை அசால்டாக செய்த ரெனால்ட்... என்னனு தெரியுமா?

ஆனால் கடந்த 2019ம் ஆண்டில் இது 2.5 சதவீதமாக அதிகரித்தது. இதற்கெல்லாம் ட்ரைபர்தான் முக்கியமான காரணம். ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் எம்பிவி காரை கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அப்போது முதல் ரெனால்ட் நிறுவனத்தின் மாதாந்திர விற்பனை ஏறுமுகமாகவே உள்ளது.

சான்ஸே இல்ல... கெத்தான காரியத்தை அசால்டாக செய்த ரெனால்ட்... என்னனு தெரியுமா?

கடந்த 2019ம் ஆண்டில் 24,142 ட்ரைபர் கார்களை ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்தது. இதில், பாதிக்கும் மேற்பட்டவை டாப் எண்ட் வேரியண்ட்கள் என்பது அந்நிறுவனத்திற்கு மகிழ்ச்சியான செய்திதான். கடந்த பிப்ரவரி மாதம் ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி ட்யூயல் டோன் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த சிறிய எம்பிவி காரின் ஆட்டோமெட்டிக் வெர்ஷன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

சான்ஸே இல்ல... கெத்தான காரியத்தை அசால்டாக செய்த ரெனால்ட்... என்னனு தெரியுமா?

அனேகமாக 2020ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், ட்ரைபர் பிளாட்பார்ம் அடிப்படையில், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ரெனால்ட் ஈடுபட்டு வருகிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கார் பொது சாலைகளில் பலமுறை தென்பட்டுள்ளது.

சான்ஸே இல்ல... கெத்தான காரியத்தை அசால்டாக செய்த ரெனால்ட்... என்னனு தெரியுமா?

இந்த காரை எச்பிசி என்ற குறியீட்டு பெயரில், ரெனால்ட் அழைத்து வருகிறது. எச்பிசி விற்பனைக்கு வந்தால், அது ரெனால்ட் நிறுவனத்தை இன்னும் வலுவானதாக மாற்றும். 2020ம் ஆண்டிலும் இந்தியாவில் ஏராளமான நிறுவனங்கள் தடுமாறி கொண்டுதான் உள்ளன. ஆனால் அதற்கு மாறாக ரெனால்ட் நிறுவனமோ வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.

சான்ஸே இல்ல... கெத்தான காரியத்தை அசால்டாக செய்த ரெனால்ட்... என்னனு தெரியுமா?

கடந்த பிப்ரவரி மாதம் ரெனால்ட் நிறுவனம் 8,784 கார்களை விற்பனை செய்துள்ளது. 6,241 கார்களில் இருந்து 8,784 கார்களாக விற்பனை உயர்ந்திருப்பது நல்ல விஷயம்தான். இது 40.7 சதவீத வளர்ச்சியாகும். அதே போன்று மாதாந்திர விற்பனை 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 7,805 யூனிட்களாக இருந்த விற்பனையானது, 8,784 யூனிட்களாக உயர்ந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 4, 2020, 12:20 [IST]
English summary
Renault Sales Report February 2020. Read in Tamil
மேலும்... #renault #ரெனால்ட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+