குட் நியூஸ்... ரெனோ ட்ரைபர் ஏஎம்டி மாடல் அறிமுக தேதி விபரம் வெளியானது!

ரெனோ ட்ரைபர் ஏஎம்டி மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கும் தேதி விபரம் குறித்த தகவல் ஆட்டோமொபைல் தளம் வாயிலாக வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரெனோ ட்ரைபர் ஏஎம்டி மாடல் அறிமுக தேதி விபரம்!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ரெனோ ட்ரைபர் கார் இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறைவான பட்ஜெட்டில் அதிக வசதிகளுடன் கூடிய 7 சீடட்ர் மாடலாக நிலைநிறுத்தப்பட்டது. இதனால், ஹேட்ச்பேக் கார் வாங்குவோரை இந்த கார் வெகுவாக கவர்ந்தது.

ரெனோ ட்ரைபர் ஏஎம்டி மாடல் அறிமுக தேதி விபரம்!

மினி எம்பிவி கார் மாடலாக வந்த இந்த காரின் மூன்றாவது வரிசை இருக்கைகளில் சிறியவர்கள் அமர்ந்து செல்வதற்கான வாய்ப்பை வழங்கியதால், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ரெனோ ட்ரைபர் ஏஎம்டி மாடல் அறிமுக தேதி விபரம்!

ரெனோ ட்ரைபர் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டது. இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

ரெனோ ட்ரைபர் ஏஎம்டி மாடல் அறிமுக தேதி விபரம்!

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில், ரெனோ ட்ரைபர் எம்பிவி காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த மாடலானது வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

ரெனோ ட்ரைபர் ஏஎம்டி மாடல் அறிமுக தேதி விபரம்!

இந்த சூழலில், வரும் 18ந் தேதி ரெனோ ட்ரைபர் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலானது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக டீம் பிஎச்பி தளம் வாயிலாக செய்தி வெளியாகி இருக்கிறது.

ரெனோ ட்ரைபர் ஏஎம்டி மாடல் அறிமுக தேதி விபரம்!

ரெனோ ட்ரைபர் காரில் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற இருக்கிறது. இந்த மாடலாது Easy-R என்ற பெயரில் குறிப்பிடப்படுவதுடன், காரின் பின்புறத்தில் இந்த பேட்ஜ் இடம்பெற்றிருக்கும். உட்புறத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கியர் லிவர் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் சிறிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

ரெனோ ட்ரைபர் ஏஎம்டி மாடல் அறிமுக தேதி விபரம்!

டிசைனில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை. க்ரோம் க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், மூன்று வரிசை இருக்கை அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

ரெனோ ட்ரைபர் ஏஎம்டி மாடல் அறிமுக தேதி விபரம்!

ஆட்டோ எக்ஸ்போவில் ட்ரைபர் காரின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இந்த எஞ்சின் தேர்வும் மிக விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனோ ட்ரைபர் ஏஎம்டி மாடல் அறிமுக தேதி விபரம்!

ரெனோ ட்ரைபர் காரின் மேனுவல் மாடலைவிட ஏஎம்டி மாடலானது ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை கூடுதல் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. நகர்ப்புற பயன்பாட்டுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Sunday, May 10, 2020, 12:38 [IST]
English summary
According to the report, Renault is planning to launch Triber AMT model in India on May 18, 2020.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+