எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறதா ரெனால்ட்? ஜோ இவி சென்னையில் சோதனை ஓட்டம்
ரெனால்ட்டின் எலக்ட்ரிக் காரான ஜோ இவி இந்தியாவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரெனால்ட் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியாவிற்கான தனது பல எதிர்கால தயாரிப்புகளை காட்சிப்படுத்தி இருந்தது.

இதில் அதன் எலக்ட்ரிக் தயாரிப்பான ஜோ இவி-யும் ஒன்றாக நிற்க வைக்கபட்டிருந்தது. இந்த நிலையில்தான் தற்போது ரெனால்ட்டின் இந்த எலக்ட்ரிக் கார் சென்னையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் ஜோ இவி கார் 4 மீட்டர் நீளம் கொண்டதாக காட்சியளித்தது. காரில் அலாய் சக்கரங்கள் 17 இன்ச்சில் பொருத்தப்பட்டிருந்தன. இந்த அம்சங்களை இந்த ஸ்பை படங்களில் உள்ள ஜோ இவி காரிலும் பார்க்க முடிகிறது.

இவற்றுடன் இந்த ஸ்பை படங்கள் இந்த எலக்ட்ரிக் கார் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள், ஹீட்டட் ஸ்டேரிங் சக்கரம், வயர் இல்லா ஸ்மார்ட்போன் சார்ஜிங், தொடுத்திரை ஹெட்-யூனிட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சைகை இல்லா பார்க்கிங் வசதி உள்ளிட்டவைகளையும் கொண்டுள்ளதையும் வெளிக்காட்டுகின்றன.

இவை மட்டுமின்றி ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதியை காணும் வசதி மற்றும் முன் & பின் கேமிராக்கள் போன்றவையும் ரெனால்ட் ஜோ இவி கார் பெற்றுவரும் என எதிர்பார்க்கிறோம். ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் நீல செலாடன் என அழைக்கப்படும் நிறத்தில் காட்சியளித்தது.

இந்த ஸ்பை படங்களில் வெள்ளை நிறத்திலும், முன் மற்றும் பின்பக்கத்தில் சோதனைக்கான சிவப்பு நிற நம்பர் ப்ளேட் உடனும் காட்சியளிக்கிறது. ஜோ இவி காரில் வழங்கப்படும் எலக்ட்ரிக் மோட்டார் 132 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

இதில் பொருத்தப்படும் 52 kWh பேட்டரி தொகுப்பு அதிகப்பட்சமாக 395 கிமீ வரையில் சிங்கிள் சார்ஜில் காரை இயக்கி செல்லக்கூடியதாக இருக்கும். இப்படிப்பட்ட எலக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவிற்கு பிறகு தற்போது காட்சியளித்துள்ளதால் இதன் அறிமுக பணிகளிலும் ரெனால்ட் நிறுவனம் ஈடுப்பட்டு வருவது தெளிவாகிறது.


Click it and Unblock the Notifications








