டாடா நெக்ஸானின் க்ரில் டிசைன் விரைவில் மாற்றப்படுகிறது... இதுதான் புதிய க்ரில் டிசைனாம்...

டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் விரைவில் புதிய டிசைனில் க்ரில் அமைப்பை பெறவுள்ளதாக தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா நெக்ஸானின் க்ரில் டிசைன் விரைவில் மாற்றப்படுகிறது... இதுதான் புதிய க்ரில் டிசைனாம்...

டாடா மோட்டார்ஸின் காம்பெக்ட் எஸ்யூவி ரக காராக நெக்ஸான் விளங்குகிறது. எரிபொருள் மற்றும் எலக்ட்ரிக் என்ற இரு விதமான இயக்க ஆற்றல்களுடன் இந்த டாடா மாடல் விற்பனை செய்யப்படுகிறது.

டாடா நெக்ஸானின் க்ரில் டிசைன் விரைவில் மாற்றப்படுகிறது... இதுதான் புதிய க்ரில் டிசைனாம்...

தற்சமயம் நெக்ஸானில் மூன்று அம்பு வடிவில் க்ரில் அமைப்பு வழங்கப்படுகிறது. இதுதான் விரைவில் இரட்டை-அம்பு வடிவத்திற்கு மாற்றப்படவுள்ளதாக தற்போது டீம்பிஎச்பி செய்திதளம் மூலமாக தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

டாடா நெக்ஸானின் க்ரில் டிசைன் விரைவில் மாற்றப்படுகிறது... இதுதான் புதிய க்ரில் டிசைனாம்...

இருப்பினும் இந்த புதிய க்ரில் டிசைனை நெக்ஸானின் குறிப்பிட்ட சில வேரியண்ட்கள் மட்டும் தான் பெறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நமக்கு தெரிந்தவரை நெக்ஸானின் டாப் வேரியண்ட்கள் இந்த மாற்றத்தை ஏற்கலாம்.

டாடா நெக்ஸானின் க்ரில் டிசைன் விரைவில் மாற்றப்படுகிறது... இதுதான் புதிய க்ரில் டிசைனாம்...

தற்போதைய க்ரில்லில் ஏழு மூன்று-அம்பு டிசைன்கள், வெள்ளை நிற ஹைலைட்கள் உடன் வழங்கப்படுகின்றன. இதில் மூன்று வலது புறமும் மூன்று இடதுபுறமும் உள்ளன. ஒன்று டாடா நிறுவனத்தின் முத்திரையாக சரியாக கீழே பொருத்தப்படுகிறது.

டாடா நெக்ஸானின் க்ரில் டிசைன் விரைவில் மாற்றப்படுகிறது... இதுதான் புதிய க்ரில் டிசைனாம்...

இந்த அமைப்பு அப்படியே இரட்டை-அம்பு டிசைனிலும் தொடரவுள்ளது என்பதை தற்போது கசிந்துள்ள ஆவண படத்தின் மூலம் அறிய முடிகிறது. இந்த க்ரில் டிசைன் மாற்றம் மட்டுமின்றி வேறு சில மாற்றங்களும் நெக்ஸான் எஸ்யூவி காரில் விரைவில் வழங்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றன.

டாடா நெக்ஸானின் க்ரில் டிசைன் விரைவில் மாற்றப்படுகிறது... இதுதான் புதிய க்ரில் டிசைனாம்...

இதில் எல்இடி டிஆர்எல்களுடன் புதிய இரட்டை-பேட் ஹெட்லேம்ப்கள், திருத்தியமைக்கப்பட்ட க்ரில் மற்றும் சில்வர் உள்ளீடுகளுடன் பம்பர்கள் மற்றும் மூடுபனி விளக்குகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. அதேபோல் டெயில்லேம்ப்களும் காரின் பின்பக்கத்திற்கு கூடுதல் கவர்ச்சிகரமான தோற்றத்தை வழங்கும் விதத்தில் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

டாடா நெக்ஸானின் க்ரில் டிசைன் விரைவில் மாற்றப்படுகிறது... இதுதான் புதிய க்ரில் டிசைனாம்...

இவற்றுடன் புதிய தாழ்வான-தட்டையான பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்ட உட்புற பாகங்களும் அப்டேட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெக்ஸானிற்கு தற்சமயம் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டர்போ-டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.

டாடா நெக்ஸானின் க்ரில் டிசைன் விரைவில் மாற்றப்படுகிறது... இதுதான் புதிய க்ரில் டிசைனாம்...

ஈக்கோ, சிட்டி, ஸ்போர்ட் என்ற மூன்று விதமான ட்ரைவிங் மோட்களில் வழங்கப்படும் டாடா நெக்ஸானின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.99 லட்சத்தில் இருந்து ரூ.12.70 லட்சம் வரையில் உள்ளது. புதிய க்ரில் டிசைன் உள்ளிட்ட அப்கிரேட்களை விரைவில் இந்த கார் பெற்றாலும் இந்த விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles

English summary
Tata Nexon gets new Bi-Arrow front grille
Story first published: Tuesday, September 29, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X