Just In
- 40 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- News
நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2.5 கோடி ரூபாயில் உருவாகிறது 2021 கோஸ்ட்... ரோல்ஸ் ராய்ஸின் புதிய தயாரிப்பு...
ரோல்ஸ் ராய்ஸ் என்றாலே நம் அனைவரது மனதிலும் முதலில் தோன்றும் வார்த்தை ராயல் தான். இந்த அந்தஸ்த்தை பெற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் எத்தகை எத்தகைய தயாரிப்புகளை கடந்து வந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியும்.

அவற்றை தொடர்ந்து புதிய தயாரிப்பாக 2021 கோஸ்ட் மாடலை விரைவில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. பெயரிலேயே பயங்கரத்தை கொண்டிருக்கும் இந்த 2021 காரின் வடிவமைப்பில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மிகவும் நுட்பமாக செயல்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக டீசர்களை வெளியிட்டு வந்த தயாரிப்பு நிறுவனம் ஒருவழியாக புதிய தலைமுறை கோஸ்ட் காரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. கோஸ்ட் எப்போதுமே ரோல்ஸ் ராய்ஸின் வெற்றிக்கரமான விற்பனை மாடல் தான்.

இதன் புதிய தலைமுறை வித்தியாசமான டிசைன் மொழியினை முன்னோடி தலைமுறை கோஸ்ட் கார்களில் இருந்து பெற்றுள்ளது. இந்த 2021 காரின் தயாரிப்பில், மிகவும் விலையுயர்ந்த தோற்ற தத்துவத்தை தவிர்த்துள்ள ரோல்ஸ் ராய்ஸ், இதன் டிசைனில் மிகவும் குறைவான அணுகுமுறையையே கையாண்டுள்ளது.

கல்லீனன் மற்றும் பாண்டன் போன்ற மற்ற ரோல்ஸ் ராய்ஸ் தயாரிப்புகளின் தடிமனான அலுமினிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பேஸ் ஃப்ரேம் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கோஸ்டின் வடிவமைப்பு ஓபலன்ஸ் கோட்பாட்டைப் பின்பற்றுகிறது.

இதனால் காரின் உடற்பகுதிகளில் தூய்மையான மற்றும் கூர்மையான கோடுகளை பார்க்க முடிகிறது. மேலும் இதன் தயாரிப்பில் பிளானர் இடைநீக்க முறையையும் தயாரிப்பு நிறுவனம் பயன்படுத்தியுள்ளதால் காரின் சிரமமின்மை மற்றும் சுறுசுறுப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

முழுமையான கார் அதன் பிரத்யேக வாடிக்கையாளர்களின் சுவைக்கு ஏற்ப மீண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் வசதியான சவாரி உறுதி செய்யப்படுகிறது. தற்சமயம் விற்பனையில் உள்ள கோஸ்ட் உடன் ஒப்பிடும்போது புதிய கோஸ்ட் மொத்த தோற்றத்தில் சற்று பெரியதாக உள்ளது.

அதாவது தற்போதைய வெர்சனை காட்டிலும் 89மிமீ அதிகமாக 5546மிமீ நீளத்தையும், 30மிமீ அதிகமாக 2146மிமீ அகலத்தையும் 2021 கோஸ்ட் பெற்றுள்ளது. 1571மிமீ உயரத்தை கொண்டுள்ள இந்த புதிய காரில் வழங்கப்பட்டுள்ள புதிய க்ரில்லில் 20 எல்இடி டிஆர்எல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் இந்த க்ரில்லின் மேற்புறமும் ஒளிர்கிறது.

இயக்கத்திற்கு இந்த 2021 மாடலில் மிக பெரிய 6.75 லிட்டர் வி12 இரட்டை-டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 571 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இதன் என்ஜின் அமைப்பின் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், 850 என்எம் டார்க் திறனை வெறும் 1600 ஆர்பிஎம்-ல் இது வெளிப்படுத்தும்.

என்ஜினிலிருந்து வரும் அனைத்து தேவையற்ற சத்தங்களிலிருந்தும் கேபின் காப்பிடப்படாமல் இருக்க, புதிய கோஸ்ட் ஆனது காற்று உட்கொள்ளும் அமைப்பில் ஒரு தனித்துவமான போர்ட்டிங் உடன் வருகிறது. அதேபோல் இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் ஆல்-வீல் ஸ்டீயரிங் சக்கரத்தையும் பெற்றுள்ளது.

தொழிற்நுட்ப அம்சங்களில் மற்ற அனைத்து கார்களுக்கும் முன் உதாரணமாக விற்பனைக்கு வரவுள்ளதாக ரோல்ஸ் ராய்ஸ் கூறியுள்ளதே தவிர்த்து 2021 கோஸ்ட்டில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெறவில்லை.

கதவுகளை எலக்ட்ரிக் மூலமாக திறந்து மூடும் அமைப்பு, ஒளிரும் கோஸ்ட் பெயர்பலகை, கேபினை சுற்றிலும் 850 நட்சத்திர விளக்குகள் மற்றும் 1300 வோல்ட் பைஸ்போக் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை இந்த புதிய காரில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களாகும்.

புதிய தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்டின் விலை 332,500 டாலர்கள், இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட ரூ.2.43 கோடி என்ற அளவில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்தியர்கள் பலரது கனவுலகில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் ஒன்றாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.