அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட மதுரை ஆர்டிஓ அதிகாரிகள்! என்னப்பா ஆட்டோக்காரர்களே இப்படி பன்னா நியாயமா

மதுரை ஆர்டிஓ அதிகாரிகள் ஆட்டோக்கள்குறித்த அதிர வைக்கின்ற வகையிலான ஓர் தகவலை வெளியிட்டுள்ளனர். அது என்னவென்பதை இந்த பதிவில் காணலாம்.

அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட மதுரை ஆர்டிஓ அதிகாரிகள்... என்னப்பா ஆட்டோக்காரர்களே இப்படி பன்னா நியாயமா..?

இந்தியாவின் முக்கிய நகரங்களில் பொதுத்துறை வாகனங்களைக் காட்டிலும் அதிகளவில் ஆட்டோ ரிக்ஷாக்கள் இயங்குவதை நம்மால் காண முடியும். இவை, பெரும்பாலான மக்களின் அன்றாட போக்குவரத்தில் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன. இதன்காரணமாகவே, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றது. இதனாலயே, பொதுத்துறை வாகனங்களைக் காட்டிலும் அதிகளவு எண்ணிக்கையில் அவை காட்சியளிக்கின்றன.

அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட மதுரை ஆர்டிஓ அதிகாரிகள்... என்னப்பா ஆட்டோக்காரர்களே இப்படி பன்னா நியாயமா..?

குறிப்பாக, ஏழை மற்றும் பணக்காரர் என எந்தவொரு பாகுபாடுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த ஆட்டோ ரிக்ஷாக்கள் பயனளிக்கின்றன. இதுபோன்ற காரணத்தினாலயே உலக நாடுகள் அனைத்தையும் ஆளும் ஓலா மற்றும் ஊபர் போன்ற கால் டாக்ஸி சேவை நிறுவனங்கள் இந்தியாவில் கால் தடம் பதித்த பின்னரும் ஆட்டோக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட மதுரை ஆர்டிஓ அதிகாரிகள்... என்னப்பா ஆட்டோக்காரர்களே இப்படி பன்னா நியாயமா..?

அதிலும், சென்னையில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான ஆட்டோக்கள் இயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி, இரண்டாம் நிலை நகரங்களிலும் ஆட்டோக்களின் ஆதிக்கம் நிறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக, குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களே அதிகளவில் காணப்படுகின்றன. இவை, வேலைக்கு செல்பவர்களின் முக்கிய போக்குவரத்து வாகனங்களில் ஒன்றாக மாறியிருக்கின்றன.

அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட மதுரை ஆர்டிஓ அதிகாரிகள்... என்னப்பா ஆட்டோக்காரர்களே இப்படி பன்னா நியாயமா..?

இந்நிலையில், மதுரை ஆர்டிஓ அதிகாரிகள் இந்த ஷேர் ஆட்டோக்களைப் பற்றிய ஓர் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

மதுரையில் ஒட்டுமொத்தமாக 7 ஆட்டோக்கள் மட்டுமே செயல்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். என்னது மதுரையில் ஒட்டுமொத்தமாக வெறும் 7 ஆட்டோக்கள்தான் இருக்கின்றதா என ஆச்சரியப்படுகிறீர்களா... இங்குதான் டுவிஸ்டே காத்திருக்கு.

அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட மதுரை ஆர்டிஓ அதிகாரிகள்... என்னப்பா ஆட்டோக்காரர்களே இப்படி பன்னா நியாயமா..?

மதுரை நகரத்தில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அதில் வெறும் 7 ஆட்டோக்கள் மட்டும் பர்மிட் சான்று பெற்று இயங்கி வருகின்றன. மற்ற ஆட்டோக்கள் அனைத்தும் உரிய சான்று இன்றி இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த அதிர்ச்சி மிகுந்த தகவல் முனியசாமி என்பவரின் ஆர்டிஐ பதிவின்மூலம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. இவர், மதுரை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் பொதுச் செயலாளர் ஆவார்.

அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட மதுரை ஆர்டிஓ அதிகாரிகள்... என்னப்பா ஆட்டோக்காரர்களே இப்படி பன்னா நியாயமா..?

மேலும், ஆர்டிஐ மூலம் மதுரையில் மட்டும் 12,223 ஷேர் ஆட்டோக்கள் இயங்குவது தெரியவந்துள்ளது. மதுரையில் ஒட்டுமொத்தமாக மூன்று ஆர்டிஓ-க்கள் செயல்பட்டு வருகின்றன. அவை மதுரை தெற்கு, மதுரை வடக்கு மற்றும் மத்திய மதுரை ஆகிய பிராந்தியங்களில் உள்ளன. இந்த ஆர்டிஓ-க்களில் TN58, TN59 மற்றும் TN64 ஆகிய எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட மதுரை ஆர்டிஓ அதிகாரிகள்... என்னப்பா ஆட்டோக்காரர்களே இப்படி பன்னா நியாயமா..?

இதில், வடக்கு ஆர்டிஓ-வின் பதிவேட்டின்படி தலா ஒரு ஆட்டோவும், தெற்கு ஆர்டிவோ தகவலின்படி ஆறு ஆட்டோக்களும் முறையான சான்றுடன் இயக்கப்பட்டு வருகின்றது. மத்திய மதுரை ஆர்டிஓ-வில் ஒன்று கூட இல்லை.

அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட மதுரை ஆர்டிஓ அதிகாரிகள்... என்னப்பா ஆட்டோக்காரர்களே இப்படி பன்னா நியாயமா..?

ஆனால், மதுரை முழுவதும் 12,223 ஆட்டோ ரிக்ஷாக்கள் இயங்குவதை ஆர்டிஐ தகவல் உறுதிப்படுத்தியுள்ளது. அதேசமயம், குறைந்தது 25 ஆயிரம் ஆட்டோக்களாவது மதுரையில் இயக்கப்படலாம் என தனியார் அறக்கட்டளை ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.

அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட மதுரை ஆர்டிஓ அதிகாரிகள்... என்னப்பா ஆட்டோக்காரர்களே இப்படி பன்னா நியாயமா..?

இதில், ஆட்டோக்கள் ஷேர் ஆட்டோக்களே அதிக எண்ணிக்கையில் காணப்படுவதாக அந்த தனியார் அறக்கட்டளை குறிப்பிட்டுள்ளது. இந்த ஆட்டோக்கள் அரசு அனுமதித்த அளவைக் காட்டிலும் பல மடங்கு அதிக பயணிகளை ஏற்றி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவதாகவும் அது குற்றம் சாட்டுகின்றது.

அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட மதுரை ஆர்டிஓ அதிகாரிகள்... என்னப்பா ஆட்டோக்காரர்களே இப்படி பன்னா நியாயமா..?

மூன்று சக்கர ஆட்டோக்களில் ஒரே நேரத்தில் மூன்று பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல அனுமதி உண்டு. ஆனால், பல ஷேர் ஆட்டோக்கள் இதை துளியளவும் கடைபிடிப்பதில்லை. தொடர்ந்து, ஆட்டோக்களில் சிறு மாற்றம் செய்யப்பட்டு, இரண்டு அடுக்காக பிரித்து அதில் அதிகபட்ச பயணிகள் ஏற்றப்படுகின்றனர். குறைந்தது, ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர்.

அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட மதுரை ஆர்டிஓ அதிகாரிகள்... என்னப்பா ஆட்டோக்காரர்களே இப்படி பன்னா நியாயமா..?

இவை மினி பஸ்களை விட மலிவான பயண கட்டனத்தை வசூலிக்கின்ற காரணத்தினால், மக்களும் இந்த ஆட்டோவை அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, நான்கு கி.மீ., பயணத்திற்கு வெறும் 10 ரூபாய் மட்டுமே இந்த ஷேர் ஆட்டோக்களில் வசூலிக்கப்படுகின்றது. ஆகையால், அதிக கூட்ட நெரிசல் காணப்பட்டாலும், அதிலேயே மக்கள் பயணிக்கின்றனர்.

அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட மதுரை ஆர்டிஓ அதிகாரிகள்... என்னப்பா ஆட்டோக்காரர்களே இப்படி பன்னா நியாயமா..?

ஷேர் ஆட்டோக்களில் அதிகபட்சமாக ஐந்து நபர்களை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என ஆர்டிஓ அறிவுறுத்துகின்றது. ஆனால், இதனை ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் துளியளவும் மதிப்பதில்லை. இதுபோன்ற விதி மீறல்கள் மட்டுமின்றி பெர்மிட்டும் பெறாமல் ஆட்டோக்களை இயக்கி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
RTI Reveals Hundreds Of Share Autos Does Not Have Permit In Madurai. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X