Just In
- 1 hr ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 2 hrs ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
திருத்தணியில் கையில் வெள்ளி வேலுடன் தொண்டர்களுக்கு காட்சி அளித்த மு.க ஸ்டாலின்
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நம்பவே முடியல! கிரிக்கெட் உலகின் கடவுளுக்கு இப்படி ஒரு ஆசையா?.. ஆச்சரியத்தில் மக்கள்...
இந்திய கிரிக்கெட் உலகின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது ஆசைப் பற்றிய தகவலை தனியார் தொலைக்காட்சிப் பேட்டியின்போது தெரிவித்துள்ளார். அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் உலகின் கடவுளாக பார்க்கப்படுபவரே சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட் போட்டிகளில் விலகியிருந்தாலும் தற்போதும் உலகளவில் ரசிகர்கள் இருந்த வண்ணம் இருந்து வருகின்றனர். எனவேதான் அவரது சிறிய டுவீட்கூட உலகளவில் ட்ரெண்டாகி விடுகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சச்சின் டெண்டுல்கர் அளித்த பேட்டி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்திற்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரின் ரசிகர்களும் சச்சினை நினைத்து நெகிழ்ச்சியடைய தொடங்கியிருக்கின்றனர்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாகப் போற்றப்படும் சச்சின், அந்த விளையாட்டில் மட்டுமின்றி வாகனம் சார்ந்த விஷயத்திலும் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருக்கின்றார். ஆம், சச்சின் ஓர் மிகப்பெரிய வாகன காதலர் ஆவார். எனவேதான் அவரிடத்தில் உலகின் அதிக விலையுயர்ந்த மற்றும் திறன் மிக்க கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் பிஎம்டபிள்யூ, ஃபெர்ராரி, நிஸ்ஸான் ஜிடிஆர் உள்ளிட்ட நிறுவனங்களின் அரிய வகை மற்றும் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த கார்கள் அவரிடத்தில் இருக்கின்றன. இதுமட்டுமின்றி கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் சாலையில் பறக்கக்கூடிய கார்களும் அவரிடத்தில் இருக்கின்றன. ஆனால், சச்சின் டெண்டுல்ரோ மிக மிக பழைய காரான மாருதி 800 காரையே பயன்படுத்த விரும்புவதாக தெரிவித்திருக்கின்றார்.

ஆம், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் இதைதான் அவர் தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது சுய உழைப்பின் மூலம் வாங்கிய முதல் கார் மாருதி 800 வாகனமே ஆகும். எனவேதான் தற்போதும் அந்த கார்மீது தீராத காதல் கொண்டவராக இருக்கின்றார். மேலும், அக்காரை அவர் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர விரும்புவதாக கூறியிருக்கின்றார்.

இதுகுறித்த அவர் கூறியதாவது, "எனது முதல் கார் மாருதி 800 ஆகும் . துரதிர்ஷ்டவசமாக அது இப்போது என்னுடன் இல்லை. அதை மீண்டும் என்னுடன் வைத்திருக்க விரும்புகிறேன். எனவே, இக்கார்குறித்த தகவல் அறிந்தவர்கள் தாராளமாக என்னை தொடர்பு கொள்ளலாம்" என கூறியிருக்கின்றார்.

சச்சின் கூறியதை வைத்து பார்க்கையில் அவர் முதன் முதலில் வாங்கிய மாருதி 800 கார் தற்போது அவரிடத்தில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவேதான், டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதுகுறித்த உருக்கமான தகவலைப் பகிர்ந்திருக்கின்றார். சச்சினுக்கு மட்டுமின்றி இந்தியர்கள் பலருக்கு மாருதி 800 காரே முதல் காராக இருக்கின்றது.

ஆகையால்தான் பலர் இக்காரை தற்போதும் உணர்பூர்வமான காரணங்களுக்காக விற்காமல், முக்கியமாக தூக்கியெறியாமல் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையிலேயே மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் தனது முதல் காரை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர விருப்பம் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டு காரணமாக மட்டுமின்றி புதிய கார்களை பயன்பாட்டிற்கு களமிறக்குவதன் மூலமும் சச்சின் அவ்வப்போது செய்தியில் இடம்பிடித்துண்டு. அந்தளவிற்கு அவரது இல்லத்தில் கார்களுக்கென தனி இடமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டுகளிக்க ஒரு நாள் போதாது என்கின்றனர் அவருடைய நெருங்கிய வட்டாரங்கள்.

வாகனங்கள் மீதான ஆசை சச்சினுக்கு இன்று, நேற்று வந்தது அல்ல. அவரது சிறு வயதிலிருந்தே அவருக்கு கார்கள் மீதான மோகம் அதிகமாக இருந்துள்ளது. அவர், சிறு வயதில் பந்த்ரா இல்லத்தில் வசிக்கும்போது, சகோதரர்களுடன் மொட்டைமாடியில் அமர்ந்தவாறு மணிக்கணக்காக கார்களை வேடிக்கைப் பார்க்கும் பழக்கம் கொண்டவராக இருந்திருக்கின்றார். இதுவே, நாளடைவில் கார் காதலராகவும் அவரை மாற்றியிருக்கின்றது.

இந்த தகவலை பல முறை சச்சின் டெண்டுல்கரே டிவி நிகழ்ச்சிகளின்போது தெரிவித்திருக்கின்றார். எனவேதான் தனது முதல் சம்பாதியத்தில் மாருதி 800 காரை அதிக விருப்பத்துடன் வாங்கியிருக்கின்றார். ஆனால், சில கட்டாய சூழ்நிலைக் காரணமாக அதனை விற்றிருக்கின்றார். தற்போது அதைத் தேடும் பயணத்திலேயே அவர் இறங்கியிருக்கின்றார்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் இந்த செயல் மக்கள் மத்தியிலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விலகியிருந்தாலும் தற்போதும் ரசிகர்களால் போற்றக்கூடிய நபராக இருந்தே வருகின்றார். எனவேதான் அனைத்து செய்திகளிலும் இந்த தகவல் இடம்பெறத் தொடங்கியிருக்கின்றது.