ஒரே காரில் காட்சியளித்த இரு திரை பிரபலங்கள்... அந்த ஜோடி புறாக்கள் பறந்த கார் என்ன விலை தெரியுமா...?

திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக இணைந்திருக்கும் இரு முன்னணி நட்சத்திர நடிகர்கள் விலையுயர்ந்த காரில் பயணித்துள்ளனர். அந்த காரின் விலை மற்றும் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஒரே காரில் காட்சியளித்த இரு திரை பிரபலங்கள்... அந்த ஜோடி புறாக்கள் பறந்த கார் என்ன விலை தெரியுமா...?

செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் மற்றும் திரை பிரபலங்களினாலயே நாட்டில் பல்வேறு விலையுயர்ந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் தரிசனம் கிடைத்து வருகின்றது. குறிப்பாக, திரை பிரபலங்களிடம் இருப்பதைப் போன்ற ஆடம்பர ரக கார்கள் ஒரு சில தொழிலதிபர்கள் வீட்டில்கூட காணப்படுவதில்லை.

ஒரே காரில் காட்சியளித்த இரு திரை பிரபலங்கள்... அந்த ஜோடி புறாக்கள் பறந்த கார் என்ன விலை தெரியுமா...?

அதேபோன்று, பிரபல விளையாட்டு வீரர்களிடமும் பல்வேறு விலையுயர்ந்த வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இதுபோன்று, பிரபல நட்சத்திரங்கள் எப்போதாவதுதான் சாலையில் வளம் வருவார்கள். அப்போது விலையுயர்ந்த ஆடம்பர ரக கார்களிலேயே அவர்கள் காட்சியளிப்பார்கள். அது அன்றைய வாகன உலகின் ஹாட் டாபிக்காக மாறிவிடும்.

ஒரே காரில் காட்சியளித்த இரு திரை பிரபலங்கள்... அந்த ஜோடி புறாக்கள் பறந்த கார் என்ன விலை தெரியுமா...?

அந்தவகையில், தற்போது ஒரே நேரத்தில் இரு திரை பிரபலங்கள் ஒரே வாகனத்தில் காட்சியளித்திருக்கின்றனர். அவர்கள், பாலிவுட் திரைப்பட பிரபலங்களான சைஃப் அலிகான் மற்றும் கரினா கபூர் ஆவர்.

இவர்கள் இருவரும் பாலிவுட் உலகின் பிரபல நட்சத்திரங்கள் என்பதைக்காட்டிலும் திருமணமான ஜோடிக்கள் என்றே கூற வேண்டும்.

ஒரே காரில் காட்சியளித்த இரு திரை பிரபலங்கள்... அந்த ஜோடி புறாக்கள் பறந்த கார் என்ன விலை தெரியுமா...?

கடந்த 2012ம் ஆண்டே திருமணம் செய்துகொண்ட இவ்விருவரும் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் தற்போது ஜீப் ரேங்லர் அன்லிமிடெட் எனப்படும் சொகுசு வாகனத்தில் பயணிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

ஒரே காரில் காட்சியளித்த இரு திரை பிரபலங்கள்... அந்த ஜோடி புறாக்கள் பறந்த கார் என்ன விலை தெரியுமா...?

இந்த கார் உலகில் விற்பனையாகும் ஹார்ட்கோர் ஆஃப் ரோடிங் வாகனங்களிலேயே மிக முக்கிய வாகனமாகும். இது இந்தியாவில் ரூ. 63.94 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். ஆகையால், ஆன்-ரோடில் வாங்கும்போது மாநிலங்களுக்கு ஏற்ப வரிக் கூட்டப்பட்டு அதிகவிலையில் கிடைக்கும்.

ஒரே காரில் காட்சியளித்த இரு திரை பிரபலங்கள்... அந்த ஜோடி புறாக்கள் பறந்த கார் என்ன விலை தெரியுமா...?

இந்த ஜீப் ரேங்லர் அன்லிமிடெட் காரானது ஐந்து கதவுகளைக் கொண்ட சொகுசு கார் ஆகும். இதனை கடந்த ஆண்டுதான் ஜீப் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது முழுக்க முழுக்க கட்டமைக்கப்பட்ட மாடலாகவே இந்தியாவில் இறக்குமதிச் செய்யப்பட்டு வருகின்றது.

ஆகையால், இந்த காரில் சர்வதேச தரத்திற்கு இணையான வசதிகள் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது.

ஒரே காரில் காட்சியளித்த இரு திரை பிரபலங்கள்... அந்த ஜோடி புறாக்கள் பறந்த கார் என்ன விலை தெரியுமா...?

குறிப்பாக, இந்த கார் கிளாசிக் தோற்றத்தில் காட்சியளித்தாலும் நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியதாக காட்சியளிக்கின்றது. அந்தவகையில், யு கன்னெக்ட் 4சி என்ஏசி தொழில்நுட்பம் அடங்கிய 8.4 இன்சிலான தொடுதிரை சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிகளை வழங்கும்.

ஒரே காரில் காட்சியளித்த இரு திரை பிரபலங்கள்... அந்த ஜோடி புறாக்கள் பறந்த கார் என்ன விலை தெரியுமா...?

இதுபோன்று தொழில்நுட்பத்தில் மட்டுமின்றி சொகுசு வசதியிலும் பிரிமியம் தரத்தில் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், மிக முக்கியமானதாக இந்த காரின் இருக்கைகளுக்கு மிகவும் மிருதுவான மற்றும் சொகுசான உணர்வை வழங்குகின்ற லெதர் போர்வை வழங்கப்பட்டுள்ளது.

ஒரே காரில் காட்சியளித்த இரு திரை பிரபலங்கள்... அந்த ஜோடி புறாக்கள் பறந்த கார் என்ன விலை தெரியுமா...?

இதுமட்டுமின்றி, ஏராளமான சொகுசு வசதிகளும் இந்த காரில் காணக்கிடைக்கின்றது. குறிப்பாக நட்சத்திர விடுதிகளில் கிடைப்பதைப் போன்ற வசதிகள் இந்த காரில் இடம்பெற்றுள்ளது.

சைஃப் அலிகான் மற்றும் கரினா கபூர் இந்த காரில் எங்கு புறப்பட்டுச் சென்றனர் என்ற தகவல் வெளியாகவில்லை. சொந்த விகாரத்திற்காக இருவரும் இணைந்து வெளியே சென்றிருக்கலாம் என கூறப்படுகின்றது.

ஒரே காரில் காட்சியளித்த இரு திரை பிரபலங்கள்... அந்த ஜோடி புறாக்கள் பறந்த கார் என்ன விலை தெரியுமா...?

இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்துவரும் கரீனா கபூர் ஆமிர் கானின் லால் சிங் படத்தின் பிசியிலிருந்து தற்போதே இலைப்பாறி வருகின்றார். தொடர்ந்து, கரன் ஜோஹரின் புதிய திரைப்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் புக்காகியுள்ளார்.

ஒரே காரில் காட்சியளித்த இரு திரை பிரபலங்கள்... அந்த ஜோடி புறாக்கள் பறந்த கார் என்ன விலை தெரியுமா...?

இதேபோன்று, சைஃப் அலிகான் நடித்த காமெடி திரைப்படமான ஜவானி ஜானேமேன் என்ற படம் தற்போது நல்ல ஹிட் அடித்துக்கொண்டிருக்கின்றது. இதில், தபு மற்றும் புதுமுக நடிகை அலயா எஃப் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இவ்வாறு, பாலிவுட்டில் பிசியாக சுற்றித்திரிந்துக் கொண்டிருக்கும் இவ்விருவரும் சொகுசு காரில் வலம் வந்த புகைப்படம்தான் தற்போது திரையுலகின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

ஒரே காரில் காட்சியளித்த இரு திரை பிரபலங்கள்... அந்த ஜோடி புறாக்கள் பறந்த கார் என்ன விலை தெரியுமா...?

இதுபோன்று, திரைப்பிரபலங்கள் விலையுயர்ந்த வாகனங்களில் உலா வருவது முதல் முறையல்ல. ஏற்கனவே, பலர் இதுமாதிரி பொது சாலையில் ஆடம்பர கார்களில் பயணித்தபோது காட்சிக்குள்ளாகியுள்ளனர். பெரும்பாலும் திரைப்பிரபலங்கள் காட்சியளிக்கும் அனைத்து வாகனங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக காட்சியளிக்கின்றன.

ஒரே காரில் காட்சியளித்த இரு திரை பிரபலங்கள்... அந்த ஜோடி புறாக்கள் பறந்த கார் என்ன விலை தெரியுமா...?

விலை, திறன், சொகுசு என அனைத்திலும் மற்றவர்களைக் கவர்கின்ற வகையிலேயே அவை இருக்கின்றன. அந்தவகையில், தற்போது சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் வலம் வந்த ஜீப் ரேங்லர் எஸ்யூவி காரும் மிகவும் சிறப்பு வாய்ந்த காராக இந்தியாவில் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Saif Ali Khan & Kareena Kapoor Spotted With Jeep Wrangler. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X