உடன் நடித்தவருக்கு ரூ. 1.84 கோடி காரை பரிசளித்த ஹீரோ... வீடு தேடி வந்த மிகப்பெரிய ஆச்சரிய பரிசு...!
உடன் நடித்த சக நடிகருக்கு ரூ. 1.84 கோடி மதிப்புள்ள சொகுசு காரை முன்னணி நடிகர்களில் ஒருவர் பரிசாக வழங்கியுள்ளார்.

அண்மைக் காலங்களாக திரையுலகில் சக்சஸ் பார்ட்டி வழங்குவது, உடன் நடித்தவர்களுக்கு பரிசு வழங்குவது போன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.
பொதுவாக, ஓர் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாக ரசிகர்களைக் கவரும் விதமாக இசை வெளியீட்டு விழா வைப்பது வழக்கம். இதேபோன்று, தற்போது திரைப்படம் வெளிவந்த சில காலத்திலேயே படம் ஓடுகின்றதோ.., இல்லையோ.., ஆனால், வெற்றி நடைபோடுவதாக சக்சஸ் பார்ட்டி வைத்து கொண்டாடி வருகின்றனர் திரையுலகினர்.

இதேபோன்று, திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அந்த படத்தில் சிறப்பாக பணியாற்றிய நடிகர்களுக்கு பரிசு வழங்கும் கலாச்சாரமும் அதிகரித்து வருகின்றது. இதுபோல சம்பவங்கள் ஏற்கனவே பல அரங்கேறியுள்ளன.
இந்நிலையில், தபாங் 3 படத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக கிச்சா சுதீப்பிற்கு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ எம்5 காரை சல்மான் கான் பரிசாக வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சல்மான் கான் ஓர் வாகன பிரியர் என்பது உலகமறிந்த விசயம். இவர், உலகின் சிறந்த எஸ்யூவி ரக கார்களை தன் வசம் வைத்திருக்கின்றார். இதுமட்டுமின்றி, விலையுயர்ந்த பிரிமியம் ரக பைக்குகளையும் அவர் பயன்படுத்தி வருகின்றார்.
தொடர்ந்து, தான் மட்டும் சொகுசு வாகனங்களைப் பயன்படுத்துவது மட்டுமின்றி தன்னுடன் நடிக்கும் சக நடிகர்கள் மற்றும் நண்பர்களுக்கும் அவர் சொகுசு வாகனங்களைப் பரிசாக வழங்கி வருகின்றார்.

அந்தவகையில், தபாங் மூன்றாம் பாகத்தில் தன்னுடன் நடித்த கிச்சா சுதீப்பிற்கு ரூ. 1.85 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ எம்5 லக்சூரி செடான் ரக காரை பரிசாக வழங்கியுள்ளார்.
கிச்சா சுதீப், தமிழில் நான் 'ஈ' திரைப்படத்தில் பிரபலமானவர். இவர், தற்போது தபாங் 3ம் பாகத்தில் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்போது, தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாகவே இந்த காரை சல்மான் சுதீப்பிற்கு பரிசாக வழங்கியுள்ளார்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த சொகுசு காரை கடந்த ஆண்டுதான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது எக்ஸ்-ஷோரூமில் ரூ. 1.55 கோடியில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், ஆன் ரோடில் வாங்கும்போது ரூ. 1.85 கோடி என்ற விலையில் கிடைக்கின்றது.

இந்த எம்5 மாடலுக்கு கிடைக்கும் தேவையைப் பொருத்தே இந்தியாவில் இறக்குமதிச் செய்யப்படுகின்றது. இதன்காரணமாகவே, இதனை இந்தியாவில் காண்பது சற்று கடினமாக இருக்கின்றது. அத்தோடு இதன் விலையும் சற்று கூடுதலாக இருக்கின்றது.

இந்த செடான் ரக கார் மற்ற செடான் ரக கார்களைக்காட்டிலும் அதிகம் சக்தி வாய்ந்த மாடலாகும். இதுபோன்ற ஒரு சில காரணங்களினாலயே மற்ற பிஎம்டபிள்யூ 5 செரீஸ் கார்களைக் காட்டிலும் எம்5 கார் தனித்துவமாக காட்சியளிக்கின்றது.

தொடர்ந்து, இந்த காரில் காணப்படும் ஒரு வசதிகளும் பிரத்யேகமானதாக காட்சியளிக்கின்றது. அந்தவகையில், கிளாஸ்-பிளாக் அக்டென்டுகளுடன் கூடிய முகப்பு கிரில், ஓஆர்விஎம்கள், பக்கவாட்டு ஏர் வெண்டுகள், ரியர் டிஃபியூஸர் மற்றும் ஸ்போர்ட்டி ஸ்பாய்லர் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, காரின் கூரைக்கு அதிக வலிமை சேர்ப்பதற்காக கார்பன் ஃபைபராலான பிளாஸ்டிக் மேற்கூரை வழங்கப்பட்டுள்ளது. இதனை மற்ற பிஎம்டபிள்யூ கார்களில் பார்க்க முடியாது.

இதன் சொகுசு வசதிகள் மட்டுமின்றி எஞ்ஜின் திறனும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், அதிக திறனை வெளிப்படுத்தும் வி8 ட்வின் டர்போ சார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 625 பிஎஸ் மற்றும் 750 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது, 8 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும்.

இது வெறும் 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 3.3 செகண்டுகளிலேயே எட்டிவிடும். இத்தகைய திறனை வெளிப்டுத்துவற்காகவே பிரத்யேக தொழில்நுட்பமான எம் எக்ஸ் டிரைவ் வழங்கப்பட்டுள்ளது. இதில், 4டபிள்யூடி, 4டபிஸ்யூடி ஸ்போர்ட் மற்றும் ஆர்டபிள்யூடி என்ற மோட்கள் காணப்படுகின்றன.
இத்தகைய பிரத்யேக சொகுசு வசதிகளைக் கொண்ட காரைதான் கிச்சா சுல்தீப்பிற்கு பரிசாக சல்மான் வழங்கியுள்ளார்.

தபாங் 3 திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி வெளியாகியது. தற்போது இந்த திரைப்படம் 137 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தொடர்ந்து வசூலிலும் முதன்மை வகித்து வருகின்று. இத்தகைய வெற்றியன் காரணத்தினாலயே வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த சுல்தீப்பிற்கு சல்மான் கான் இந்த விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கியுள்ளார்.

மேலும், இந்த காரை அவர், சுல்தீப் வீட்டிற்கே கொண்டுச் சென்று ஆச்சரிய பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை கிச்சா சுல்தீப் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொலேஜ் செய்து பதிவிட்டுள்ளார். மேலும், இந்த பரிசுக்காக நன்றியை தெரிவித்த அவர், கார் மற்றும் சல்மான் கானை அதிகம் விரும்புவதாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








