Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டென்னிஸ் பந்தைபோல் ஹூண்டாய் காரை ஒரு கை பார்த்த சானியா மிர்சா... வீடியோவை பார்த்து மிரண்டு நிற்கும் ரசிகர்கள்!
இந்தியாவின் விலைக் குறைந்த கார்களில் ஒன்றான ஹூண்டாய் வெனியூவை சானியா மிர்சா இயக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்து வரும் மிக பிரபலமான கார் மாடல்களில் வெனியூ காரும் ஒன்று. இது ஓர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இதனை யாரும் எதிர்பார்த்திராத மிக மிக குறைந்த விலையில் ஹூண்டாய் நிறுவனம் களமிறக்கியது. ஆகையால், இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை இக்கார் பெற்றது. இதைத்தொடர்ந்து, ஐஎம்டி எனப்படும் இன்டெலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வை இக்காரில் ஹூண்டாய் அறிமுகப்படுத்தியது.

இந்த வேகக்கட்டுப்பாட்டு கருவி வழக்கமான தானியங்கி டிரான்ஸ்மிஷன்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமானதாகும். இம்மாதிரியான சிறப்பம்சங்களைக் கொண்ட வெனியூ காரை பிரபலப்படுத்தும் முயற்சியில் ஹோண்டா களமிறங்கியுள்ளது. இதனடிப்படையில் பிரபல டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா நடிப்பில் வெனியூ ஐஎம்டி காருக்கான விளம்பர வீடியோவை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது.

வெகு நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போதே சானியா மிர்சா விளம்பர வீடியோவில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. சானியா மிர்சாவின் இந்த புதிய வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காரை ரசிப்பதா?, அல்லது தங்களுக்கு பிடித்த விளையாட்டு வீராங்கணையின் பேச்சை ரசிப்பதா?, என்கிற குழப்பத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

வெனியூ காரின் விற்பனையை ஊக்குவிக்கும் முயற்சியாகவே ஹூண்டாய் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. ஹூண்டாய் வெனியூ இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈகோஸ்போர்ட், கியா சொனெட் மற்றும் அண்மையில் அறிமுகமான நிஸான் மேக்னைட் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியளிக்கின்ற வகையில் சந்தையில் விற்பனையில் இருக்கின்றது. இக்காரை கடந்த ஆண்டே ஹூண்டாய் நிறுவனம் களமிறக்கியது.

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா நடிப்பில் வெனியூ காருக்கான விளம்பர வீடியோவை ஹூண்டாய் வெளியிட்டிருக்கின்றது. இதில், காரின் சிறப்பு வசதிகள் சிலவற்றை அவர் வெளிக்காட்டும் வகையில் நடித்திருக்கின்றார். குறிப்பாக ஐஎம்டி தேர்வில் இருக்கும் சிறப்பு வசதியான கிளட்ச் பெடல் இல்லாமல் இயங்கும் வசதியை அவர் குறிப்பிட்டு காட்டுகின்றார்.

இந்த சிறப்பு வசதியை ஹூண்டாய் நிறுவனம் வெனியூ காரில் மட்டுமே வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி, பல்வேறு தொழில்நுட்ப வசதிகளையும் வெனியூ காரில் ஹூண்டாய் வழங்கி வருகின்றது. ஒயர்லெஸ் சார்ஜர், ப்ளூ லிங்க் இணைப்பு, தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பிரீமியம் ஆடியோ சிஸ்டம், பன்முக கன்ட்ரோல் பொத்தான் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல், பின் பகுதிக்கான ஏசி வெண்ட், எலெக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் வெனியூ கார் மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வானது 1.0 லிட்டர், 3 சிலிண்டர், டர்போசார்ஜர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே கிடைக்கின்றது. இது அதி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இந்த கார் ரூ. 6.75 லட்சத்தில் தொடங்கி 11.59 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் மதிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது.