Just In
- 1 hr ago
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- 3 hrs ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 4 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 15 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
Don't Miss!
- News
கமல் காட்டிய குறும்படம் .. ஒட்டுமொத்த எம்ஜிஆர் ரசிகர்களும் நெகிழ்ச்சி.. கையை பிசைக்கும் அதிமுக
- Finance
40% வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.. அமேசானின் சூப்பர் சலுகைகள்.. கவனிக்க வேண்டிய ஆஃபர் மழை..!
- Sports
எதிரணி வீரர்களை சீண்டறது கீழ்த்தரமானது.. இதுமூலமா நம்மோட பலவீனம்தான் வெளிப்படும்!
- Movies
திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை.. பைலட் மீது டிவி நடிகை பரபரப்பு புகார்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் சைக்கிள்... இதோட விலையை கேட்டு மயங்கினால் நிர்வாகம் பொறுப்பல்ல!
பைக்குகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மிதிவண்டி ஒன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது விற்பனைக்கு கிடைக்கும் பைக்குகளுக்கு எல்லாம் டஃப் கொடுக்கின்ற வகையில் மிதிவண்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்காட் ஸ்போர்ட் இந்தியா எனும் நிறுவனமே அந்த சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்காட் ஸ்பார்க் ஆர்சி 900 என பெயிரிடப்பட்டிருக்கும் சைக்கிளே அது. இது ஓர் நவீன ரக கிராஸ் கன்ட்ரி பைக்காகும்.

இதற்கு இந்திய மதிப்பில் ரூ. 3.70 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போது நாட்டில் விற்பனையில் இருக்கும் பிரீமியம் ரக பைக்குகளின் விலைக்கு இணையானதாகும். இந்த உச்சபட்ச விலையை முன்னிறுத்தியே இந்த சைக்கிளை பைக்கிற்கு டஃப் கொடுக்கும் மிதிவண்டி என குறிப்பிட்டுள்ளோம்.

அதேசமயம், விலைமட்டுமின்றி சைக்கிளில் வழங்கப்பட்டிருக்கும் பல்வேறு அம்சங்கள் பைக்குகளுக்கு இணையானதாக இருக்கின்றன. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் சைக்கிளில் இடம் பெற்றிருக்கும் சஸ்பென்ஷன் பைக்குகளுக்கு இணையானதாக காட்சியளிக்கின்றது. இதுபோன்று பல்வேறு சிறப்பம்சங்கள் சைக்கிளில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஸ்பார்க் ஆர்சி 900 சைக்கிளில் ட்வின்லாக் சஸ்பென்ஷன் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், 12 ஸ்பீட் ஸ்ரேம் ஈகிள் டிரைவ்டிரெயின், ஷிமானோ பிரேக் மற்றும் சிங்க்ரோஸ் கூறுகள் உள்ளிட்டவையும் சைக்கிளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் டாப்-ஸ்பெக் ரேஸ் சைக்கிளாக இதனை மாற்றியிருக்கின்றது.

இச்சைக்கிள் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ஸ்பார்க் ஆர்சி 900 சைக்கிள் பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றிருப்பதாக கூறியுள்ளது. அந்தவகையில், உலக கோப்பை சாம்பியன் மற்றும் ஒலிம்பிக் வெற்றியாளர் என்ற பட்டத்தை அது சூடியிருக்கின்றது.

இந்த சைக்கிள்குறித்து ஸ்காட் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இந்தியாவிற்கான மேலாளர் ஜெய்மின் ஷா கூறியதாவது, "உலகம் முழுவதும் பிரீமியம் ரக சைக்கிளுக்கான தேவை உயர்ந்து வருகின்றது. உடல் நலன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சைக்கிளிங் செயல் அண்மைக் காலங்களாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. இதற்கேற்ப தகுதியான சைக்கிளையே ஸ்காட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் முன்னிறுத்தியுள்ளது" என்றார்.

இந்த சைக்கிள் தொழில்நுட்பம் மற்றும் செயல் திறன் ஆகியவற்றில் பல மடங்கு சிறந்தது என்றும் அவர் கூறினார். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் சைக்கிளுக்காக டீலர்களை அந்நிறுவனம் நிறுவியுள்ளது. இதுமட்டுமின்றி, விளையாட்டு வர்த்தகம் சார்ந்து இயங்கும் நிறுவனங்களுடனும் அது கூட்டு வைத்திருக்கின்றது.

மேலும், தனது அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக வாடிக்கையாளர்களை அது வரவேற்கத் தொடங்கியிருக்கின்றது. அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த சைக்கிள் நெடுந்தூர மற்றும் மலையேற்றங்களுக்கு உகந்த சைக்கிள் என கூறப்படுகின்றது.

அதேசமயம், பல கிமீட்டர்கள் இச்சைக்கிளை இயக்கினாலும் அதன் ஓட்டுநர் ஓய்வடைய மாட்டார் என்றும் கூறப்படுகிறது. அதற்கேற்ப பல்வேறு சிறப்பு வசதிகள் சைக்கிளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எனவேதான் இந்த சைக்கிளுக்கு உச்சபட்சமாக ரூ. 3.70 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்காட் ஸ்பார்க் ஆர்சி 900 கிராஸ் கன்ட்ரி பைக்கைத் தொடர்ந்து ஸ்காட் அட்டிக்ட் ஆர்சி வரிசையில் புதிய மிதிவண்டிகளைக் களமிறக்கவும் ஸ்காட் ஸ்பார்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த சைக்கிள் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரவிருக்கின்றது. இதனை அந்நிறுவனம் மேலாளர் ஜேமின் ஷா உறுதி செய்துள்ளார்.