ஸ்கோடா விஷன் இந்தியா மாடலின் புதிய டீசர் வெளியீடு... கார் இப்படி தான் இருக்கும்...!

விரைவில் ஆட்டோ எக்போவில் பார்வைக்காக வைக்கப்படவுள்ள விஷன் இந்தியா மாடலை வாடிக்கையாளர்களிடையே சென்றடைய செய்ய ஸ்கோடா நிறுவனம் ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த புதிய மாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு வாரங்களில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படவுள்ள இந்த கார் 4.26 மீ நீளம் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த கார் இந்திய வாடிக்கையாளர்களுக்கென்று ப்ரேத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளதால், இந்திய சந்தையில் இந்த புதிய கார் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா விஷன் இந்தியா மாடலின் புதிய டீசர் வெளியீடு... கார் இப்படி தான் இருக்கும்...!

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டாலும் விற்பனை கார்களின் தயாரிப்பு இந்த வருடத்தின் இறுதியிலோ அல்லது 2021ஆம் ஆண்டின் துவக்கத்திலோ தான் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஸ்கெட்ச் புகைப்படங்களாக இந்த டீசரில் ஸ்கோடா விஷன் இந்தியா மாடலின் முன்புறம் காட்டப்பட்டுள்ளது.

ஸ்கோடா விஷன் இந்தியா மாடலின் புதிய டீசர் வெளியீடு... கார் இப்படி தான் இருக்கும்...!

அதன்படி பார்க்கும்போது இந்த புதிய கார், அகலமான பொன்னேட், பெரிய அளவிலான க்ரில் மற்றும் முக்கியமான முன் பாகங்களை கொண்டிருப்பது தெரிய வருகிறது. இந்த புதிய டீசர் குறித்து ஸ்கோடா நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், க்ரில் பகுதியில் இந்த கார் இரட்டை-கோடுகள் போன்ற டிசைன் அமைப்பை கொண்டிருப்பதை இந்த டீசர் வெளிக்காட்டுகிறது.

ஸ்கோடா விஷன் இந்தியா மாடலின் புதிய டீசர் வெளியீடு... கார் இப்படி தான் இருக்கும்...!

இந்த இரட்டை-கோடுகள் போன்ற அமைப்பு, ஸ்கோடாவின் லோகோ, ஓவிஆர்எம்கள் மற்றும் பிளவுப்பட்ட எல்இடி ஹெட்லைட்ஸ் உள்ளிட்டவை இந்த டீசரில் ஒளியூட்டப்பட்டதாக காட்சியளிக்கிறது. காரின் முன்புறம் தான் இவ்வாறு காட்டப்பட்டுள்ளது.

ஸ்கோடா விஷன் இந்தியா மாடலின் புதிய டீசர் வெளியீடு... கார் இப்படி தான் இருக்கும்...!

மற்றப்படி காரின் உட்புறத்தில் உள்ள செண்டர் கன்சோல், அதில் உள்ள கியர் தேர்வு பொத்தான், காக்பிட் மற்றும் டேஸ்போர்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் போன்றவை டீசரில் தெளிவாக காட்டப்பட்டுள்ளன. இருக்கைகள் பார்த்தவுடனே கவரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா விஷன் இந்தியா மாடலின் புதிய டீசர் வெளியீடு... கார் இப்படி தான் இருக்கும்...!

ஸ்டேரிங்கில் பல வசதிகளை இந்த புதிய கார் கொண்டுள்ளதாக காட்டப்பட்டுள்ளது என கூறியுள்ளது. முன்புறத்தில் பிளவுப்பட்ட வடிவில் கொடுக்கப்பட்டுள்ள ஹெட்லைஸ்ட்ஸ் தான் க்ரில் பகுதியை அகலமானதாக காட்டுகிறது. பொனெட்டின் டிசைனை இந்த டீசர் மூலமாக அடையாளம் காண முடியவில்லை.

ஸ்கோடா விஷன் இந்தியா மாடலின் புதிய டீசர் வெளியீடு... கார் இப்படி தான் இருக்கும்...!

அதேபோல் ரூஃப் ரெயில்களும் காரில் கொடுக்கப்பட்டு உள்ளனவா அல்லது இல்லையா என்பதும் தெரியவில்லை. எல்இடி டிஆர்எல்கள் மற்றும் ஃபாக் விளக்குகள் தனித்தனியாக பொருத்தப்பட்டுள்ளன. காற்றை உள்வாங்கும் பகுதி மிக பெரிய அளவில் முன்புற ஸ்பாய்லருக்கு மேற்புறத்தில் உள்ளது.

ஸ்கோடா விஷன் இந்தியா மாடலின் புதிய டீசர் வெளியீடு... கார் இப்படி தான் இருக்கும்...!

பின்புறத்தில் உள்ள 3டி விளக்கு மிகவும் அழகாக உள்ளது. இந்த காரின் பின்புறத்தில் பெரும்பான்மையான டிசைன்கள் கிடைமட்டமாக இரட்டை-இரட்டையாக உள்ளன. லைட் ஸ்ட்ரிப், ஒளி எதிரொலிப்பானை காருடன் இணைக்கிறது. ஸ்கோடா என்கிற எழுத்து பின்புறத்தில் மத்தியிலும், ஸ்டேரிங் சக்கரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்கோடா விஷன் இந்தியா மாடலின் புதிய டீசர் வெளியீடு... கார் இப்படி தான் இருக்கும்...!

ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் கூட்டணியின் இந்தியா 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள இந்த கார் எம்க்யூபி ஏ0 இந்தியா என்ற ஃப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. முழுவதும் இந்திய சாலைக்கு ஏற்ற விதத்தில் இந்த புதிய கார் உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த காருக்கான விலையை எதன் அடிப்படையில் ஸ்கோடா நிறுவனம் நிர்ணயிக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 23, 2020, 19:55 [IST]
English summary
Skoda Vision India teaser video shows front grille, LED headlights
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+