ஐந்து புதிய பெயர்களை பதிவுசெய்தது ஸ்கோடா!! எதிர்காலத்தில் விற்பனைக்கு வரவுள்ளன

ஸ்கோடா இந்தியா நிறுவனம் ஐந்து புதிய பெயர்களை அதன் எதிர்கால தயாரிப்புகளுக்காக பதிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஐந்து புதிய பெயர்களை பதிவுசெய்தது ஸ்கோடா!! எதிர்காலத்தில் விற்பனைக்கு வரவுள்ளன

ஸ்கோடா பிராண்டில் இருந்து அடுத்ததாக விஷன் இன் கான்செப்ட் எஸ்யூவியின் மீது இந்திய வாடிக்கையாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். தீவிர சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வரும் இந்த எஸ்யூவி மாடலின் பெயர் அதிகாரப்பூர்வமாக அடுத்த 2021 ஜனவரி மத்தியில் வெளியிடப்படவுள்ளது.

ஐந்து புதிய பெயர்களை பதிவுசெய்தது ஸ்கோடா!! எதிர்காலத்தில் விற்பனைக்கு வரவுள்ளன

இதற்கு மத்தியில்தான் தற்போது 5 பெயர்களை ஸ்கோடா இந்தியாவில் பதிவு செய்துள்ளது. கோனர்க், கோஸ்மிக், க்ளிக், கர்மிக் மற்றும் குஷாக் என்பன இந்த ஐந்து பெயர்கள் ஆகும். ஸ்கோடா பெரும்பாலும் ‘கே'வில் ஆரம்பித்து ‘க்யூ'வில் முடியும் பெயர்களையே அதன் தயாரிப்புகளுக்கு சூட்டும்.

ஐந்து புதிய பெயர்களை பதிவுசெய்தது ஸ்கோடா!! எதிர்காலத்தில் விற்பனைக்கு வரவுள்ளன

இந்த சூத்திரம் தற்போது இந்த புதிய பெயர்களுக்கும் தொடரப்பட்டுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டாவின் எஸ்யூவி கார் விற்பனை ஆதிக்கத்தை முறியடிக்கும் நோக்கில் கொண்டுவரப்படும் இந்த பெயர்களை ஸ்கோடா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வரும் ஜனவரி 21ஆம் தேதி வெளியிடலாம்.

ஐந்து புதிய பெயர்களை பதிவுசெய்தது ஸ்கோடா!! எதிர்காலத்தில் விற்பனைக்கு வரவுள்ளன

அதனை தொடர்ந்து இவை உலகளவில் மார்ச் 21ல் காட்சிப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த ஐந்து மாடல்களின் அறிமுகம் 2021ன் இரண்டாம் பாதியில் இருக்கும். அவற்றின் டெலிவிரிகளும் அப்போதே ஆரம்பிக்கப்பட்டுவிடும் என தகவல்கள் கூறுகின்றன.

ஐந்து புதிய பெயர்களை பதிவுசெய்தது ஸ்கோடா!! எதிர்காலத்தில் விற்பனைக்கு வரவுள்ளன

இந்த ஐந்து தயாரிப்புகளில் ஒன்றான நடுத்தர-அளவு எஸ்யூவி, ஃபோக்ஸ்வேகன்-ஸ்கோடாவின் எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த எஸ்யூவியில் 2 என்ஜின் தேர்வுகள் வழங்கப்படலாம்.

ஐந்து புதிய பெயர்களை பதிவுசெய்தது ஸ்கோடா!! எதிர்காலத்தில் விற்பனைக்கு வரவுள்ளன

இதில் 1 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் அடங்குகின்றன. ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகளாக வழங்கப்பட வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, December 11, 2020, 12:03 [IST]
English summary
Skoda Car Names Trademarked
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+