ஹூண்டாய் க்ரெட்டாவின் போட்டி மாடல்... ஸ்கோடா காமிக் எஸ்யூவி கார் மீண்டும் சோதனை...
ஸ்கோடா நிறுவனம் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் காமிக் என்ற புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கிடையில் இந்த எஸ்யூவி கார் இந்தியாவில் கடந்த சில முறை சோதனையில் உட்படுத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

புனேக்கு அருகே சோதனையின்போது கண்டறியப்பட்டுள்ள இந்த காமிக் சோதனை கார் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படாமல் உள்ளது. இதனால் குறிப்பாக காரின் பின்பகுதி மிகவும் தெளிவாக மோட்டாரோய்ட்ஸ் செய்தி தளம் வெளியிட்டுள்ள இந்த ஸ்பை படங்களில் காட்சியளிக்கிறது.

ஸ்கோடா நிறுவனம் காமிக் மாடலிலும் தனது லேட்டஸ்ட் டிசைன் தத்துவத்தை தான் பின் தொடர்ந்துள்ளது. இதனால் அதன் லைன்அப்பில் மற்ற தயாரிப்புகளை கொண்டுள்ளதை போன்று அதிகளவில் இன்லைன்களை இந்த எஸ்யூவி கார் ஏற்றுள்ளது.

இந்த சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் L-வடிவிலான டெயில்லைட்கள் உடன் கூர்மையான தோற்றத்திலான பின்பகுதியை இந்த கார் பெற்றிருப்பதை வெளிக்காட்டுகின்றன. ஸ்கோடா பேட்ஜ் உடன் உள்ள பூட்-லிட் மற்றும் கருப்பு நிற க்ளாடிங் உடன் பம்பர் உள்ளிட்டவற்றையும் இந்த கார் பின்புறத்தில் கொண்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகனின் டி-ராக் மாடலுடன் எம்க்யூபி ஏ0 ப்ளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொண்டுள்ள ஸ்கோடா காமிக் எஸ்யூவி கார் சிபியூ முறையில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படவுள்ளது. இதனால் இதன் எக்ஸ்ஷோரூம் விலையை ஸ்கோடா நிறுவனம் எந்த அளவில் நிர்ணயிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சிபியூ முறையில் சந்தைக்கு கொண்டுவரப்படுவதால் இதன் மொத்தம் தோற்றம் கிட்டத்தட்ட இதன் ஐரோப்பிய வெர்சனை தான் ஒத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற இந்த எஸ்யூவி காரின் நீளம் 4,241மிமீ ஆகவும், அகலம் 1,793மிமீ ஆகவும், உயரம் 1,531மிமீ ஆகவும் உள்ளது. அங்கு காமிக் காருக்கு வீல்பேஸ் 2,651மிமீ என்ற அளவில் வழங்கப்பட்டுள்ளது.

பிளவுப்பட்ட வடிவில் எல்இடி ஹெட்லேம்ப்பை பெற்றுள்ள இதன் ஐரோப்பிய வெர்சன் காரானது முன்புறத்தில் சுற்றிலும் க்ரோம் உடன் பட்டாம்பூச்சி வடிவிலான க்ரில், மையத்தில் பெரிய ஏர் இண்டேக்குகளுடன் பம்பரையும் கொண்டுள்ளது. இயக்க ஆற்றலிற்கு இரு பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இதில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் 94 பிஎச்பி/175 என்எம் மற்றும் 113 பிஎச்பி/200 என்எம் என இரு விதமான ட்யூன்களில் வடிவமைக்கப்படுகிறது. மற்றொரு 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 148 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

காமிக் மாடலின் ஐரோப்பிய வெர்சன் யூரோ என்சிஏபி சோதனையில் ஐந்து நட்சத்திரங்களுடன் மிகவும் பாதுகாப்பான காராக அங்கு வலம் வருகிறது. இருப்பினும் இந்தியாவில் மற்ற கார்களுடன் போட்டியிடுவதற்காக சில தொழிற்நுட்பங்களை நீக்கி இதன் விலையினை ஐரோப்பிய வெர்சனை விட சற்று குறைவாக ஸ்கோடா நிறுவனம் நிர்ணயிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








