கரோக் எஸ்யூவி விலையை குறைக்க அதிரடி திட்டத்தை கையில் எடுத்த ஸ்கோடா!

கரோக் எஸ்யூவி விலையை அதிரடியாக குறைக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கரோக் எஸ்யூவி விலையை குறைக்க ஸ்கோடா புது முடிவு!

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் சிறப்பான வர்த்தகத்தை பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. இதற்காக புராஜெக்ட் 2.0 என்ற திட்டத்தின் கீழ் புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக, எஸ்யூவி கார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

கரோக் எஸ்யூவி விலையை குறைக்க ஸ்கோடா புது முடிவு!

இந்த நிலையில், அண்மையில் கரோக் என்ற அட்டகாசமான மிட்சைஸ் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. டிசைன், எஞ்சின், வசதிகள், பாதுகாப்பு அம்சங்களில் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆனால், விலை ரூ.24.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. மேலும், அதிகபட்ச வசதிகள் கொண்ட ஒரே வேரியண்ட்டாகவும் களமிறக்கப்பட்டது.

கரோக் எஸ்யூவி விலையை குறைக்க ஸ்கோடா புது முடிவு!

ஸ்கோடா கரோக் அடிப்படையில, அதே எஞ்சின் உள்ளிட்டவற்றுடன் வந்துள்ள ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு ரூ.19.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டது. ஸ்கோடா கரோக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டி ராக் ஆகிய இரண்டு மாடல்களுமே இந்தியாவில் இறக்குமதி செய்தே விற்பனை செய்யப்படுகின்றன.

கரோக் எஸ்யூவி விலையை குறைக்க ஸ்கோடா புது முடிவு!

இந்த நிலையில், சற்றே கூடுதல் சிறப்பம்சங்கள், வடிவமைப்பில் மாற்றங்கள் கொண்ட ஸ்கோடா கரோக் எஸ்யூவிக்கு ரூ.5 லட்சம் கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. எனினும், ஸ்கோடா கரோக் ஸ்டைலும், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் உள்ளதால், விலை பொருட்டாக எடுக்காமல் வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டிய சிறு நிர்பந்தம் உள்ளது.

கரோக் எஸ்யூவி விலையை குறைக்க ஸ்கோடா புது முடிவு!

இந்த நிலையில், ஸ்கோடா கரோக் விலை போட்டியாளர்களைவிட சற்று கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பது குறித்த எழுந்த விமர்சனங்களை அடுத்து, விலை குறைப்பது குறித்த திட்டங்களை ஸ்கோடா ஆட்டோ கையில் எடுத்துள்ளது.

கரோக் எஸ்யூவி விலையை குறைக்க ஸ்கோடா புது முடிவு!

இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஸாக் ஹொல்லிஸ்,"கரோக் எஸ்யூவியை இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்வதற்கான திட்டம் உள்ளது. நீண்ட கால அடிப்படையில் உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்து விற்பது சரியாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

கரோக் எஸ்யூவி விலையை குறைக்க ஸ்கோடா புது முடிவு!

இந்த நிலையில், கரோக் எஸ்யூவிக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு இருந்தால், அதனை நிச்சயம் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வற்கான திட்டத்தை கையில் எடுக்க ஸ்கோடா ஆர்வமாக உள்ளது. எனினும், கரோக் எஸ்யூவியின் விற்பனையை பொறுத்தே இது அமையும். உள்நாட்டு உற்பத்தி துவங்கினால், விலை கணிசமாக குறைய வாய்ப்பு ஏற்படும்.

கரோக் எஸ்யூவி விலையை குறைக்க ஸ்கோடா புது முடிவு!

ஸ்கோடா கரோக் எஸ்யூவியானது இந்தியாவில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் கிடைக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, June 5, 2020, 19:30 [IST]
English summary
Skoda India launched the Karoq SUV in the Indian market recently. The new Skoda Karoq is positioned as a premium five-seater SUV in the Indian market priced at Rs 24.99 lakh, ex-showroom (India).
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+